மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு
மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு | |
---|---|
மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகொமாட்டா
|
குடும்பம்: | எலாபிடே
|
பேரினம்: | கைட்ரோபிசு
|
இனம்: | பிளாட்டுரசு
|
இருசொற் பெயரீடு | |
கைட்ரோபிசு பிளாட்டுரசு லின்னேயசு, 1766 | |
மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
List
|
மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு (Yellow-bellied sea snake) என்பது அட்லாண்டிக் பெருங்கடலைத் தவிர உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல கடல் நீரில் காணப்படும் ஹைட்ரோஃபினே (கடல் பாம்புகள்) துணைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நஞ்சுள்ள பாம்பு ஆகும். பல ஆண்டுகளாக, இது மோனோடைபிக் பேரினமான பெலமிஸில் வைக்கப்பட்டது, ஆனால் அண்மைய மூலக்கூறு சான்றுகள் இது ஹைட்ரோஃபிஸ் இனத்திற்குள் இருப்பதைக் குறிக்கிறது.
பரிணாமம்
[தொகு]கடல் பாம்புகள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முன் பற்கள் கொண்ட ஆஸ்திரலேசியா நச்சுப் பாம்புகளிலிருந்து ( எலாபிடே ) பிரிந்த ஒரு ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம்க் குழு ( ஹைட்ரோஃபினே) ஆகும். [4] [5] மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு ஹைட்ரோஃபிஸ் குழுவின் ஒரு பகுதியாகும். [6]
விளக்கம்
[தொகு]மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்பு தன் பெயருக்கு ஏற்ப, மஞ்சள் நிற அடிவயிறு மற்றும் பழுப்பு நிற முதுகு என தனித்துவமான இருவண்ண வடிவத்தைக் கொண்டுள்ளது. இதனால் இதை மற்ற கடல் பாம்பு இனங்களிலிருந்து எளிதில் வேறுபடுத்தி காண இயலும். மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்புகள், பல வகையான கடல் பாம்புகளைப் போலவே, தங்கள் முழு வாழ்க்கையையும் கடலில் வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. இனச்சேர்க்கை, உண்ணுதல், குட்டிகளை பெற்றெடுத்தல் ( உள்பொரி முட்டைகள் வழியாக) போன்றவை கடலிலேயே நடக்கின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற தட்டையான உடல் மற்றும் நீச்சலுக்கு ஏற்ற துடுப்பு போன்ற வால் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[7][8] மூக்கில் கடல் நிரை தடுக்கும் வால்வு கடலில் குதிக்கும்போது தோல் வழியாக சுவாசித்தல் போன்ற தனிப் பண்புகளைக் கொண்டுள்ளது.[8][9][10] இந்த இனம் தண்ணீரின் மேற்பரப்பில் குதித்து நீந்தும்போது அதற்கு தேவைப்படும் ஆக்சிசன் தேவையில் 33% வரை தோலின் வழியாக எடுத்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது. [11] கடல் பாம்புகள் கீழ் தாடையில் ஒரு சிறப்பு உப்பு சுரப்பியைக் கொண்டுள்ளன, இது கடல் நீரில் இருந்து உப்பை வடிகட்டுவதாக நம்பப்பட்டது [12] ஆனால் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் கடல் பாம்புகள் சுத்தமான நீரை மட்டுமே குடிக்கின்றன. [13]
உருவவியல்
[தொகு]இந்த பாம்பின் உடல் தட்டையாக உள்ளது. இதன் உடலில் அறுகோண வடிவிலான மென்மையான செதில்கள் உண்டு. இதன் தலை குறுகியது, நீளமான மூக்கு கொண்டது. பாம்பின் நிறங்கள் சற்று மாறுபடலாம், ஆனால் பெரும்பாலும் உடலானது இருநிறத்தில், மேற்பகுதி கருப்பு கலந்த கருநீல பழுப்பாகவும், அடிப்பகுதி மஞ்சள் நிறமாகவும் இருக்கும். துடுப்பு போன்ற வால் பகுதியில் மஞ்சள் கருப்பு நிற பட்டைகள் காணப்படும். [14] ஆண் பாம்புகளின் மொத்த நீளம் 720 mm (28 அங்) பெண் பாம்புகள் 880 mm (35 அங்) நீளம் வரையிலும் இருக்கும். ஆண் பாம்புகளின் வால் நீளமானது 80 mm (3.1 அங்) வரையிலும், பெண் பாம்புகளின் வால் நீளம் 90 mm (3.5 அங்) வரையும் இருக்கும்.
நடத்தை
[தொகு]கடந்தகால நம்பிக்கைகளுக்கு மாறாக, கடல் பாம்புகள் உயிர்வாழ நன்நீர் தேவைப்படுகிறது. மேலும் மஞ்சள்-வயிறு கடல் பாம்பு கடல் நீரின் மேற்பரப்பில் பொழியும் மழைப்பொழிவில் குடிக்கிறது.[15] பருவகால வறட்சியின் போது இந்த இனம் 7 மாதங்கள் வரை கடுமையான நீரிழப்புடன் உயிர்வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[16]
மஞ்சள் வயிற்றுக் கடல் பாம்புகள் வெதுவெதுப்பான நீரில் உள்பொரி முட்டையால் தங்கள் உயிற்றுக்குள் குட்டிகளை பொரித்து இனப்பெருக்கம் செய்து குட்டி போடுகின்றன. இவற்றின் சிறிய வயிற்றுச் செதில்களின் காரணமாக நிலத்தில் சரியானபடி நகர இயலாது.[9] இவை திறந்த கடலின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான பெரிய கூட்டங்களாக காணப்படுகின்றன. இது இரையைப் பிடிப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம் என அறியப்பட்டது.[17] இவை கடலின் மேற்பரப்பில் அசையாமல் மிதக்கும். அப்போது அதன் அடி நிழலில் ஒங்கக வரும் மீனை வேட்டையாடும். இதனால் சட்டென்று பின்னால் திரும்பி பிடிக்கவும், இரையை பிடிக்க திடுக்கிடவைக்கும் வேகத்தில் நீந்தவும் முடியும்.[18] இந்த இனங்கள் முன்னால் மட்டுமல்லாமல் பின்னாலும் நீந்தும் அசாதாரணமான மற்றும் தனித்துவமான பண்பு கொண்டவை ஆகும்.
நஞ்சு
[தொகு]இந்த இனத்தின் நஞ்சு மற்ற கடல் பாம்புகளைப் போலவே அதிக வீரியம் மிக்கது.[19] மஞ்சள் வயிற்று கடல் பாம்பு நஞ்சில் பல்வேறு நரம்புநச்சு மற்றும் இரண்டு ஐசோடாக்சின்கள் உள்ளன.[20] இதை சீண்டினால் ஒழிய கடிக்காது. பெருமாலும் கடிக்கும்போது நஞ்சை செலுத்தாது. என்பதால் இது ஆபத்தற்ற கடல் பாம்பாக கருதப்படுகிறது. இரைமீன்களை கடித்து அவற்றை மயக்கமடைய செய்து இது உண்ணும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guinea, M.; Lukoschek, V.; Cogger, H.; Rasmussen, A.; Murphy, J.; Lane, A.; Sanders, K.; Lobo, A. et al. (2017). "Hydrophis platurus". IUCN Red List of Threatened Species 2010: e.T176738A115883818. https://www.iucnredlist.org/species/176738/115883818.
- ↑ Boulenger, G.A. 1896. Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the Colubridæ (Opisthoglyphæ and Proteroglyphæ)... Trustees of the British Museum (Natural History). London. pp. 266–268.
- ↑ The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Lukoschek, Vimoksalehi; Keogh, J. Scott (2006-11-01). "Molecular phylogeny of sea snakes reveals a rapidly diverged adaptive radiation" (in en). Biological Journal of the Linnean Society 89 (3): 523–539. doi:10.1111/j.1095-8312.2006.00691.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-8312.
- ↑ Pyron, R. Alexander; Burbrink, Frank T.; Colli, Guarino R.; de Oca, Adrian Nieto Montes; Vitt, Laurie J.; Kuczynski, Caitlin A.; Wiens, John J. (2011-02-01). "The phylogeny of advanced snakes (Colubroidea), with discovery of a new subfamily and comparison of support methods for likelihood trees". Molecular Phylogenetics and Evolution 58 (2): 329–342. doi:10.1016/j.ympev.2010.11.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-9513. பப்மெட்:21074626.
- ↑ Sanders, Kate L.; Lee, Michael S. Y.; Mumpuni; Bertozzi, Terry; Rasmussen, Arne R. (2013-03-01). "Multilocus phylogeny and recent rapid radiation of the viviparous sea snakes (Elapidae: Hydrophiinae)". Molecular Phylogenetics and Evolution 66 (3): 575–591. doi:10.1016/j.ympev.2012.09.021. பப்மெட்:23026811.
- ↑ Sanders, Kate L.; Rasmussen, Arne R.; Elmberg, Johan (2012-08-01). "Independent Innovation in the Evolution of Paddle-Shaped Tails in Viviparous Sea Snakes (Elapidae: Hydrophiinae)" (in en). Integrative and Comparative Biology 52 (2): 311–320. doi:10.1093/icb/ics066. பன்னாட்டுத் தர தொடர் எண்:1540-7063. பப்மெட்:22634358. http://icb.oxfordjournals.org/content/52/2/311.
- ↑ 8.0 8.1 Aubret, F.; Shine, R. (2008-04-01). "The origin of evolutionary innovations: locomotor consequences of tail shape in aquatic snakes" (in en). Functional Ecology 22 (2): 317–322. doi:10.1111/j.1365-2435.2007.01359.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1365-2435.
- ↑ 9.0 9.1 Brischoux, François; Shine, Richard (2011-05-01). "Morphological adaptations to marine life in snakes". Journal of Morphology 272 (5): 566–572. doi:10.1002/jmor.10933. பன்னாட்டுத் தர தொடர் எண்:1097-4687. பப்மெட்:21337377. https://semanticscholar.org/paper/bf779767fcbb3c2e11d677e4c8af9da6e707c1e9.
- ↑ Seymour, Roger S. (1974-08-09). "How sea snakes may avoid the bends" (in en). Nature 250 (5466): 489–490. doi:10.1038/250489a0. பப்மெட்:4469599. Bibcode: 1974Natur.250..489S.
- ↑ Graham, J. B. (1974-07-01). "Aquatic respiration in the sea snake Pelamis platurus". Respiration Physiology 21 (1): 1–7. doi:10.1016/0034-5687(74)90002-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0034-5687. பப்மெட்:4846936.
- ↑ Dunson, William A.; Packer, Randall K.; Dunson, Margaret K. (1971-01-01). "Sea Snakes: An Unusual Salt Gland under the Tongue". Science 173 (3995): 437–441. doi:10.1126/science.173.3995.437. பப்மெட்:17770448. Bibcode: 1971Sci...173..437D.
- ↑ "The Sad Tale of the Thirsty, Dehydrated Sea Snake". Phenomena. 18 March 2014.
- ↑ (M.A. Smith, 1943: 476–477, gives more complete descriptions of the color pattern variants).
- ↑ Lillywhite, Harvey B.; Brischoux, François; Sheehy, Coleman M.; Pfaller, Joseph B. (2012-08-01). "Dehydration and drinking responses in a pelagic sea snake". Integrative and Comparative Biology 52 (2): 227–234. doi:10.1093/icb/ics039. பன்னாட்டுத் தர தொடர் எண்:1557-7023. பப்மெட்:22510231. https://archive.org/details/sim_integrative-and-comparative-biology_2012-08_52_2/page/227.
- ↑ Lillywhite, Harvey B.; Sheehy, Coleman M.; Brischoux, François; Grech, Alana (2014-05-07). "Pelagic sea snakes dehydrate at sea" (in en). Proceedings of the Royal Society of London B: Biological Sciences 281 (1782): 20140119. doi:10.1098/rspb.2014.0119. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8452. பப்மெட்:24648228.
- ↑ Brischoux, François; Lillywhite, Harvey B. (2011-06-14). "Light- and flotsam-dependent 'float-and-wait' foraging by pelagic sea snakes (Pelamis platurus)" (in en). Marine Biology 158 (10): 2343–2347. doi:10.1007/s00227-011-1738-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-3162.
- ↑ Heatwole, Harold (1993). Fauna of Australia: Family Hydrophiinae. Canberra: AGPS. p. 15.
- ↑ "SnakeBiteTemplate3.pmd" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mori, Nobuhiro & Ishizaki, Hiroyuki & Tu, Anthony. (1989). "Isolation and Characterization of Pelamis platurus (Yellow-bellied Sea Snake) Postsynaptic Isoneurotoxin". The Journal of Pharmacy and Pharmacology. 41. 331-4. 10.1111/j.2042-7158.1989.tb06466.x.