நச்சுப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நச்சுப் பாம்புகள் பாம்பின் ஒரு வகையாகும், இவை நச்சினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை, இது தனது நச்சுப்பற்களால் இரைவிலங்கினுள் நச்சினை செலுத்தி அதன் நகர்வை தடைசெய்து கொன்று இரையாக்கிக்கொள்கிறது , மேலும் எதிரிவிலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் நச்சுப்பல்லினை பயன்படுத்துகிறது. பெரும்பாலான நச்சுப் பாம்புகள் எலப்பிடெ, வைபிரிடெ, அட்ராக்டாசுப்பிடெ குடும்ப வகையினதாகவும் சில நச்சுப்பாம்புகள் மட்டும் கொலுபிரிடெ குடும்பத்தைச் சார்ந்ததாகவும் உள்ளன.மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வகைப் பாம்புகளின் நச்சின் மரண வீரியக் குறியீடு எல்டி50.

எல்டி50 அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் காணப்படும் உலகின் மிக வீரிய நச்சுப்பாம்பு, inland taipan

பரிணாம வளர்ச்சி[தொகு]

நச்சுப் பாம்புகளின் பரிணாம வரலாறு இரண்டரை கோடி (25 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.[1] உண்மையில் பாம்பு நச்சு என்பது மாற்றமடைந்த உமிழ்நீராகும். இந்த நச்சு இரையைக் கொன்று அதன் இயக்கத்தை தடை செய்யவும் எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் உயர் சிறப்படைந்த உள்ளீடற்ற பல்லின் வழியே இலக்கு விலங்கின் தோல், தசைகளை துளைத்துக்கொண்டு இரத்த நாளத்திற்குள் பீச்சுகிறது.

வகைப்பாடு[தொகு]

நச்சுப் பாம்புகளுக்கென தனித்த அல்லது சிறப்பு வகைப்பாடு இல்லை. இவ்வினங்கள் பல குடும்பங்களிலும் பரவலாக காணப்படுகிறது. இது பரிணாம வளர்ச்சியின் விளைவாக,

குடும்பம் விவரம்
அட்ராக்டாசுப்பிடெ (atractaspidids) பொந்துக் கட்டுவிரியன், மச்ச விரியன்,குத்துவாள் தலைப்பாம்பு
கொலுபிரிடெ (colubrids) பெரும்பாலும் ஆபத்தில்லாதவை,ஆனால் இதில் ஐந்து இனங்கள் மனித இறப்பை ஏற்படுத்துகின்றன (Dispholidus typus)
எலப்பிடெ (elapids) கடல்பாம்புகள், நாக பாம்பு வகைகளான ராஜநாகம் நல்ல பாம்பு மாம்பா எனப்படும் ஆப்பிரிக்க பாம்பு, பவளப்பாறை பாம்புகள்
வைப்பிரிடெ (viperids) பெரும்பாலான கட்டுவிரியன் வகைகள், சங்கிலிக்கருப்பன் அல்லது கிலுகிலுப்பை பாம்பு (rattlesnake)

சொற்பிறப்பு[தொகு]

அபாயம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சுப்_பாம்பு&oldid=2322906" இருந்து மீள்விக்கப்பட்டது