மஞ்சள் நெற்றி மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் நெற்றி மரங்கொத்தி
Yellow crowned woodpecker.jpg
Male at தடோபா தேசியப் பூங்கா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பிசிபார்மிசு
குடும்பம்: பிசியிடே
சிற்றினம்: டெண்ட்ரோபிசினி
பேரினம்: லெயோபிகசு
போனாபர்தே, 1854
இனம்: லெ. மகாராட்டென்சிசு
இருசொற் பெயரீடு
லெயோபிகசு மகாராட்டென்சிசு
(லாந்தம், 1801)
Dendrocopos mahrattensis distribution map.png
வேறு பெயர்கள்

டெண்ட்ரோபோபசு மகாராட்டென்சிசு

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (Yellow-fronted Pied Woodpecker)(லெயோபிகசு மகாராட்டென்சிசு) அல்லது மகரட்டா மரங்கொத்தி என்பது இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் சிறிய மரங்கொத்தி சிற்றினமாகும். இது இலியோபிகசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி முதலில் 1801ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியல் வல்லுனரான ஜான் லாதம் என்பவரால் பைகசு மகாராட்டென்சிசு (Picus mahrattensis) என்ற இருசொல் பெயரில் விவரிக்கப்பட்டது. பின்னர் 1854ஆம் ஆண்டில் பிரெஞ்சு பறவையியல் வல்லுனரான சார்லஸ் லூசியன் போனபார்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட லெயோபிகசு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரே இனம் இதுவாகும். மகாராட்டென்சிசு என்ற குறிப்பிட்ட அடைமொழி இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியான மராட்டாவிலிருந்து வந்தது. லெயோபிகசு என்ற பேரினப் பெயர் பண்டைக் கிரேக்க சொல்லான லியோசு அதாவது "மென்மையான" அல்லது "தாடி இல்லாத" பொருள்படும் சொல்லிலிருந்து தோன்றியது. பிகோசு என்றால் "மரங்கொத்தி" என்று பொருள்படும். மஞ்சள் நெற்றி மரங்கொத்தி டென்ட்ரோகோப்ட்சு பேரினத்தில் உள்ள மரங்கொத்திகளுடன் நெருங்கிய தொடர்புடையது.

உடலமைப்பு[தொகு]

இதனுடைய உடல் நீளம் 18 செ.மீ. ஆகும். குங்குமச் சிவப்பான உச்சிக் கொண்டையையும் மஞ்சள் நெற்றியையும் உடைய பழுப்பு நிறம் தோய்ந்த இதன் கருப்பு உடலில் வெள்ளைத் திட்டுக்கள் ஒழுங்கின்றிக் காணப்படும். மோவாய், தொண்டை, முன்கழுத்து ஆகியன வெண்மை நிறத்திலும் மார்பும் வயிறும் செம்மஞ்சளாகப் பழுப்புக் கீற்றுக்களுடன் காணப்படும். அடிவயிறு பளிச்சென்று குங்குமச் சிவப்பு நிறமாக இருக்கும்.

காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]

தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரை சார்ந்த கரை ஓரப் பகுதிகள் தவிர எங்கும் ஓரளவு தாராளமாகக் காணக் கூடியது. கள்ளிப் புதர்கள், சாலை ஓர மரங்கள் கருவைக் காடுகள், மாந்தோப்புகள் ஆகியவற்றில் திரியும். இது பசுமைமாறாக் காடுகளை விரும்புவதில்லை. புழு பூச்சிகளைத் தேடி உண்ணும் பறவைகளின் கூட்டத்தோடு கலந்து மரத்துக்கு மரம் தாவி பட்டைகளை அலகால் தட்டி, வெளிவரும் பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் பிடித்துத் தின்னும். கிளிக் கிளிக் என கீச்சுக் குரலில் கத்தும்.[2]

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் மே வரை மா வன்னி நுழைவாயிலுள்ள வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மஞ்சள் நெற்றி மரங்கொத்தி". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2016. 2 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள். க. ரத்னம். மெய்யப்பன் பதிப்பகம். பக்கம் எண் 96