மஞ்சள் காது கொண்டைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் காது கொண்டைக்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைக்னோனோடசு
இனம்:
P. penicillatus
இருசொற் பெயரீடு
Pycnonotus penicillatus
பிளைத், 1851
வேறு பெயர்கள்
  • Kelaartia penicillata
  • Pycnonotus penicillata

மஞ்சள் காது கொண்டைக்குருவி (பைக்னோனோடசு பென்சிலாடசு) என்பது பாசரைன் பறவைகளின் கொண்டைக்குருவி குடும்பத்தில் உள்ள பறவைச் சிற்றினமாகும். இது இலங்கையின் மலைப்பகுதிகளில் வாழும் அகணிய உயிரி ஆகும். இதன் பொதுவான பெயர் கொண்டைக்குருவியின் மாற்றுப் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

மஞ்சள் காது கொண்டைக்குருவி முன்பு கெலார்ட்டியா என்ற ஒற்றைச் சிற்றினப் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. இது மருத்துவர் ஈ. எப். கெலார்ட்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது. மஞ்சள் காது கொண்டைக்குருவிக்கான மாற்றுப் பெயர்களில் சிலோன் கொண்டைக்குருவி, இலங்கை கொண்டைக்குருவி மற்றும் மஞ்சள்-குஞ்ச கொண்டைக்குருவி ஆகியவை அடங்கும்.

பரவல்[தொகு]

மஞ்சள் காது-கொண்டைக்குருவி இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது இலங்கையில் காணப்படும் புல்புல்களில் மிகவும் பொதுவானது. இது காடு மற்றும் மரங்கள் நிறைந்த விவசாய நிலங்களின் பறவை ஆகும். இதன் வரம்பு கட்டுப்பட்டதாக இருந்தபோதிலும், இது நுவரெலியாவில் உள்ள ஓட்டன் சமவெளி தேசிய வனம், பிதுருதலாகல சிகரம், நிலவு சமவெளி மற்றும் விக்டோரியா பூங்கா போன்ற இடங்களில் மிகவும் எளிதாகக் காணப்படுகிறது மற்றும் பாறை மலைகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மஞ்சள் காது கொண்டைக்குருவி சுமார் 20 cm (7.9 அங்) நீளமும், நீண்ட வாலும் கொண்டது. இது ஆலிவ் மேல் பகுதிகளையும் மஞ்சள் நிறத்தின் கீழ்ப் பகுதிகளையும் கொண்டுள்ளது. தலையின் கிரீடம் சாம்பல் நிறமானது. மேலும் மஞ்சள் காது குஞ்சம் மற்றும் கண்ணுக்குக் கீழே ஒரு மஞ்சள் திட்டு உள்ளது. கண்ணுக்கு எதிரே ஒரு வெள்ளைக் குஞ்சம் உள்ளது. தொண்டை வெண்மையாக இருக்கும்.

ஆண் பெண் பறவைகள் இறகுகளில் ஒத்தவை. ஆனால் இளம் பறவைகள் முதிர்வடைந்த பறவைகளை விட மந்தமானவை.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

மஞ்சள் காது கொண்டைக்குருவி புதரில் கூடு ஒன்றில் பொதுவாக இரண்டு முட்டைகளுடன் கூடு கட்டும். இவை பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்கின்றன. கூடுகள் திறந்த மற்றும் கோப்பை வடிவில் இருக்கும். வேர்கள் மற்றும் லைகன் போன்ற பொருட்கள் கூடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இனப்பெருக்க காலம் பொதுவாகப் பிப்ரவரி-மே மற்றும் ஆகத்து-அக்டோபர் மாதங்களில் நிகழ்கிறது.

கலாச்சார குறிப்புகள்[தொகு]

10- ரூபாய் இலங்கை தபால்தலையில் மஞ்சள் காது கொண்டைக்குருவி படம் அச்சிடப்பட்டது.[2] மேலும் இலங்கையின் புதிய ரூபாயில் ரூ5000 தாளிலும் அச்சிடப்பட்டுள்ளது.[3]

படங்கள்[தொகு]

  1. BirdLife International (2021). "Pycnonotus penicillatus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2021: e.T22712722A185455076. https://www.iucnredlist.org/species/22712722/185455076. பார்த்த நாள்: 15 January 2018. 
  2. "Birds on stamps: Sri Lanka".
  3. "Central Bank of Sri Lanka".

மேற்கோள்கள்[தொகு]