மச்ரூக் சுல்தான்புரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்ரூக் சுல்தான்புரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அசுரர் உல் அசன் கான்[1]
பிறப்பு(1919-10-01)1 அக்டோபர் 1919
சுல்தான்பூர், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 மே 2000(2000-05-24) (அகவை 80)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில்(கள்)கவிஞர், பாடலாசிரியர், திரைப்படம் [2]
இசைத்துறையில்1946–2000

அசுரர் உல் அசன் கான் ( Asrar ul Hassan Khan ) (1 அக்டோபர் 1919 - 24 மே 2000), மச்ரூக் சுல்தான்புரி என்று அழைக்கப்படும் இவர், இந்தி மொழித் திரைப்படத்துறையில் பணிபுரிந்த ஓர் உருது கவிஞரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். [1] இவர் பல இந்தி திரைப்பட ஒலிப்பதிவுகளுக்கு இந்துசுத்தானி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.[3] [4]

1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் இந்தியத் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த இவர், முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார். [5] [6] இவர் 20 ஆம் நூற்றாண்டின் இலக்கியத்தின் மிகச்சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[7]

தொழில் வாழ்க்கை[தொகு]

ஆறு தசாப்தங்கள் நீடித்த இவரது வாழ்க்கையில், இவர் பல இசை இயக்குனர்களுடன் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டில் தோஸ்தி திரைப்படத்தில் “சஹுங்கா மைன் துஜே” என்ற பாடலுக்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருதையும், இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருதை பெற்றவர்.[2] 1980கள் மற்றும் 1990களில், ஆனந்த்-மிலிந்துடன் இவரது பெரும்பாலான பணிகள் இருந்தன. இவர்களின் குறிப்பிடத்தக்க கூட்டணியில் கயாமத் சே கயாமத் தக், லால் துப்பட்டா மல்மல் கா, லவ் மற்றும் தஹெக் போன்ற பல படங்கள் அடங்கும்

ஜதின்-லலித் இசையமைத்த முதல் படமான ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் யாரா தில்தாரா போன்றவற்றிற்கும் இவர் பாடல் வரிகளை எழுதினார். 1949 ஆம் ஆண்டில் இவரது கவிதைகள் அரசியல் சார்பாக இருந்த காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்த இவர் குரு தத் இயக்கத்தில் வெளியான பாஸ் (1953) படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[8]

அனில் பிஸ்வாஸ், நௌசாத், குலாம் முகமது, மதன் மோகன், ஓ. பி. நய்யார், ரோசான், சலில் சௌதுரி, சித்ரகுப்த், என். தத்தா, கல்யாண்ஜி-ஆனந்த்ஜி, இலட்சுமிகாந்த்-பியாரேலால் மற்றும் ராகுல் தேவ் பர்மன் போன்ற பல இசை இயக்குநர்களுடன் மச்ரூக் சுல்தான்புரி பணியாற்றியுள்ளார்.[9]

அரசியல் சார்பு[தொகு]

ஷாஜஹான் (1946) திரைப்படத்தைத் தொடர்ந்து எஸ். பாசிலின் மெஹந்தி, டோலி (1947), மெகபூப் கானின் அந்தாசு (1949) மற்றும் சாகித் லத்தீப்பின் அர்சூ போன்ற படங்களில் பாடல்வரிகளை எழுதினார். மச்ரூக் தன்னை ஒரு பாடலாசிரியராக நிலைநிறுத்திக் கொண்டாலும் இவரது இடதுசாரி ஆதரவுக் கொள்கை இவரை சிக்கலில் சிக்க வைத்தது. இவரது அரசு எதிர்ப்புக் கவிதைகளால் அரசாங்கம் மகிழ்வடையவில்லை. மேலும் இவர் 1949 இல் பல்ராஜ் சாஹனீ போன்ற மற்ற இடதுசாரிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 2வது மாநாட்டிற்குப் பிறகு, பொதுவுடைமைவாதிகல் இந்திய அரசுக்கு எதிராக புரட்சி நடத்த முடிவு செய்த பின்னர் நாடு தழுவிய அளவில் கைது செய்யப்பட்ட போது இவரும் கைது செய்யப்பட்டார். [10] மன்னிப்பு கேட்க மறுத்த மச்ரூக் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.[8]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

இந்தியாவின் 2013 அஞ்சல் தலையில் சுல்தான்புரி

மச்ரூக் 1950கள் முழுவதும் பிரபலமான படங்களுக்கு பல பாடல் வரிகளை எழுதியுள்ளார். பைஸ் அகமது பைஸ், குமார் பாரபங்க்வி ஆகியோருடன் மச்ரூக் மிகவும் குறிப்பிடத்தக்க கசல் எழுத்தாளராகக் கருதப்பட்டார்.[11]

1965 இல் தோஸ்தி படத்தில் இடம்பெற்ற "“சஹுங்கா மைன் துஜே சாஞ்ச் சவேரே” என்ற பாடலுக்காக மச்ரூக் சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். மேலும், 1993 இல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்ற இவர்[2] மதிப்புமிக்க இந்த விருதை வென்ற முதல் பாடலாசிரியர் ஆனார். [3] [1]

இறப்பு[தொகு]

நுரையீரல் அழற்சியால், கடுமையான பாதிக்கப்பட்ட மச்ரூக் சுல்தான்புரி 24 மே 2000 அன்று மும்பையில் தனது 80 வயதில் இறந்தார்.[3] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Majrooh Sultanpuri Profile". Archived from the original on 17 March 2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 "Hindi film songwriter dies". BBC News. 25 May 2000. http://news.bbc.co.uk/2/hi/south_asia/763291.stm. 
  3. 3.0 3.1 3.2 Majrooh Sultanpuri on Encyclopaedia of Hindi Cinema (pages 137, 285, 286, 289, 299, 501, 583). 
  4. Global Bollywood: Travels of Hindi Song and Dance. https://books.google.com/books?id=19JBf6oDOy0C&pg=PA23. 
  5. Pauwels, Heidi R. M. (2008). Indian Literature and Popular Cinema. Routledge. பக். 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-44741-6. 
  6. Zaheer, Sajjad (2006). The Light. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-547155-5. 
  7. Majrooh Sultanpuri Profile urdupoetry.com website, Retrieved 11 May 2018
  8. 8.0 8.1 "The Lyrical Leftist: Remembering Majrooh Sultanpuri at 100".
  9. R. D. Burman
  10. Communism in India. https://books.google.com/books?id=PAFBW743Bi4C&pg=PA229. 
  11. "Film songs of Majrooh Sultanpuri". saregama.com. {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்ரூக்_சுல்தான்புரி&oldid=3870205" இலிருந்து மீள்விக்கப்பட்டது