பைஸ் அகமது பைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைஸ் அகமது பைஸ்

பைஸ்அகமது பைஸ்(Faiz Ahmad Faiz) ( உருது: فَیض احمد فَیض ), (13 பிப்ரவரி 1911 - 20 நவம்பர் 1984) என்பவர் பாகிஸ்தானின் மார்க்சிய சிந்தனையாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் உருது மொழியின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

இவர் இலக்கிய நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் லெனின் அமைதி பரிசை வென்றார். மேலும் பல விருதுகளை வென்றுள்ளார்.[1]

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் இவர் 1921 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அங்குள்ள அரசு கல்லூரி மற்றும் ஓரியண்டல் கல்லூரியில் பயின்றார் .[2] இவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலங்களில் இவரின் பணியினைப் பாராட்டும் விதமாக பிரிட்டிஷ் பேரரசு பதக்க விருது பெற்றார் . பாக்கிஸ்தானின் சுதந்திரத்திற்குப் பிறகு இவர் பாக்கிஸ்தான் டைம்ஸின் ஆசிரியராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். லியாகத் அலி கானின் நிர்வாகத்தை கவிழ்க்கவும், அதற்கு பதிலாக ஒரு இடதுசாரி அரசாங்கத்தை மாற்றவும் சதித்திட்டம் தீட்டியவர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டதால் இவர் 1951 ஆம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

நான்கு ஆண்டுகள் இவர் சிறையில் இருந்தார். விடுதலை ஆன பிறகு இவர் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் உறுப்பினர் ஆனார். அங்குள்ள உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க உறுப்பினராகக் கருதப்பட்டார்.

இவர் 1962 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனால் லெனின் அமைதி பரிசைப் பெற்றார். இவரது எழுத்துக்களில் பாகிஸ்தானின் இலக்கியம் மற்றும் கலைகளின் தாக்கம் அதிக இருந்தது. 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு நாட்டின் மிக உயர்ந்த விருதான நிஷான்-இ-இம்தியாஸை இவருக்கு வழங்கப்பட்டன.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பைஸ்அஹ்மத் பைஸ் 1911 பிப்ரவரி 13 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபின் மாவட்டமான நரோவல், காலா காதரில் பிறந்தார். (தற்போது இந்தப் பகுதி பைஸ் நகர் என அழைக்கப்படுகிறது.) இவர் ஒரு ஜாட் குடும்பத்தில் பிறந்தார் [4][5] இவர் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட ஒரு கல்வி கற்ற சான்றோர்கள் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் வீட்டில் பெரும்பாலும் இவரின் மாகாணத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வினை மேற்கொள்வதற்காக அந்தப் பகுதியில் உள்ள சான்றோர்கள் கூடி விவாதிப்பது வழக்கமாக இருந்துள்ளது [5] அவரது தந்தை சுல்தான் முஹம்மது கான் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் ஆவார். இவரின் தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார். இம்பீரியல் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டுள்ளார்.[5]

கல்வி[தொகு]

அவரது குடும்பம் பக்தியுள்ள முஸ்லிம்களாக இருந்தன. ஆனாலும் இவர் இஸ்லாத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டார். இவர் அரபு, பாரசீக, உருது மொழி மற்றும் குர்ஆனைக் கற்றுக்கொண்டார்.[5] மேலும் இவர் ஒரு பாகிஸ்தான் தேசியவாதியாகவும் இருந்தார், இவர் "உங்கள் இதயங்களை தூய்மைப்படுத்துங்கள் அப்போது தான் நீங்கள் நாட்டை காப்பாற்ற முடியும். என்று அடிக்கடி கூறியுள்ளார். இவரின் மகன் சிறந்த முஸ்லீம் கல்வியாளரான சர் சையத் அகமது கானினைப் பின்பற்ற வேண்டும் என நினைத்ததனால் இவரினை பள்ளியில் இருந்து விலகி ஸ்காட்ச் மிஷன் பள்ளியில் சேர்த்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Faiz, Faiz Ahmed (3 January 2007). "Faiz Ahmed Faiz". மூல முகவரியிலிருந்து 16 June 2017 அன்று பரணிடப்பட்டது.
  2. Faiz, Faiz Ahmed (3 January 2007). "Faiz Ahmed Faiz" (en). மூல முகவரியிலிருந்து 2 September 2017 அன்று பரணிடப்பட்டது.
  3. "Faiz Ahmed Faiz: Life and poetry" (in en-US). Dawn. 17 February 2011. https://www.dawn.com/news/606752. 
  4. "His family". Dawn. 11 February 2011. http://www.dawn.com/news/605627/his-family. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Faiz Ahmad Faiz". Official website of Faiz Ahmad Faiz. மூல முகவரியிலிருந்து 3 April 2012 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைஸ்_அகமது_பைஸ்&oldid=3024655" இருந்து மீள்விக்கப்பட்டது