மகேசுவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேசுவரம்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி மாவட்டம்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,79,201
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரத் இராட்டிர சமிதி

மகேசுவரம் சட்டமன்றத் தொகுதி (Maheshwaram Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். இது சேவெள்ள மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது தெலங்காணா இராட்டிர சமிதியைச் சேர்ந்த சபிதா இந்திரா ரெட்டி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2018ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் உள்ளார்.

கண்ணோட்டம்[தொகு]

மகேசுவரம் சட்டமன்றத் தொகுதி 2002ஆம் ஆண்டின் எல்லை நிர்ணயச் சட்டத்தின்படி 2009 பொதுத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு புதிய தொகுதியாகும். சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்/வார்டு
மகேசுவரம்
கண்டுகூர்
சரூர்நகர் (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 சபீதா இந்திரா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 தெகலா கிருஷ்ணா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2018 சபிதா இந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2023[1] பாரத் இராட்டிர சமிதி

தேர்தல் முடிவுகள்[தொகு]

தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல், 2023[தொகு]

2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: மகேசுவரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. சபிதா இந்திர ரெட்டி 1,25,578 40.99 5.80
பா.ஜ.க அந்தேலே சிறீராமலு யாதவ் 99,391 32.45 16.00
காங்கிரசு கிச்சனாகிரி லட்சுமண ரெட்டி 70,657 23.07 17.76
நோட்டா நோட்டா 2,031 0.66 0.24
வாக்கு வித்தியாசம் 26,187 8.54
பதிவான வாக்குகள் 3,06,334
பா.இரா.ச. gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]