சபிதா இந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபிதா இந்திர ரெட்டி
கல்வி அமைச்சர்
தெலுங்கானா அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
8 செப்டம்பர் 2019
உள்துறை, சிறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்.
ஆந்திர அரசு
பதவியில்
2009–2013
செவெல்லா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
சுரங்க மற்றும் புவியியல் அமைச்சர்.
ஆந்திர அரசு
பதவியில்
2008–2009
மகேஸ்வரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 திசம்பர் 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மே 1963 (1963-05-05) (அகவை 61)
பாஸ்பள்ளி நகரம், தந்தூர்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிதெலுங்கானா ராஷ்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மறைந்த பி. இந்திர ரெட்டி
பிள்ளைகள்3
வாழிடம்(s)ஐதராபாத்து, இந்தியா

பட்லோல்லா சபிதா இந்திர ரெட்டி (Sabitha Indra Reddy) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய தெலங்காணாவில் கல்வி அமைச்சராக உள்ளார். இவர் மகேஸ்வரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி பதவி வகித்த துறையானது இவருக்கு ஒதுக்கப்பட்டது. இவர் தெலங்காண அரசின் முதல் பெண் அமைச்சராவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சபிதா மே 5, 1963 அன்று தந்தூரில் ஜி. மஹிபால் ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார். இளங்கலை அறிவியல் வரை தனது கல்வியை முடித்த இவர், செவெல்லா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை ஆந்திராவின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

என். டி. ராமராவ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பி. இந்திர ரெட்டியை (1954-2000) இவர் திருமணம் செய்து கொண்டார். இந்தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்திர ரெட்டி தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான தலைவர். சாலை விபத்தில் தனது கணவர் இறந்த பின் சபிதா அரசியலில் இறங்க வேண்டியிருந்தது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சபிதா, முந்தைய அரசாங்கத்தில் சுரங்க மற்றும் புவியியல் அமைச்சர் பதவியை வகித்தார். இவர் தெலங்காணா மாநிலத்தின் முதல் பெண் உள்துறை அமைச்சர் ஆவார்.[2] இவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செவெல்லா தொகுதியில் இரண்டு முறையும், மகேஸ்வரம் தொகுதியில் இரண்டு முறையும் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
  2. "Sabitha, first A.P. woman Home Minister". The Hindu. 27 May 2009. Archived from the original on 15 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபிதா_இந்திர_ரெட்டி&oldid=3876343" இலிருந்து மீள்விக்கப்பட்டது