போர்னிய குழி விரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னிய குழி விரியன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வைப்பரிடே
பேரினம்:
இனம்:
கி. போர்னென்சிசு
இருசொற் பெயரீடு
கிராசுபிடோசெபாலசு போர்னென்சிசு
(பீட்டர்சு, 1872)
வேறு பெயர்கள்
  • அட்ரோபாப்பிசு போர்னென்சிசு
    பீட்டர்சு, 1872
  • போத்ராப்சு சாண்டாகானென்சிசு
    லித் டெ ஜெடே ஜூடெ, 1893
  • லாசெசிசு போர்னென்சிசு
    – பெளலஞ்சர், 1896
  • திரிமெர்சுரசு போர்னென்சிசு
    – பார்பெளர், 1912[2]
  • திரிமெர்சுரசு (கிராசபெடோசெப்பாலசு) போர்னென்சிசு – டேவிட் மற்றும் பலர் 2011[3]

போர்னியோ குழி விரியன்[4] (Bornean pit viper)(கிராசுபிடோசெபாலசு போர்னென்சிசு) என்பது போர்னியோ தீவில் மட்டும் காணப்படும் ஓர் அகணிய உயிரி ஆகும். இது நச்சுப்பாம்பு வகையில் குழி விரியன் சிற்றினமாகும்.[1] இந்த சிற்றினத்தின் கீழ் எந்த துணையினமும் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[3][5]

விளக்கம்[தொகு]

இந்த பாம்பின் செதிலமைப்பில் 19-21 வரிசைகளின் நடுப்பகுதியில் உள்ள முதுகுச் செதில்களும், 152-180 வயிற்றுப்புறச் செதில்களும், பிளவுபடாதா குத அளவுகள், 45-58 பிளவுடன் கூடிய வாலடிச் செதில்கள் மற்றும் 8-11 மேலுதடு மேற் செதில்களும் அடங்கும்.[4]

இதன் நிறம் மாறுபடும். அடர் பழுப்பு நிற சேணங்களுடன் பழுப்பு நிறமாகவோ அல்லது சில அடர் அடையாளங்களுடன் வெளிர் பழுப்பு நிறமாகவோ அல்லது இருண்ட அடையாளங்களுடன் பிரகாசமான மஞ்சள் நிறத்திலோ காணப்படலாம்.

முதிர்ச்சியடைந்த பாம்புகள் 83 cm (33 அங்) நீளம் வரை வளரலாம்.[6]

புவியியல் வரம்பு[தொகு]

போர்னியோ தீவிலும் (புரூணை, கலிமந்தான், சபா, சரவாக்) நட்டுனா தீவுகளிலும் கிராசுபிடோசெபாலசு போர்னென்சிசு காணப்படுகிறது.[1]

"சரவாக்" (= சரவாக், போர்னியோ ) இதன் வகை இடமாகும்.[2]

வாழிடம்[தொகு]

கிராசுபிடோசெபாலசு போர்னென்சிசு 1,130 m (3,710 அடி) உயரத்திற்குக் கீழே உள்ள காடுகளில் காணப்படுகிறது . வால் மரக்கிளையினைப் பற்றக்கூடியதாக இருந்தாலும், முதிர்வடைந்த பாம்புகள் பொதுவாகக் காடுகளில் தரைகளிலே காணப்படும். இளவயது பாம்புகள் தாவரங்களில் காணப்படும்.[6]

உணவு[தொகு]

கிராசுபிடோசெபாலசு போர்னென்சிசு சிறிய கொறித்துண்ணிகள் மற்றும் சிறிய பறவைகளை வேட்டையாடுகிறது.[1]

இனப்பெருக்கம்[தொகு]

இந்த வகை கிராசுபிடோசெபாலசு முட்டையிடுமா அல்லது குட்டி ஈனுமா என்பது இன்னும் தெரியவில்லை.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Iskandar, D.; Vogel, G.; Auliya, M.; Das, I.; Inger, R.F. (2012). "Trimeresurus borneensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2012: e.T191943A2019169. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T191943A2019169.en. http://www.iucnredlist.org/details/191943/0. பார்த்த நாள்: 10 January 2018. 
  2. 2.0 2.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  3. 3.0 3.1 Trimeresurus borneensis at the Reptarium.cz Reptile Database. Accessed 28 July 2008.
  4. 4.0 4.1 Gumprecht A, Tillack F, Orlov NL, Captain A, Ryabov S. 2004. Asian Pit vipers. GeitjeBooks Berlin. 1st Edition. 368 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-937975-00-4.
  5. "Trimeresurus borneensis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 28 July 2008.
  6. 6.0 6.1 6.2 Das, Indraneil. 2006. A Photographic Guide to Snakes and Other Reptiles of Borneo. Ralph Curtis Books. Sanibel Island, Florida. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-061-1. (Trimeresurus borneensis, p. 57.)

மேலும் படிக்க[தொகு]

  • Peters, W. 1872. Übersicht der von den Herren M.se G. Doria und D.r O. Beccari in Sarawack auf Borneo von 1865 bis 1868 gesammelten Amphibien. Annali del Museo Civico di Storia Naturale di Genova, Series 1, 3: 27-45. ("Atropophis borneensis n. sp.", pp. 41–42.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னிய_குழி_விரியன்&oldid=3875728" இலிருந்து மீள்விக்கப்பட்டது