போர்னியோ மலைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னியோ மலைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைதானிடே
பேரினம்:
இனம்:
பை. ப்ரீடென்சுடைனி
இருசொற் பெயரீடு
பைதான் ப்ரீடென்சுடைனி
இசுடெய்ண்டாச்னர், 1880
வேறு பெயர்கள்
  • பைதான் பிரைடென்சுடைனி இசுடெய்ண்டாச்னர், 1880
  • பைதான் கர்டசு ப்ரீடென்சுடைனி
    — இசுடல், 1935
  • பைதான் கர்டசு பிரைடென்சுடைனி
    — இசுடிம்சன், 1969[2]
  • பைதான் பிரைடென்ஸ்டைனி
    கியோக், பார்கெர் & சைன், 2001[3]

போர்னியோ மலைப்பாம்பு (பைதான் ப்ரீடென்சுடைனி), பொதுவாக போர்னியோ குட்டை வால் மலைப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது பைத்தோனிடே குடும்பத்தில் உள்ள விசமற்ற பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் போர்னியோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2]

வகைப்பாட்டியல்[தொகு]

பைதான் கர்டசின் துணையினமாகக் கருதப்பட்டு சிறிது காலத்திற்கு, கியோக், பார்கர் மற்றும் சைன் (2001) மூலம் பை. பிரீடென்சுடைனி சிற்றினமாக மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.[3] இதன் குறிப்பிட்ட பெயர், ப்ரீடென்சுடைனி, போர்னியோவில் நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வனவற்றைச் சேகரித்த ஜெர்மன் மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலர் என்ரிச் ப்ரீடென்சுடைனின் நினைவாக இடப்பட்டது.[4]

விளக்கம்[தொகு]

இளம் பாம்பு
கொல்லைப்படுத்தப்பட்ட இளம் வயது பாம்பு

பை. ப்ரீடென்சுடைனி (வால் உட்பட) 2.1 மீட்டர் நீளம் வரை வளர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக உடல் எடை கொண்ட இந்த பாம்பு பொதுவாக 13.6 கிலோ கிராம் வரை வளரக்கூடியது. பொதுவாகப் பெண் பாம்புகள் ஆண் பாம்புகளை விடப் பெரியவை. நாசியில் வெப்பத்தினை உணரக்கூடிய குழிகள் பல உள்ளன. தலை அகலமாகவும் வால் குறுகியும் காணப்படுகிறது.

உடல் வண்ணமானது பொதுவாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும். இது பெரிதும் மாறுபடும். அல்பினிசத்தின் நிகழ்வுகள் எதுவும் இதுவரைப் பதிவாகவில்லை என்றாலும், ஒரு சில தனிநபர்கள் குறிப்பிடத்தக்க இலகுவான நிறத்தைக் காட்டுகின்றனர். பழுப்பு நிறத்தை விட மஞ்சள் நிறத்தில் பொதுவாகத் தோன்றும். பெரியவர்களை விட இளம் வயதினர் மிகவும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளனர். தலை பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

போர்னியோ தீவில், புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பை. பிரீடென்சுடைனி காணப்படுகிறது.[1][2] பொதுவாக, இது குறைந்த உயரத்தில், வெள்ளச் சமவெளிகளில் அல்லது சதுப்புநிலங்களின் விளிம்புகளில் காணப்படுகிறது. விவசாய நிலங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனப் பகுதிகள் பொருத்தமான வாழ்விடமாக உள்ளது.

இனப்பெருக்கம்[தொகு]

பி. பிரைடென்சுடைனி கருமுட்டை இடக்கூடியது.[3]

கொல்லைப்படுத்தல்[தொகு]

குஞ்சு பொரிக்கும் முட்டைப் பல் தெரியும்

போர்னியோ மலைப்பாம்பு பொதுவாகச் சாதுவான குணமுடையது என்ற நற்பெயருடன் ஊர்வன ஆர்வலர்களிடையே இந்த சிற்றினம் பிரபலமடைந்து வருகிறது. ஏனெனில் கொல்லைப்படுத்தப்பட்டுள்ள பாம்புகள் காட்டில் பிடிக்கப்பட்ட பாம்புகளைக் காட்டிலும் கையாள்வது எளிதானது. ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பாம்புகளும் முதலில் தோல் வர்த்தகத்திற்காகப் பிடிக்கப்பட்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Inger, R.F.; Iskandar, D.; Lilley, R.; Jenkins, H.; Das, I. (2012). "Python breitensteini". IUCN Red List of Threatened Species 2012: e.T192013A2028005. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192013A2028005.en. https://www.iucnredlist.org/species/192013/2028005. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 McDiarmid RW, Jonathan A. Campbe, T'Shaka Touré (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference. Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1893777014. 
  3. 3.0 3.1 3.2 Python breitensteini at the Reptarium.cz Reptile Database. Accessed 29 December 2015.
  4. Richard Allen "Bo" Crombet-Beolens, Michael Watkins (zoologist), Michael Grayson (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Python breitensteini, p. 38).

மேலும் படிக்க[தொகு]

  • Das I (2006). A Photographic Guide to Snakes and other Reptiles of Borneo. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-061-1. (Python breitensteini, p. 16).
  • Keogh JS, Barker DG, Shine R (2001). "Heavily Exploited but Poorly Known: Systematics and Biogeography of Commercially Harvested Pythons (Python curtus group) in Southeast Asian". Biological Journal of the Linnean Society 73: 113-129.
  • Steindachner F (1880) ("1881"). "Über eine neue Pythonart (Python Breitensteini) aus Borneo". Sitzungberichte der Kaiserlichen Akademie der Wissenschaften. Mathematisch-Naturwissenschaftliche Classe. Abtheilung I. (Vienna) 82: 267-268. (Python breitensteini, new species).

 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Python breitensteini
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னியோ_மலைப்பாம்பு&oldid=3770846" இலிருந்து மீள்விக்கப்பட்டது