உள்ளடக்கத்துக்குச் செல்

போரிஸ் ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரிசு சான்சன்
Boris Johnson
2019 ஆகத்தில் போரிசு சான்சன்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
24 சூலை 2019 – 6 செப்டம்பர் 2022
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்தெரசா மே
பின்னவர்லிஸ் டிரஸ்
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்
பதவியில்
23 சூலை 2019 – 5 செப்டம்பர் 2022
முன்னையவர்தெரசா மே
பின்னவர்லிஸ் டிரஸ்
பொதுநலவாயங்களின் தலைமைப் பொறுப்பு
பதவியில்
24 சூலை 2019 – 24 சூன் 2022
தலைவர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்தெரசா மே
பின்னவர்பால் ககாமே
வெளியுறவுத் துறை மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர்
பதவியில்
13 சூலை 2016 – 9 சூலை 2018
பிரதமர்தெரசா மே
முன்னையவர்பிலிப் ஆமண்டு
பின்னவர்செரமி கண்ட்
இலண்டன் நகர முதல்வர்
பதவியில்
4 மே 2008 – 9 மே 2016
முன்னையவர்கென் லிவிங்சுடன்
பின்னவர்சாதிக் கான்
உக்சுபிர்ட்ச், தெற்கு ரூயிசிலிப் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2015
முன்னையவர்யோன் ராண்டல்
பெரும்பான்மை7,210 (15.0%)[1]
கென்லி தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
9 சூன் 2001 – 4 சூன் 2008
முன்னையவர்மைக்கேல் எசல்டைன்
பின்னவர்யோன் கோவெல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அலெக்சாந்தர் போரிசு டி பெஃபெல் யோன்சன்

19 சூன் 1964 (1964-06-19) (அகவை 60)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா (1964–2016)[2]
அரசியல் கட்சிகன்சர்வேட்டிவ் கட்சி
துணைவர்(கள்)
அலேக்ரா மொசுடின்-ஓவென்
(தி. 1987; ம.மு. 1993)
மரீனா வீலர்
(தி. 1993; வில. 2018)
துணைகாரி சிமன்ட்சு (2018–இன்று)[3]
பிள்ளைகள்குறைந்தது 5 பேர்[4][5]
பெற்றோர்
  • இசுடான்லி யோன்சன் (தந்தை)
  • சார்லட் போசெட் (தாய்)
வாழிடம்10 டவுனிங் தெரு
கல்விஈட்டன் கல்லூரி
முன்னாள் கல்லூரிபேலியல் கல்லூரி, ஆக்சுபோர்டு
கையெழுத்து
இணையத்தளம்காமன்சு இணையதளம்

அலெக்சாண்டர் போரிசு டி பெஃபெல் சான்சன் (Alexander Boris de Pfeffel Johnson; பிறப்பு: 19 சூன் 1964) பிரித்தானிய அரசியல்வாதியும், வரலாற்றாளரும், முன்னாள் இதழியளாரும் ஆவார். இவர் 24 சூலை 2019 முதல் 6 செப்டம்பர் 2022 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், மற்றும் 23 சூலை 2019 முதல் 5 செப்டம்பர் 2022 பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் 2001 முதல் 2008 வரையிலும், பின்னர் 2015 முதலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2008 முதல் 2016 வரை இலண்டன் நகர முதல்வராகவும், 2016 முதல் 2018 வரை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[6]

அமெரிக்காவில் நியூயார்க்கு நகரில் பிரித்தானியப் பெற்றோருக்குப் பிறந்த போரிசு சான்சன்,[7][8] பிரசெல்சு ஐரோப்பியக் கல்லூரி, ஈட்டன் கல்லூரி ஆகியவற்றிலும், ஆக்சுபோர்டு பெலியல் கல்லூரியிலும் கல்விகற்றார்.[9] தி டைமுசு நாளிதழில் ஊடகவியலாலராகத் தனது பணியை ஆரம்பித்தார். மேற்கோள் ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காக அவர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், த டெயிலி டெலிகிராப் பத்திரிகையின் பிரசெல்சு நிருபராகவும், பின்னர் 1994 முதல் 1999 வரை டெய்லி டெலிகிராஃப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.[10] 2001 இல் என்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றைய பழமைவாதக் கட்சித் தலைவர்களான மைக்கேல் அவார்டு, டேவிட் கேமரன் ஆகியோரின் கீழ் நிழல் அமைச்சராக இருந்தார். 2008 இல் இவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, அதே ஆண்டில் இலண்டன் நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11] 2012 இல் மீண்டும் இலண்டன் நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவரது பதவிக்காலத்தில், பெரும்பாலான இலண்டன் பொதுப் போக்குவரத்துகளில் ஆல்ககோல் பயன்பாட்டைத் தடை செய்தார். இவரது காலத்தில் இலண்டனில் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

சான்சன் 2015 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2016 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற "பிரெக்சிட்" இயக்கப் பரப்புரையில் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தார்.[12] தெரசா மேயின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். பிரெக்சிட் தொடர்பாக தெரேசா மேயின் அணுகுமுறையை விமரிசித்து அப்பதவியில் இருந்து 2018 ஆம் ஆண்டில் விலகினார். 2019 ஆம் ஆண்டில் தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சான்சன் கட்சித் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[13] பிரதமராக நியமிக்கப்பட்டார். 2019 திசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், சான்சன் தலைமையிலான பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பழமைவாதக் கட்சி பெற்ற மிகப்பெரும் வெற்றியாக இத்தேர்தல் கணிக்கப்பட்டது.[14]

சான்சன் பிரித்தானிய அரசியல் மற்றும் ஊடகத்துறையில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகக் கருதப்படுகிறார். பாரம்பரிய பழமைவாதக் கட்சி அரசியலைத் தாண்டி, இவரை ஒரு பொழுதுபோக்காளர், நகைச்சுவையாளர், மற்றும் பிரபலமான நபராக மக்கள் புகழ்ந்துரைத்துள்ளனர். இவரை ஒரு மேட்டிமைவாதியாகவும், இனவெறி, பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கை மொழிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவிக்கொண்டுள்ள கோவிட்-19 கொரோனா தீநுண்மியால் மார்ச்சு 27, 2020 அன்று தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டுள்ளதாகவும் காணொளி மூலம் வெளியிட்டார் [15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uxbridge & South Ruislip". BBC News. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
  2. Wintour, Patrick (9 February 2017). "Boris Johnson among record number to renounce American citizenship in 2016". The Guardian. London. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
  3. 3.0 3.1 "Carrie Symonds: Who is Boris Johnson's partner?". itv.com. 22 June 2019. பார்க்கப்பட்ட நாள் 24 June 2019.
  4. Buchan, Lizzy (29 November 2019). "Boris Johnson refuses to say how many children he has in live radio interview". The Independent. https://www.independent.co.uk/news/uk/politics/boris-johnson-children-single-mothers-general-election-brexit-a9225756.html. பார்த்த நாள்: 29 November 2019. 
  5. Walker, Peter (29 November 2019). "Johnson dodges LBC radio host's questions about his children". The Guardian. https://www.theguardian.com/politics/2019/nov/29/boris-johnson-dodges-lbc-radio-hosts-questions-about-his-children. பார்த்த நாள்: 29 November 2019. 
  6. பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா
  7. "Boris Johnson's Chaotic Path to Power Finally Pays Off" (in en-US). த நியூயார்க் டைம்ஸ். அசோசியேட்டட் பிரெசு. 23 July 2019 இம் மூலத்தில் இருந்து 31 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190731124042/https://www.nytimes.com/aponline/2019/07/23/world/europe/ap-eu-britain-boris-johnson.html. 
  8. Purnell 2011, p. 10; Gimson 2012, p. 1.
  9. Johnson, Stanley (18 June 2016). "Stanley Johnson: Why I remain a fan of Brussels". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/travel/destinations/europe/belgium/brussels/articles/stanley-johnson-why-i-remain-a-fan-of-brussels/. 
  10. Fletcher, Martin (4 November 2017). "The joke's over – how Boris Johnson is damaging Britain's global stature". New Statesman. https://www.newstatesman.com/politics/uk/2017/11/joke-s-over-how-boris-johnson-damaging-britain-s-global-stature. பார்த்த நாள்: 7 November 2017. 
  11. "Johnson wins London mayoral race". BBC News. 3 May 2008. http://news.bbc.co.uk/1/hi/uk_politics/7380947.stm. பார்த்த நாள்: 3 May 2008. 
  12. "Boris Johnson says UK is better off outside the EU". BBC News. 21 February 2016. https://www.bbc.co.uk/news/uk-politics-eu-referendum-35626621. பார்த்த நாள்: 21 February 2016. 
  13. Stewart, Heather (23 July 2019). "Boris Johnson elected new Tory leader". The Guardian. https://www.theguardian.com/politics/2019/jul/23/boris-johnson-elected-new-tory-leader-prime-minister. பார்த்த நாள்: 23 July 2019. 
  14. "General Election 2019: What's behind the Conservative victory?". BBC. https://www.bbc.com/news/election-2019-50774061. 
  15. "In full: PM's statement on his coronavirus". BBC. https://www.bbc.com/news/uk-politics-52064631. 

வெளி இணைப்புகள்

[தொகு]
ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்
முன்னர்
மைக்கேல் ஹெசெல்டின்
ஹென்லே நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்
2001–2008
பின்னர்
ஜான் ஹேவல்
முன்னர்
ஜான் ராண்டேல்
உஸ்பிரிட்ஜ் & சவுத் ருய்சிலிப் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்
2015 – தற்போது வரை
பதவியில் உள்ளார்
அரசியல் பதவிகள்
முன்னர்
கென் லிவிங்ஸ்டன்
மேயர், இலண்டன்
2008–2016
பின்னர்
சாதிக் கான்
முன்னர்
பிலிப் ஹம்மோண்ட்
ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை & காமன்வெல்த் நாடுகளின் விவகார அமைச்சர்
2016–2018
பின்னர்
ஜெராமி அவுண்ட்
முன்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
24 சூலை 2019
பதவியில் உள்ளார்
அரசியல் கட்சி பதவிகள்
முன்னர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர்
2019 – தற்போது வரை
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிஸ்_ஜான்சன்&oldid=3858748" இலிருந்து மீள்விக்கப்பட்டது