லிஸ் டிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலிசபெத் டிரஸ்
நா.உ
Liz Truss Official Portrait.jpg
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியேற்பு
6 செப்டம்பர் 2022
அரசர் எலிசபெத் II
முன்னவர் போரிஸ் ஜான்சன்
வெளியுறவு, பொதுநலவாய, அபிவிருத்தி விவகார செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 செப்டம்பர் 2021
பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னவர் டொமினிக் ராப்
பெண்கள் மற்றும் சமத்துவத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 செப்டம்பர் 2019
பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னவர் ஆம்பர் ரட்
  • பன்னாட்டு வணிகத்துறைச் செயலர்
  • வணிக வாரியத் தலைவர்
பதவியில்
24 சூலை 2019 – 15 செப்டம்பர் 2021
பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னவர் லியாம் பொக்சு
பின்வந்தவர் ஆன்-மரீ திரெவெலியான்
கருவூல முதன்மை செயலாளர்
பதவியில்
11 சூன் 2017 – 24 சூலை 2019
பிரதமர் தெரசா மே
முன்னவர் டேவிட் கோக்
பின்வந்தவர் இரிசி சுனக்கு
பதவியில்
14 சூலை 2016 – 11 சூன் 2017
பிரதமர் தெரசா மே
முன்னவர் மைக்கேல் கோவ்
பின்வந்தவர் டேவிட் லிடிங்டன்
சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான செயலாளர்
பதவியில்
15 சூலை 2014 – 14 சூலை 2016
பிரதமர் டேவிட் கேமரன்
முன்னவர் ஒவென் பட்டர்சன்
பின்வந்தவர் ஆன்ட்ரியா லீட்சொம்
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்விக்கான நாடாளுமன்றத் துணைச் செயலாளர்
பதவியில்
4 செப்டம்பர் 2012 – 15 சூலை 2014
பிரதமர் டேவிட் கேமரன்
முன்னவர் சேரா டீத்தர்
பின்வந்தவர் சாம் கைமா
தென்மேற்கு நோர்ஃபோக் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 மே 2010
முன்னவர் கிறித்தோபர் பிரேசர்
பெரும்பான்மை 26,195 (50.9%)
தனிநபர் தகவல்
பிறப்பு மேரி எலிசபெத் டிரஸ்
26 சூலை 1975 (1975-07-26) (அகவை 47)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
அரசியல் கட்சி கன்சர்வேட்டிவ் (1996 முதல்)
பிற அரசியல்
சார்புகள்
லிபரல் சனநாயகவாதிகள் (1996 வரை)
வாழ்க்கை துணைவர்(கள்)
இயூ ஓ'லியரி (தி. 2000)
பிள்ளைகள் 2
கல்வி மேர்ட்டன் கல்லூரி, ஆக்சுபோர்டு (இளங்கலை)

மேரி எலிசஎத் டிரஸ் (Mary Elizabeth Truss, பிறப்பு: 26 சூலை 1975) ஒரு பிரித்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2022 செப்டம்பர் 6 முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பதவியில் உள்ளார். இவர் 2010 முதல் தென்மேற்கு நோர்ஃபோல்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) உள்ளார். இவர் தற்போது ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தில் வெளியுறவு செயலாளராகவும், பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.[1] கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான இவர், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய பிரதமர்களின் தலைமையில் பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் பொருளாதார ரீதியாக புதிய தாராளவாத மற்றும் சமூக ரீதியாக பழமைவாத கருத்துகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.[2][3][4]

ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் இளங்கலை பயின்ற போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக லிபரல் டெமாக்ராட்ஸின் தலைவராக இருந்தார். 1996 இல் பட்டம் பெற்ற பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார்.[5] இவர் ஷெல் மற்றும் கேபிள் & வயர்லெஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அதன்பிறகு ரிஃபார்ம் எனப்படும் திங்க் டேங்க்கில் துணை இயக்குநராக இருந்தார். 2010 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்று டிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஒரு பின்வரிசை உறுப்பினராக இருந்த இவர் குழந்தை பராமரிப்பு, கணிதக் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.[6] இவர் பிரீ எண்டர்பிரைஸ் குரூப் ஆஃப் கன்சர்வேடிவ் எம்.பி. என்ற அமைப்பை நிறுவினார். மேலும் ஆஃப்டர் தி கோலிஷன் (2011) மற்றும் பிரிட்டானியா அன்செயின்ட் (2012) உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை தானாகவும் இணை ஆசிரியராகவும் எழுதியுள்ளார்.

2012 முதல் 2014 வரை குழந்தைகள் மற்றும் கல்விக்கான நாடாளுமன்ற துணைச் செயலாளராக டிரஸ் பணியாற்றினார்.[7] 2014 அமைச்சரவை மாற்றத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளராக பிரதமர் டேவிட் கேமரூனால் நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என்ற பிரிட்டன் ஸ்ட்ராங்கர் இன் யூரோப் பிரச்சாரத்தின் ஆதரவாளராக இருந்தபோதிலும், வாக்கெடுப்பின் முடிவு வெளிவந்த பிறகு பிரெக்ஸிட்டை ஆதரித்தார்.[8] ஜூலை 2016இல் கேமரூன் பதவி விலகிய பிறகு, இவர் நீதித்துறைக்கான அரசு செயலாளராகவும், உயராட்சித் தலைவராகவும் பிரதமர் தெரசா மேவால் நியமிக்கப்பட்டார்.[9][10][11] 2017 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, டிரஸ் கருவூலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[12] 2019இல் மே பதவி விலகிய பிறகு, கன்சர்வேடிவ் தலைவராகப் போட்டியிட்ட போரிஸ் ஜான்சனை டிரஸ் ஆதரித்தார். போரிஸ் பிரதமரானதும், பன்னாட்டு வர்த்தகத்திற்கான செயலாளராகவும், வர்த்தக வாரியத்தின் தலைவராகவும் டிரஸ்ஸை நியமித்தார், பின்னர் 2021இல் டொமினிக் ராப்க்கு மாற்றாக வெளியுறவு செயலாளராக டிரஸ்ஸை நியமித்தார். 19 டிசம்பர் 2021 அன்று லார்ட் பிரோஸ்ட்க்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் EU-UK பார்ட்னர்ஷிப் கவுன்சிலின் UK தலைவருடன் அரசாங்கத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளராக டிரஸ் நியமிக்கப்பட்டார்.[13]

போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடவிருப்பதாக 2022 சூலை 10 இல் டிரசு அறிவித்தார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் நாளிலேயே வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்தார், "தேர்தலில் கன்சர்வேடிவ்வாகப் போராடி கன்சர்வேடிவ் ஆக ஆட்சி செய்வேன்" என்று கூறினார், மேலும் "வாழ்க்கைச் செலவைக் கையாள்வதற்கு மக்களுக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுப்பேன்" என்றும் கூறினார்.[14][15] 2022 சூலை 20 அன்று, டிரசும் முன்னாள் கருவூலக் காப்பாளர் இரிசி சுனக்கும் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இறுதித் தலைமை வாக்கெடுப்புக்கு வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இறுதி வாக்கெடுப்பில் சுனக்கு 137 வாக்குகள் பெற்று முதலிடத்தையும், டிரசு 113 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திதையும் பிடித்தனர்.[16][17] பின்னர் கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, டிரசு 57.4% வாக்குகள் பெற்று கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Norfolk MP Liz Truss made international trade secretary". 24 July 2019. 24 July 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "PROFILE: Liz Truss, foreign secretary and Conservative Party leadership candidate". www.aa.com.tr. 2022-07-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. Foundation, Thomson Reuters. "What are the UK Prime Minister hopefuls' stances on LGBTQ+ rights?". news.trust.org. 2022-07-21 அன்று பார்க்கப்பட்டது.
  4. Mackinnon, Amy. "Liz Truss, True Believer". Foreign Policy (in ஆங்கிலம்). 2022-07-21 அன்று பார்க்கப்பட்டது.
  5. "BBC Democracy Live: Elizabeth Truss MP". BBC News. http://news.bbc.co.uk/democracylive/hi/representatives/profiles/40370.stm. 
  6. Anushka Asthana (9 June 2012). "The lady's for turning, right from CND to Conservative". தி டைம்ஸ். http://www.thetimes.co.uk/tto/news/politics/article3440383.ece. 
  7. "Chief Secretary to the Treasury: The Rt Hon Elizabeth Truss MP". gov.uk. 2012. 22 February 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. Chambre, Agnes (11 October 2017). "Liz Truss says she would now back Brexit". Politics Home. 5 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  9. Bowcott, Owen (21 July 2016). "Liz Truss sworn in as first ever female lord chancellor". தி கார்டியன். https://www.theguardian.com/politics/2016/jul/21/liz-truss-first-ever-female-lord-chancellor-justice-secretary. 
  10. Griffiths, Emma (14 July 2016). "Cabinet: Leadsom in, Gove out, Hunt stays: Round-up of today's news". BBC News. https://www.bbc.co.uk/news/live/uk-politics-36570120. 
  11. Gerber, Louis (14 July 2016). "Liz Truss is the new Secretary of Justice". Cosmopolis (Switzerland). http://www.cosmopolis.ch/english/politics/e0019200/liz_truss_secretary_of_justice_e019200000000.htm. 
  12. "Theresa May carries out Cabinet reshuffle". BBC News. 11 June 2017. https://www.bbc.co.uk/news/uk-politics-40241229. 
  13. "Ministerial appointments: 19 December 2021". GOV.UK. 28 December 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  14. Walker, Peter (10 July 2022). "Foreign Secretary Liz Truss joins Tory leadership race". BBC News. https://www.bbc.co.uk/news/uk-politics-62115709. 
  15. Riley-Smith, Ben (10 July 2022). "Liz Truss launches leadership bid with tax cut challenge to Rishi Sunak". The Telegraph. https://www.telegraph.co.uk/politics/2022/07/10/liz-truss-launches-leadership-bid-tax-cut-challenge-rishi-sunak/. 
  16. "Tory leadership election: full results after round five". The Guardian. 21 July 2022. https://www.theguardian.com/politics/ng-interactive/2022/jul/18/tory-leadership-election-full-results. 
  17. 17.0 17.1 "How Liz Truss won the Conservative leadership race". BBC News. 5 September 2022. https://www.bbc.co.uk/news/uk-politics-60037657. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிஸ்_டிரஸ்&oldid=3509656" இருந்து மீள்விக்கப்பட்டது