போரிசு குப்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போரிசு அலெக்சீவிச் குப்டின் (Boris Alekseevich Kuftin) சோவியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் இனவியலாளர் ஆவார். இவர் 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று உருசியா நாட்டின் சமாராவில் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 2 ஆம் தேதியன்று லீலூப்பில் (இப்போது சூர்மலாவின் ஒரு பகுதி) இறந்தார். 1933 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சார்சியா நாட்டின் தலைநகரமான திபிலீசியில் பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டுகளில், ட்ரைலேட்டி கலாச்சாரத்தை கண்டுபிடித்தார். [1] 1940 ஆம் ஆண்டில், குரா-அராக்சு என்ற வார்த்தையை உருவாக்கினார். [2] இவர் 1940 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை தெற்கு துர்க்மெனிசுதான் வளாகத்தின் தொல்பொருள் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றார். [3]

குப்டின் 1946 ஆம் ஆண்டில் சார்சிய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினரானார். [4]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Moisheson, Boris (May 2001). Armenoids in prehistory. University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7618-1780-2. https://books.google.com/books?id=9NSAAAAAMAAJ. பார்த்த நாள்: 15 November 2012. 
  2. Potts, D. T. (15 August 2012). A Companion to the Archaeology of the Ancient Near East. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-6077-6. https://books.google.com/books?id=P5q7DDqMbF0C&pg=PA676. பார்த்த நாள்: 15 November 2012. 
  3. Shaw, Ian (15 April 2008). Dictionary of Archaeology. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-75196-1. https://books.google.com/books?id=8HKDtlPuM2oC&pg=PA81. பார்த்த நாள்: 15 November 2012. 
  4. "Deceased academicians". Georgian National Academy of Sciences. Archived from the original on 22 April 2016. பார்க்கப்பட்ட நாள் 21 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிசு_குப்டின்&oldid=3875168" இலிருந்து மீள்விக்கப்பட்டது