பைலிடியா வாரிகோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலிடியா வாரிகோசா
பைலிடியா வாரிகோசா, தலை இடது புறத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
நூடிபிராங்கியா
குடும்பம்:
பைலிடிடே
பேரினம்:
பைலிடியா
இனம்:
பை. வாரிகோசா
இருசொற் பெயரீடு
பைலிடியா வாரிகோசா
(லாமார்க், 1801)[1]
பைலிடியா வாரிகோசா, தலைப் பகுதியிலிருந்து

பைலிடியா வாரிகோசா (Phyllidia varicosa) என்பது ஒரு கடல் அட்டை ஆகும். இது பைலிடிடே குடும்பத்தில் உள்ள ஓடு இல்லாத கடல் வாழ் வயிற்றுக்காலி மெல்லுடலி சிற்றினம் ஆகும்.[2]

பரவல்[தொகு]

இந்த சிற்றினம் மத்திய பசிபிக் மற்றும் செங்கடல் உட்பட இந்திய-மேற்கு பசிபிக் பெருங்கடல் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.[3]

விளக்கம்[தொகு]

இது குறைந்தபட்சம் 115 மி.மீ. வரை வளரும் சிற்றினமாகும். இதில் காணப்படும் 3 முதல் 6 வரையிலான நீளமான, தழும்பு போன்ற வெளி முகடுகளால் இதை வேறுபடுத்தி அறியலாம். இந்த முகட்டின் அடிப்பகுதி நீல-சாம்பல் நிறத்தில் இருக்கும். மேற்பகுதி மஞ்சள் நிறத்தில் மூடப்பட்டிருக்கும். பாதத்தில் கருப்பு நிறத்தில் நீளமான கால் பட்டை உள்ளது.[4]

ஒப்புமைப்போலி[தொகு]

கடல் வெள்ளரி, பியர்சோனோதூரியா கிரேபியை இளம் உயிரிகள் பிரகாசமான நிறத்தில் பிலிடியா வாரிகோசாவை ஒத்திருக்கும். இவை வெள்ளை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிறத்தில் மஞ்சள், முள் போன்ற அமைப்புடன் காணப்படும். இந்த பிரகாசமான நிறங்கள் நுடிபிராங்கின் நச்சுஇரைகெளவல் விலங்குகளை எச்சரிக்கின்றன, மேலும் கடல் வெள்ளரி வகைகளின் இந்த மிமிக்ரி இதைப் பாதுகாக்க உதவுகிறது. முதிர்ந்த கடல் வெள்ளரி மிகவும் மந்தமான நிறத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இது கடல் அட்டையினை விட மிகப் பெரியது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jean-Baptiste Lamarck. (1801). Systeme des animaux sans vertebres. Paris.
  2. Bouchet, P. (2015). Phyllidia varicosa Lamarck, 1801. In: MolluscaBase (2015). Accessed through: World Register of Marine Species on 2016-11-15.
  3. Brunckhorst, D.J. (1993) The systematics and phylogeny of Phyllidiid Nudibranchs (Doridoidea). Records of the Australian Museum, Supplement 16: 1-107.
  4. Rudman, W.B., 1999 (January 12) Phyllidia varicosa Lamarck, 1801. [In] Sea Slug Forum. Australian Museum, Sydney.
  5. Invertebrate of the month: Pearsonothuria graeffei Florida Museum of Natural History. Retrieved 2012-02-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலிடியா_வாரிகோசா&oldid=3857578" இலிருந்து மீள்விக்கப்பட்டது