பைப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைப்பா

தவளைகளில் ஒரு வகை. தென் அமெரிக்காவில் வாழ்கிறது. மற்றத் தவளைகளில் காணப்படாத சில இயல்புகள் இதில் காணப்படுகின்றன. நாவில்லா அகிளாசா (Aglossa) என்னும் பிரிவுக்குட்பட்டதாகும். மற்ற நாவுள்ள தவளைகள் பானிரோகிளாஸா (Phaneroglossa) என்னும் பிரிவினைச் சேர்ந்தது.

அமைப்பு[தொகு]

கண்கள் சிறியவை. அவை அகலமான தலையின் மேற்பக்கத்தில் அமைந்துள்ளன. விரல்களின் நுனியில் நட்சத்திரம் போன்ற வடிவுள்ள நீட்சிகள் இருக்கும். இந்த நீட்சிகளினுள்ளே எலும்பு எதுவும் இருப்பதில்லை. இவை வெறும் இணைப்புத்திசுவினால் ஆனது. சில இனங்களில் இவ்வித நீட்சிகள் தாடைகளிலிருந்தும் உண்டாகும்.

முட்டைகள்[தொகு]

பெண் தவளைகளின் முதுகு முட்டைகளை வைத்துக் காக்கும் சினைப்பையாகப் (Brood pouch) பயன்படும். அதிலே ஆங்காங்கே இருக்கும் குழிகளிலே முட்டைகள் இடப்பெறும். ஒவ்வொரு குழியின்மேலும் ஒரு மூடிபோன்ற தோல் மடிப்பு இருக்கும். முட்டை இந்தக் குழியிலேயே வளர்ந்து, சிறு தலைப்பிரட்டையாக முதிரும். தலைப்பிரட்டை பிறகு நீருக்குள்ளே போகும்.

கருவுறுதல்[தொகு]

கருவுறுதல் பெண் தவளைகளின் உள்ளே நடைபெறும். சாதாரணமாகத் தவளைகளில் கருவுறுதல் உடலுக்கு வெளியே நீரில் நடக்கும். பெண் பைப்பா முட்டைகளை முதுகின்மேல் கொண்டு போகும். தலைப்பிரட்டைகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றின் வாலானது உள்ளுறிஞ்சப்படும். அதனால் வெளிவரும் பிராணி ஏறக்குறைய தவளை வடிவிலேயே இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. கலைக்களஞ்சியம் தொகுதி ஏழு
  2. https://www.wired.com/2013/12/absurd-creature-of-the-week-the-toad-whose-young-erupt-from-her-skin/
  3. Piper, Ross (2007), Extraordinary Animals: An Encyclopedia of Curious and Unusual Animals, Greenwood Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைப்பா&oldid=3867512" இலிருந்து மீள்விக்கப்பட்டது