பைக்கால் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பைக்கால் ஏரி
பைக்கால் ஏரி -
பைக்கால் ஏரி -
புவியமைவுக் கூறுகள் 53°30′N 108°0′E / 53.5, 108அமைவு: 53°30′N 108°0′E / 53.5, 108
வகை Continental rift lake
உள்வடிகால் Selenge, Barguzin, Upper Angara
வெளிப்போக்கு Angara
வடிநிலம் 5,60,000 கிமீ2 (2 சதுர மைல்)
வடிநில நாடுகள் Russia and Mongolia
அதிக அளவு நீளம் 636 கிமீ (395 மை)
அதிக அளவு அகலம் 79 கிமீ (49 மை)
மேற்பரப்பளவு 31,722 கிமீ2 (12 சதுர மைல்)[1]
சராசரி ஆழம் 744.4 மீ (2 அடி)[1]
அதிக அளவு ஆழம் 1,642 மீ (5 அடி)[1]
நீர் கனவளவு 23,615.39 km3 (5 cu mi)[1]
இருப்புக் காலம் 330 years[2]
கரை நீளம்1 2,100 கிமீ (1 மை)
மேற்பரப்பின் உயரம் 455.5 மீ (1 அடி)
உறைதல் January–May
தீவுகள் 27 (Olkhon)
குடியிருப்புகள் Irkutsk
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

பைக்கால் ஏரி உருசியாவில் (ரஷ்யாவில்) உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெரிய ஏரி). உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமும் (1637 மீட்டர்), மிக அதிகளவு (23,600 கன கிலோமீட்டர்) நீரும் கொண்ட ஏரி இதுவே. உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும். உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. உருசியாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உலக வரலாற்றுச்சிறப்பு இடம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. இப் பேரேரி உருசியாவில் தென் சைபீரியாவில் உள்ளது.

பைக்கால் ஏரி அமைந்துள்ள நிலப்படம்

பைக்கால் ஏரியில் உள்ள நீரின் அளவானது அமெரிககாவில் உள்ள ஐந்து பேரேரிகளில் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் அதிகமானது, ஆனால் அமெரிக்கப் பேரேரிகளின் ஆழம் குறைவானதால், அமெரிக்கப் பேரேரிகளை ஒப்பிடும்பொழுது பைக்கால் ஏரியின் நீர்ப்பரப்பின் அளவு குறைவு. பைக்கால் ஏரியானது 636 கிலோமீட்டர் நீளமும், அதிக அளவாக 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 31,494 சதுர கிலோ மீட்டர் கொண்டது. பெரிதும் சிறிதுமாய் சுமார் 300 ஆறுகள் இவ்வேரிக்கு நீர் கொண்டு வருகின்றன. இவற்றுள் ஆறு பெரிய ஆறுகள் குறிப்பிடத்தக்கன. அவையாவன: சிக்கோய் (Chikoy), கில்லோ (Khiloh), உடா (Uda), பார்குசின் (Barguzin) வட அங்காரா (Upper Angara). இவ்வேரியில் சுமார் 22 சிறு தீவுகளும் உண்டு. இத்தீவுகளுள் பெரியது ஒல்க்கோன் என்னும் தீவு ஆகும். இத்தீவு 72 கி.மீ நீளம் கொண்டதாகும்.

பைக்கால் பேரேரி சுமார் 25-30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.டாங்கனிக்கா ஏரி போன்று பைக்கால் ஏரியின் 31,722 (12,248 சதுர மைல்) பரப்பு ஒரு நீண்ட பிறை வடிவம் கொண்ட, பண்டைய பிளவுப்பள்ளதாக்கால் உருவாக்கப்பட்டது. பைக்காலில் , இவ்வேரியில் வாழும் உயிரினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. இங்குள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்க்கு மேல் வேறெங்கும் காண இயலாதன. இப் பேரேரியில் 1085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி இனங்களும் 1550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாக அறிந்துள்ளனர்.மேலும் இங்கு வசிக்கும் பர்யாட் பழங்குடியினர் வீட்டில் ஆடுகள், ஒட்டகங்கள், கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கின்றனர். மிகப்பழைய ஏரியாகையால் உயிரின வளர்ச்சியின் வரலாற்றை அறிய பெருந்துணையாய் இருப்பது என்று பேணப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டத.இப்பகுதியில் குளிர்காலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை -19 டிகிரி செல்சியஸ் (-2 ° F),கோடையில் அதிகபட்சமாக 14° சி (57 டிகிரி பாரன்ஹீட்). பைக்கால் ஏரி "ஏரிகளின் மூத்த சகோதரி" என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பைக்கால் ஏரியானது சீன வரலாற்று உரைகளில் "வட கடல்" (北海 Běihǎi) என அழைக்கப்பட்டது.இது ஹான் வம்ச பேரரசசின் வடக்கு சைபீரியன் டைகாவில் இருந்து தெற்கில் க்சியாங்னு பிரதேசம் வரை அமைந்துள்ளது என ஹான்-ஹண் போர் குறிப்பில் காணப்படுகிறது.17 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதி விரிவாக்கத்திற்க்கு பின் ஏரி பற்றி ஐரோப்பியர்கள் அறிந்துகொண்டனர். பைக்கால் ஏரியை அடைந்த முதல் ரஷியன் ஆய்வுப்பணி குழு 1643 ஆண்டு குர்பாட் இவனொவ்(Kurbat Ivanov) ஆகும்.
டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே 1896 மற்றும் 1902 இடையே . பைக்கால் ஏரியின் தென்மேற்கு இறுதியில் சுற்றி 200 பாலங்கள் மற்றும் 33 சுரங்கங்களுடன் கட்டப்பட்டது. அதன் நிறைவு வரை பல ஆண்டுகள் போர்ட் பைக்காலில் இருந்து மைசோவயா(Mysovaya) பயணம் செய்ய ஏரி முழுவதும் தொடர்வண்டி இயக்கப்பட்டது.
1920 ல் இராணுவ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரேட் சைபீரிய பனி படைஅணிவகுப்பின் போது குளிரில் பலர் இறந்தனர்.

1956 ல் அங்காரா(Angara) நதியின் இர்குட்ஸ்க் அணை உடைப்பின் மூலம் 1.4 மீ (4.6 அடி) ஏரியின் மட்டம் உயர்த்தது. ரயில்வே கட்டப்பட்ட போது ட்ரிசென்கோ(f.k.Drizhenko) தலைமையில் ஒரு பெரிய ஏரிப்படுகை நீரின் புவியியல் ஆய்வு மூலம் முதல் விரிவான எல்லைக்கோட்டு வரைபடம் உறுவாக்கப்பட்டது.

ஆராய்ச்சி[தொகு]

ஏரியின் செயற்கைகோள் புகைப்படம்
அரசு அல்லது அரசு நிறுவனங்கள் தொடர்புடைய பல அமைப்புக்கள் பைக்கால் ஏரியின் இயற்கை ஆராய்ச்சி திட்டங்களை நடத்தி வருகின்றனர். பைக்கால் ஆராய்ச்சி மையம் என்ற ஒரு தன்னிச்சையான ஆராய்ச்சி அமைப்பு பைக்கால் ஏரியின் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களினை நடத்தி வருகிறது.

ஜூலை 2008 ல், ரஷ்யா தனது தனிப்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய புவியியல் மற்றும் உயிரியல் சோதனைகள் நடத்த பைக்கால் ஏரியில் 1,592 மீ (5,223 அடி) ஆழத்தில் இறங்க, மீர்-1 மற்றும் மீர்-2 என்ற இரண்டு சிறிய நீர்மூழ்கிகள் அனுப்பப்பட்டது.உண்மையில் வெற்றிகரமான அறிக்கை எனினும், அவர்களின் 1.580 மீ (5,180 அடி) அதிகபட்ச நீர் ஆழத்தை அடையும் உலக சாதனையை நிகழ்த்த இயலவில்லை.அந்த சாதனையை தற்போது (5,371 1,637 மீ வரை சென்று ரஷியன் விஞ்ஞானி அனடோலி சாகல்விச் அடைந்தார்.

பொருளாதாரம்[தொகு]

இது "சைபீரியாவின் முத்து" புனைப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.இது சுற்றுலா மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கிறது. இர்குட்ஸ்க்-ல் உள்ள விக்டர் க்ரிக்ரோவ் இங்கு மூன்று விடுதிகள் கட்ட திட்டமிட்டுள்ளர்.2007 ஆம் ஆண்டில், ரஷியன் அரசாங்கம் பைக்கால் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது.ராஷ்டம் என்ற சர்வதேச யுரேனியம் ஆலை பைக்கால் பகுதியில் $2.5 பில்லியன் முதலீட்டில் ஒரு ஆய்வக உருவாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.இது அங்ரஷ்க் நகரில் 2,000 வேலைவாய்ப்ப்புகளை உருவாக்கும்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்[தொகு]

பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலை[தொகு]

பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலை

1966 ல் கட்டப்பட்ட பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலையானது குளோரின் கொண்டு காகித வெளுக்கும் கழிவுகளை நேரடியாக பைக்கால் கரையில் கொட்டியதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது பிறகு தொழில் நஷ்டம் காரணமாக 2008 நவம்பரில் மூடப்பட்டது.2009 இல் மார்ச் மாதம் ஆலை உரிமையாளர் காகித ஆலை மீண்டும் இயங்குவதாக அறிவித்தது இதற்க்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது எனினும் 2010 ஜனவரி 4 ஆம் தேதி உற்பத்தியை மீண்டும் தொடர்ந்தது. 13 ஜனவரி 2010 ல் அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு சிறிய நீர்மூழ்கி இருந்து ஏரியை பார்வையிட்டு பைக்கால் நல்ல நிலையில் உள்ளது என அறிவித்தார்.

கிழக்கு சைபீரிய பசிபிக் பெருங்கடல் எண்ணெய் குழாய்[தொகு]

ரஷிய அரசு எண்ணெய் குழாய்கள் நிறுவனமான ட்ரான்ஸ்னெஃப்ட்(Transneft) ஏரி கரையில் 800 மீட்டர் ( 2,600 அடி ) அழத்தில் தீவிர நிலஅதிர்வு செயல்பாட்டு அபாயம் உள்ள பகுதியில் ஒரு எண்ணெய் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதற்க்கு ரஷ்யாவில் சுற்று சூழல் ஆர்வலர்கள்,பைக்கால் குழாய் எதிர்ப்பு குழுவினர் மற்றும் உள்ளூர் குடிமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எண்ணெய் கசிவு சுற்றுசூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர்.ரஷியன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இது போன்ற சுற்று சூழல் ஆபத்துக்களை தவிர்க்க மாற்று வழியில் 40 கிலோமீட்டர் வடக்கில் ட்ரான்ஸ்னெஃப்ட் திட்டத்தை மாற்ற உத்தரவிட்டார். வேலை ஜனாதிபதி புட்டினின் ஒப்புதல் பெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு பைக்கால் ஏரியின் மாற்று பாதையில் இருந்து குழாயின் கட்டுமானம் தொடங்கியது.

முன்மொழியப்பட்டுள்ள அணு ஆலை[தொகு]

2006 இல் , ரஷியன் அரசாங்கம் ஏரியின் கரையில் இருந்து 95 கி.மீ. ( 59 மைல்) தூரத்தில் அங்ரஸ்க் நகரில் ஏற்கனவே உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் சர்வதேச யுரேனியம் செறிவூட்டல் மையம் கட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தது.எனினும் எதிர்ப்பாளர்கள் அந்த பகுதியில் இது ஒரு பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனவே இத்திட்டதை மறுபரிசீலனை செய்ய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

செறிவூட்டலின் பின்னர் ,பெறப்பட்ட கதிரியக்க பொருள் மட்டும் 10 சதவிகித யுரேனியம் மட்டுமே சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும், மீதமுள்ள 90 சதவீத யுரேனியம் பைக்கால் ஏரியின் சேமிப்பு பகுதியில் விட்டுவைக்கப்படும்.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.lakebaikal.org/ http://www.britannica.com/EBchecked/topic/49177/Lake-Baikal
பிழை காட்டு: <ref> குறிச்சொல் உள்ளது, ஆனால் <references/> குறிச்சொல் காணப்படவில்லை

"http://ta.wikipedia.org/w/index.php?title=பைக்கால்_ஏரி&oldid=1553122" இருந்து மீள்விக்கப்பட்டது