பேச்சு:வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் சில அடிப்படைத் தரவுகள் பிழையானது எனக் கருதுகிறேன். 1. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் (மற்றும் பிரித்தானியா??) என்பவை மட்டுமே வல்லரசுகளாகக் கருதப்பட்டன. 2. வீட்டோ அதிகாரத்தைக் கொண்டவை ஐந்து நாடுகள்: ஐக்கிய அமெரிக்கா, சோவியத் (தற்போது ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் எனப்படுபவை. கட்டுரை இரண்டு கட்டுரைகளாக எழுதப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 09:51, 5 பெப்ரவரி 2009 (UTC)

செல்வம், கனக் சொல்லுவது சரியே. இது பற்றிய என்னுடைய சில கருத்துக்கள்.


1. நீஙகள் குறிப்பிட்ட ஐந்து நாடுகளும் விட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள். அதனாலேயே அவற்றை வல்லரசுகள் என்று கருதுதல் தவறாகும். விட்டோ நாடுகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொண்டால், இது புரியும். இரண்டாம் உலகப்போருக்கு பின் நாடுகள் சபை (League of Nations) என்ற ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னோடி என்று கருதுகின்றனர். இவ்வமைப்பில் இருந்த சில நாடுகள் (சோவியத் ) இரண்டாம் உலகப்போரின் துவக்க காலத்தில், இதில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டன. அதற்காக தந்திரமாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப் பட்டன. இதன் காரணமாகவே இவ்வமைப்பை உருவாக்கிய வெற்றிபெற்ற அணியின் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சோவியத் ஆகிய நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்கப்பட்டது. பிரான்ஸ் பின்நாட்களில் இவ்வதிகாரத்தை பெற்றது. இந்த அதிகாரம் 1944ல் முடிவு செய்யப்பட்டது. இதை கொண்டு இந்நாடுகளே வல்லரசுகள் என்று குறிப்பிடுவது சரியான வாதம் அன்று. நீங்கள் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற பெயரில் இக்கட்டுரையை அமைக்கலாம்.

2. வல்லரசு என்ற சொல் எனக்கு வரலாறு தெரிந்த வகையில், super power என்பதைதான் குறிக்கும். இன்றைய நிலையில், உலகம் முழுவதும், எந்த ஒரு நாடு தனது அதிகாரத்தை நிலைநாட்டுகிறதோ, உலகம் முழுவதும் பல பகுதிகளில் தன் இராணுவ தளவாடங்களை நிறுவி இருக்கிறதோ அதுதான் வல்லரசு என்று ஆகும். சோவியத் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்கா மட்டுமே வல்லரசாக கருதப்படுகிறது.--Daniel pandian 16:28, 5 பெப்ரவரி 2009 (UTC)

http://www.satyamargam.com/index.php?option=content&task=view&id=1136 கட்டுரை எழுதியது தற்பொதய வல்லரசு நாடுகளப்பற்றித்தான்.மறுபடியும் மறுபடியும் அதே தான் கடினப்பட்டு எனக்குத் தெரிந்ததை த்தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள் யார் அதை தீர்மானித்தது என்பதற்கு நீங்கள் பதில் தரவேயில்லை. ஐ நா சபை சபை உறுப்பு நாடுகள கொண்ட அமைப்பா இல்லையே. அவர்களே ஏற்படுத்திய அமைப்பால். நம்மை நாமே அறிவாளி என்று சொல்வது போல் அதனால் ஒன்றையோன்று போட்டிப் போட்டுக்கொண்டன. அதனால் தானே ஐ நா என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது, தவறு தவறு என்று தவறுதலாகவே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் சரியான மேற்கோள்அல்லது வலை முகவரி கொடுங்கள் என்று சொன்னேன் கொடுக்கவில்லை. தற்போதைய வல்லரசு நாடுகள் எவை என்று கேட்டேன். தமிழ் பல்கலைக்கழக களஞ்சியத்தில் தேடிவிட்டேன் அந்த மாதிரி இல்லை என்று வந்து விட்டது. தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும் அப்படித்தான் அழைக்கிறார்கள் உடனே தவறு என்று சொல்லவிடாதிர்கள். வலைத்தளத்தில் தேடியபோது இப்போது யாருமே வல்லரசு நாடுகள் இல்லை என்று வந்த்து. நான் தலைப்பை மாற்றிவிட்டேன். இங்கு எல்லோரும் இப்படித்தான் அந்த 5 நாடுகளை அழைப்பார்கள். விடுங்கள் ஆளை. --செல்வம் தமிழ் 07:29, 6 பெப்ரவரி 2009 (UTC)

super என்றால் மிகைப்படியானவர், Power என்றால் ஆற்றல், வல்லரசு என்ற சொல் வல்லான்மை, வல்லான் என்று பண்டைய தமிழ் பேரரசர்களை அவர்கள் மக்களை வழி நடத்துவதைப் பார்த்து கேள்விப்பட்டு வைத்தது. நீங்களே உங்களையோ நீங்கள் சார்ந்த நாட்டையோ பெருமை படுத்திக்கொள்வதற்காக எடுத்துக்கொண்டால் எப்படி? என்னை பொருத்தவரை என் தாய்நாடுதான் வல்லரசு அதை நான் அனைவரையும் ஏற்றுக்கொள்ள சொல்லமுடியாது இதை பொதுப்படையான நிர்வாகம் அறிவித்துள்ள குறிப்பு இருக்கிறாதா? --செல்வம் தமிழ் 07:51, 6 பெப்ரவரி 2009 (UTC)

சில மேற்கோள்கள்[தொகு]

இந்த வாதத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகிறேன்

1) முதல் பகுதி, super power என்ற பதம் உலக அளவில் எப்படி உபயோகிக்கப்படுகிறது? உலக அரங்கில் நமது வாதத்தோடு இணக்கப்பட்ட இரண்டு பதங்கள் வழக்கத்தில் உள்ளன.

  1. Great powers
  2. Super power

என்சைளோபீடியா பிரிட்டானிக்கா கலைகளஞ்சியத்தின் படி,

http://www.britannica.com/EBchecked/topic/291225/international-relations/32954/Superpower-relations-in-the-1960s

International relations are shaped primarily by those states perceived to be Great Powers, countries whose interests and capabilities transcend their own self-defense or region. For some 200 years after the treaties of Utrecht and Nystad (1713–14, 1721), the roster of the Great Powers included the same five states: Great Britain, France, Prussia (and, later, Germany), the Habsburg monarchy (Austria), and Russia. A mere three decades after World War I, however, only one of these venerable powers, Britain, had not undergone two or more radical changes of government, and only one, Russia, was still a Great Power. Between 1914 and 1945 the European system committed suicide, and two global superpowers rose to replace it. Five decades after 1945, the Soviet Union was no more, while the ability of the United States to control events was in turn challenged from many sources, giving rise to speculation that the world might be shifting back into a multipolar balance-of-power system.

http://news.bbc.co.uk/1/hi/talking_point/4311574.stm

http://en.wikipedia.org/wiki/Potential_superpowers


2) நீஙகள் முதல் கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைத்தாக எண்ணிணால், இரண்டாவது கேள்வி.

யார் முடிவு செய்கிறார்கள்?

ஒரு நாட்டை வளர்ந்த நாடு அல்லது வளரும் நாடு என்பதை யார் முடிவு செய்கிறார்கள்? ஏதை வைத்து முடிவு செய்கிறார்கள்? ஐநா சபை அறிவிக்கிறதா? . இல்லை! . இதுபோன்ற பதங்கள் பெரிய கட்டுப்பாடுகள் இன்றி ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இராணுவ செலவு, படைத்துறையின் உலக ஆதிக்கம் ஆகிய பலவற்றை கொண்டு முடிவு செய்யப்படுகின்றன. உங்கள் வாதம் ஏன் சோமாலியாவை அல்லது இந்தியாவை நான் வல்லரசாக கொள்ளக்கூடாது என்பது.

இதை பாருங்கள், அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள சுமார் 60 நாடுகளில் தனது படைத் தளத்தை நிறுவி உள்ளது. உலகில் உள்ள எல்லா பெருங்கடலிலும் அதன் கப்பல் படை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சோவியத்தும், அதற்கு முன்னர் இங்கிலாந்தும் இதே அளவு பொருளாதாரத்திலும், இராணுவத்திலும் வலிமை பெற்றிருந்தன.

http://www.globalpolicy.org/empire/tables/2005/1231militarypersonnel.pdf

http://www.militarybudget.info/overseas.html

இந்தியாவின் இராணுவ செலவு $32 பில்லியன் (2006). அமெரிக்காவின் இராணுவ செலவு $$ 713 பில்லியன். நாம் நமது தேசிய உற்பத்தியில் சுமார் 2% இராணுவத்திற்கு செலவு செய்கிறோம். அமெரிக்கா சுமார் 4 %. இராணுவ செலவுகளில் இரண்டாவது இருக்கும் பிரான்சு செலவளிப்பது வெறும் $61 பில்லியன் மட்டுமே.


http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_military_expenditures

http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_GDP_(nominal)

இதன் நான் கூற நினைப்பது என்னவெனில், பல உலகத் தகவல்கள் நானும், கனக்கும் கூறி உருவாகவில்லை. ஐநா சபை சொன்னால்தான் ஒரு நாடு வல்லரசாக முடியும் என்று இல்லை. நாளை இந்தியாவையும் வளர்ந்தால் உலகம் வல்லரசாக ஏற்றுகொள்ளலாம்.

http://en.wikipedia.org/wiki/Emerging_superpower --Daniel pandian 19:46, 7 பெப்ரவரி 2009 (UTC)

உலகம் யாரையும் வல்லரசாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பதில். நீங்கள் சொன்ன படைப்பலத்தை அவர் யாரையும் கேட்காமல் நிறுத்துவதின் சர்வாதிகாரப் போக்கை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை அது மூன்றாம் உலகப்போருக்கு இதுவே காரணமாகும் என்பதை வரலாற்றியலாளர்கள் கருதுகிறார்கள். வல்லரசாக நினைக்கவேண்டும் என்று நிறத்தப்பட்டவை இந்தியாவை,ஜப்பானை வல்லரசாக அறிவிக்கவேண்டும் என்று நான்கு நாடுகள் ஏற்றுக்கொண்டன ஒரே நாடுதான் தடுக்கின்றன. இதில் உலகம் எங்கே தீர்மானிக்கிறது. அதை வல்லரசாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை சர்வாதிகார நாடாகத்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால்தான் இவ்வீழ்ச்சி. ஆகையால் இப்பொழுது வல்லரசு கிடையாது. படைகளை பிறர் நாட்டில் நிறுத்தினாலே அந்த நாட்டுக்குப் பெயர் சர்வாதிகார நாடு என்றுதான் பெயர். சர்வாதிகாரப் போககிற்காக உலகப்போர் நடத்திவிட்டு நீங்களே சர்வாதிகாரியாக மாறினால் எப்படி நல்லரசாக ஏற்றுக்கொள்ளமுடியிம் அப்புறம்தானே வல்லரசு. ஆகையால் இப்போது யாருமே வல்லரசு இல்லை. அவர்கள் நாடு அவர் அவர்களுக்கு வல்லரசு அவ்வளவுதான் இப்படிக் கூறக்கூடாது என்று யாரும் தடுக்கவில்லை. தனிநபர், தனிநாடு, தீர்மானிப்பதை ஏற்றக்கொள்ளத்தேவையில்லை. வல்லரசாக கூறிக்கொள்கின்றன என்று சொல்லலாம். இந்த சொல் conformed word இறுதியான முடிவு செய்யப்பட்ட சொல் இதையாரும் தன்னிச்சையாக பயன்படுத்த உரிமையில்லை.செல்வம்தமிழ்--செல்வம் தமிழ் 02:38, 8 பெப்ரவரி 2009 (UTC)

Alice Lyman Miller (Professor of National Security Affairs at the Naval Postgraduate School), defines a superpower as "a country that has the capacity to project dominating power and influence anywhere in the world, and sometimes, in more than one region of the globe at a time, and so may plausibly attain the status of global hegemon."[1] http://en.wikipedia.org/wiki/Hegemony இதில் Hegemony என்ற சொல் ஏதேச்சதிகாரம், ஆதிக்க மனப்பான்மை என்றுதான் குறிக்கிறது இதோடு எப்படி வல்லரசை பொறுத்தமுடியும். இது ஆங்கில விக்கிப்பீடியா உள்ளது.இந்த மனப்பான்மையை உலகில் உள்ள மிகச்சிறிய நாடும் ஒற்றுக்கொள்ளாது. இதை சொல்வதாலேயே போர் மூளும அபாயகரமான வார்த்தை.எல்லா நாட்டிடமும் அணு ஆயுதம் உள்ளது அணு ஆயுதத்தை பயனபடுததிவிட்டு மற்றவர்களை பாயன்படுத்தாதே என்று சொல்வதற்குத்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவர். செல்வம் தமிழ் --செல்வம் தமிழ் 08:21, 8 பெப்ரவரி 2009 (UTC)