வீட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீட்டோ எனும் இலத்தீன் சொல்லிற்கு நான் தடை செய்கிறேன் எனப்பொருளாகும். ஒரு அமைப்பு அல்லது சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்வதே வீட்டோ ஆகும்.

வரலாறு[தொகு]

பண்டைய ரோம் நாட்டில் ரோமை செனட் சபையில் இயற்றும் கொடும் சட்டங்களை தடை செய்து மக்களைக் காக்க, ரோமை நாட்டு நீதிபதிகளுக்கு வீட்டோ எனும் தடை அதிகாரம் இருந்தது. [1]

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை[தொகு]

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளான சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு உள்ளது.

ஐக்கிய அமெரிக்கா நாடுகள்[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கீழவை மற்றும் செனட் அவையில் இயற்றிய சட்டங்களை, அந்நாட்டின் அதிபருக்கு தடை செய்யும் அதிகாரம் உள்ளது.[2] அமெரிக்க நாட்டு அதிபர் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடை செய்த ஒரு சட்டத்தை, மீண்டும் அந்நாட்டின் கீழவையிலும்; மேலவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்ப்படலாம். எ. கா. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் தொடர்பாக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க வழி செய்யும் சட்ட மசோதாவிற்கு, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Spitzer, Robert J. (1988). The presidential veto: touchstone of the American presidency. SUNY Press. பக். 1–2. ISBN 978-0-88706-802-7. 
  2. Article I, Section 7, Clause 2 of the United States Constitution
  3. அதிபரையும் மீறி அமெரிக்காவில் சட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டோ&oldid=2125292" இருந்து மீள்விக்கப்பட்டது