பேச்சு:மாவீரர் துயிலுமில்லப் பாடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையை நீக்கத் தேவையில்லை. இதே போன்ற பல பக்கங்கள் சினிமாப் பாடல்களுக்கும் உண்டு. நீக்குவதானால் அவற்றையும் சேர்த்து நீக்கலாம்.--Kanags \உரையாடுக 21:49, 19 ஏப்ரல் 2012 (UTC)

இதை இப்படியே விடுவதனால், ஒவ்வொரு சினிமாப் பாடலுக்கும் தனித் தனிக் கட்டுரை அமைத்தால் அதனைத் தடுக்க முடியாது போகும். கிரிக்கட் வீரர்கள் பற்றிய கட்டுரைகளையே தொடர்ந்து எழுதி வந்தமையால் புன்னியாமீனுக்கு ஏற்பட்ட சிக்கலை நாம் அறிவோம். யாராவது சினிமாப் பாடல்களுக்கெல்லாம் தனித் தனிக் கட்டுரை எழுதத் தொடங்கினால், நிலைமை இன்னும் சிக்கலாகும்.--பாஹிம் (பேச்சு) 02:13, 20 ஏப்ரல் 2012 (UTC)
நீக்கத் தேவை இல்லை. சமூக, வரலாறு முக்கியத்துவம் மிக்க பாடல். --Natkeeran (பேச்சு) 03:32, 21 ஏப்ரல் 2012 (UTC)
இக்கட்டுரையை நீக்குதல் கூடாது. சினிமாப் பாடல்களையும், இப்பாடலையும் நாம் சமமாகக் கொள்ளுதல் தவறு. --Nan (பேச்சு) 04:59, 21 ஏப்ரல் 2012 (UTC)
இப்பாடலை திரைப்படப் பாடலுடன் ஒப்பு நோக்க முடியாது. இயக்கப் பாடல்கள், நாட்டுப் பண்களுடன் ஒப்பு நோக்கத்தக்கது. //கிரிக்கட் வீரர்கள் பற்றிய கட்டுரைகளையே தொடர்ந்து எழுதி வந்தமையால் புன்னியாமீனுக்கு ஏற்பட்ட சிக்கலை நாம் அறிவோம்.// தொடர்பற்ற ஒப்பீடுகளைத் தவிர்க்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:42, 21 ஏப்ரல் 2012 (UTC)

இப்பாடலை நீக்கத்தான் வேண்டும். பாடலின் பகுதிகளை வேறு பிரித்து அது பற்றித் தேவையானால் எழுதலாம். மாறாக முழுப் பாடலையும் அப்படியே வைத்திருப்பது சரியெனின், இயக்கப் பாடல்கள் நாட்டுப் பண்களுடன் ஒப்பு நோக்கத் தக்கனவென இரவி கூறுவதற்கொப்ப லஷ்கர்-இ-தைபா, நக்சலைட்டுக்கள், அசாமிய, காசுமீரிய விடுதலை இயக்கங்கள் போன்றன உட்பட உலகிலுள்ள எவ்வியக்கத்தின் பாடலாயினும் அப்படியே இங்கும் முழுமையாகப் பதியப்படுவது சரியென்றாகிவிடும்.--பாஹிம் (பேச்சு) 02:29, 24 ஏப்ரல் 2012 (UTC)

//லஷ்கர்-இ-தைபா, நக்சலைட்டுக்கள், அசாமிய, காசுமீரிய விடுதலை இயக்கங்கள் போன்றன உட்பட உலகிலுள்ள எவ்வியக்கத்தின் பாடலாயினும் அப்படியே இங்கும் முழுமையாகப் பதியப்படுவது சரியென்றாகிவிடும்.// இதில் என்ன சிக்கல்? கலைக்களஞ்சிய முறையில் எழுதப்பட்டால் அப்பாடல்கள் அனைத்தும் ஏற்கத்தக்கவையே.--சோடாபாட்டில்உரையாடுக 09:26, 27 ஏப்ரல் 2012 (UTC)