பேச்சு:பைட்டு
பைட்டு என்பதற்கு எண்ணுண்மி எனலாமே? பிட் என்பது நுண்மி எனலாம்.பிறரின் கருத்தறிய ஆவல்.--த♥ உழவன் +உரை.. 05:26, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆமாம். அவ்வாறே பயன்படுத்தலாம். பிட்டு என்பது இருமி என்றும் பைட்டு என்பது இருமித் தொகுதி என்றும் அழைக்கப்படுவதுமுண்டு. ஆயினும் மேற்கூறிய பெயர்களே பொருத்தமாயுள்ளன (குறிப்பு:இலங்கையில் பிட்டு என்பது பிற்று எனவும் பைட்டு என்பது பைற்று எனவும் அழைக்கப்படுகின்றது.). --மதனாகரன் (பேச்சு) 05:54, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- 'பைனரி டிஜிட்' என்பதின் சுருக்கமே 'பிட்' எனப்படுகிறது. 'பைனரி' என்பது '
- இருமம்
- ' என்றும், 'டிஜிட்' என்பதை '
- இலக்கம்
- ' என்று வைத்துக்கொண்டால்.
- பிட் = இரும இலக்கம் = இதனை 'இருமி' என்று சுருக்கமாகக் கூறலாம்.
- எனவே, 8 x இருமி சேர்ந்தால் =
- எட்டு இருமி
- =
- எண்ணிருமி
- = பைட்
- எனவே 'எண்ணிருமி' என்பதும் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இதனை பிரித்தாலும் பொருள் சரியாக வழங்குகிறது. உங்களின் பதில் கருத்தைக் கூறவும். தீபக் சண்முகம் (பேச்சு) 09:47, 15 ஆகத்து 2024 (UTC)
எண்ணுன்மிகள் \ bytes
[தொகு]*இப்பகுதி ஆலமரத்தடியில் இருந்து, இந்த பொருத்தமான உரையாடற்பகுதிக்கு , தகவலுழவன் என்ற என்னால் மாற்றப்பட்டது. த♥உழவன் (உரை) 06:41, 5 மே 2019 (UTC)
- உமி
- குமி
- துளி < துமி (கம்பன்)
- அம்மி
- இம்மி
- கம் < கம்மி < கம்மியன்
- நேமி
- சேமி
- சாமி
- காமன் – காமி
- கொள் < கொண் < கொண்மு
- பொம் < பொம்மு
- அம் < அம்மு
- இருமு < இருமுதல்
- உரும் = இடி \\ < உருமுமல்
- செருமுதல்
- பொருமு < பொருமுதல் – பிறர் ஆக்கம் கண்டு பொருமுதல்
மி, மு மொழியீறு கொண்டு முடியும் சொற்களை எண்ணுவோம்
bytes என்னும் சொல்லின் பொருளை எண்ணுவோம்
Byte - என்பது ஒரு கணினி அலகு \ அளவீடு
இதனை எண்ணுன்மி என்று மொழியாக்கம் செய்துகொண்டுள்ளோம்
தமிழில் இல்லாத கலைச்சொல்லை "பைட்" என்றே எழுதலாம்
அல்லது பொருள் விளங்குமாறு சொல்லாக்கம் செய்து எழுதலாம் --Sengai Podhuvan (பேச்சு) 19:37, 4 மே 2019 (UTC)
- தமிழாக்கம்
எண்ணுண்மி \ எண் நுண்மி \ எண் உண்மி
என்றோ
எண்ணுமி
என்றோ
பொருள் பொதிவுள்ள சொல்லைப் பயன்படுத்தலாம் --Sengai Podhuvan (பேச்சு) 19:49, 4 மே 2019 (UTC)
- 'பைனரி டிஜிட்' என்பதின் சுருக்கமே 'பிட்' எனப்படுகிறது. 'பைனரி' என்பது 'இருமம்' என்றும், 'டிஜிட்' என்பதை இலக்கம் என்று வைத்துக்கொண்டால்.
- பிட் = இரும இலக்கம் = இதனை 'இருமி' என்று சுருக்கமாகக் கூறலாம்.
- எனவே, 8 x இருமி சேர்ந்தால் = எட்டு இருமி = எண்ணிருமி = பைட்
- எனவே 'எண்ணிருமி' என்பது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கூற்று. தீபக் சண்முகம் (பேச்சு) 09:39, 15 ஆகத்து 2024 (UTC)
எண் நுன்மி \ எண் உன்மி - என்று பிரிக்கும்போது நுன்மி என்பதோ உன்மி என்பதோ பொருள் இல்லாத \ தமிழ் மரபில் இல்லாத ஒன்றாக உள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 22:20, 4 மே 2019 (UTC)
திருத்திக்கொள்வோம் --Sengai Podhuvan (பேச்சு) 22:22, 4 மே 2019 (UTC)
- @Sengai Podhuvan: எண்ணுண்மி - எண்ணுன்மி உங்கள் பரிந்துரை என்ன? மேலே இரண்டும் சரி என்றிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 12:00, 5 மே 2019 (UTC)
- (எண்ணுண்மி) என்பதன் தெளிவுச் சுருக்கமாக எண்ணுமி --Sengai Podhuvan (பேச்சு) 12:44, 5 மே 2019 (UTC)
- ஐந்து மாடு என்றாலே தமிழில் 5 மாடுகளைக் குறிக்கும். எனவே - 5 எண்ணுமி - என்று ‘கள்’ விகுதி சேர்க்காமல் எழுதலாம் --Sengai Podhuvan (பேச்சு) 12:55, 5 மே 2019 (UTC)
- (எண்ணுண்மி) என்பதன் தெளிவுச் சுருக்கமாக எண்ணுமி --Sengai Podhuvan (பேச்சு) 12:44, 5 மே 2019 (UTC)
அலகுகளுக்கு தமிழாக்கம் தேவையில்லை. காண்க கிலோகிராம், ஆம்பியர் என பல வழக்கில் உள்ளன. --AntanO (பேச்சு) 14:37, 5 மே 2019 (UTC)
- ஆன்டன் கருத்தே அடியேன் கருத்தும். இதனை மேலே குறிப்பிட்டுள்ளேன். எண்ணுன்மிகள் என்னும் பிழையான மொழியாக்கம் காணப்பட்டதைத் திருத்திக்கொள்ளவே இத்தனை விளக்கங்கள். "பைட்" என்றே குறிப்பிடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 21:57, 6 மே 2019 (UTC)