பேச்சு:பூப்புனித நீராட்டு விழா

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழுத்தங்களி?[தொகு]

இக்கட்டுரையில் உழுத்தங்களி எனக் குறிபிடப்பட்டுள்ளது உளுந்தில் செய்யப்படும் களியையா? -நரசிம்மவர்மன்10 09:09, 2 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

ஆம் நரசிம்மன், கட்டுரை மேம்படுத்த வேண்டிய ஒன்று. --Umapathy (உமாபதி) 18:41, 2 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]
நான் காலையில் பலருடன் தொலைபேசியின் வினவியதில் அவர்கள் உழுந்து என்றவாறுதான் கூறினார்கள். இணையத்தில் இலவசமாகக் பதிவிறக்கக்கூடியதாகக் கிடைக்கும் பால்ஸ் மின்னகராதியைத் தேடியபொழுது "பார்க்க உளுந்து" என்றவாறு வந்தது. இந்தியாவில் உளுந்து என்றசொல்லைக் கையாளுகின்றார்களோ என்பது தெரியவில்லை அல்லது நான் தான் தவறுதலாக எழுதுகின்றேன் என்றால் நான் கேட்ட அனைவரும் ஏன் உழுந்து என்றவாறு சொன்னார்கள் என்பது தெரியவில்லை. தவிர மைக்ரோசாப்ட் வேட் இல் இரண்டு விதமாகத் தட்டச்சுச் செய்தபொழுதும் சிகப்புக் கோடிடவில்லை. (நான் மைக்ரோசாப்டின் சரிபார்க்கும் கருவியையும் உபயோகிக்கின்றேன்). நானறிந்த வரையில் உளுத்தமா என்றால் பழுதடைந்த மா என்றவாறு பொருள்படும் என்றே கருதுகின்றேன். தவறென்றால் சுட்டிக்காட்டவும் நானும் திருத்திக் கொள்கின்றேன். --Umapathy (உமாபதி) 15:16, 3 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]
உளுந்து, உழுந்து இரண்டும் சரியென்று செல்வா தெரிவித்துள்ளார். உளுத்தங்களி : http://in.tamil.yahoo.com/Recipes/Regional/0703/16/1070316034_1.htm http://in.tamil.yahoo.com/Recipes/Regional/0703/16/1070316032_1.htm -- Sundar \பேச்சு 12:11, 10 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

மேலும் சிலத் தெளிவுகள்[தொகு]

உணவு முறை என்ற உபதலைப்பில் உள்ள நான்காம் சொற்றொடரை சற்று நோக்க:

இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் (ஜீரணிக்கக்) கூடிய ஊட்டநலன் (போசாக்கு) உள்ள சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவேண்டும்.

சத்துள்ள, ஊட்டநலன் உள்ள இரண்டும் ஒரே பொருள் தருபவை தானே? சத்துள்ள என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமல்லவா?

சாமர்த்தியச் சடங்கு -இவ்வுபதலைப்பு சரியா? அல்லது இஃது சமார்த்தியச் சடங்கா?

கட்டுரையில் சிலவிடங்களில் மாமியார் என்றும் மாமி என்றும் குறிக்கப்பட்டுள்ள உறவுகள் வேறுவேறா அஃதில் மாமன் மனைவி என்ற ஒரே முறையைதானா? (பொதுவில் மாமன் மனைவியை மாமி என்றும், கணவனின் தாயை மாமியார் என்றும் குறிப்பிடுவது இங்கே வழக்கு) -நரசிம்மவர்மன்10 09:47, 2 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

நரசிம்மவர்மன், இக்கட்டுரையில் மாமியைத் தான் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். மாமியாரை அல்ல. சத்துள்ள, ஊட்டநலன் இரண்டும் ஒரே கருத்துத் தான். (திருத்தி விடலாம்).--Kanags 13:33, 2 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

நடை மாற்றம்[தொகு]

கட்டுரையை விக்கி நடைக்கு மாற்றிவிட்டு அறிவித்தலை நீக்கியிருக்கிறேன். --மு.மயூரன் 16:17, 10 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

மயூரன் கட்டுரையை நல்ல நிலைக்குக் கொண்டுவந்ததையிட்டு நன்றிகள். :) --Umapathy (உமாபதி) 16:26, 10 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

பூப்பைப் பற்றிய அறிவியலைத் தனிக்கட்டுரை ஒன்றில் விரித்து எழுத வேண்டும். அதற்கு இக்கட்டுரையிலிருந்து இணைப்பு தந்துவிட்டு இங்கு நீராட்டுவிழா என்ற சடங்கைப் பற்றி எழுத வேண்டும். பால் தொடர்பான சமூக நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளைத் தகவல்நோக்கில் மட்டும் தர வேண்டும். தவிர அது நீராட்டு விழாதானே? -- சுந்தர் \பேச்சு 13:58, 9 செப்டெம்பர் 2008 (UTC)