மைக்ரோசாப்ட் வேர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைக்ரோசாப்ட் வேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மைக்ரோசாப்ட் வேட் (விண்டோஸ்)
உருவாக்குனர் மைக்ரோசாப்ட்
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வகை உரையாவண மென்பொருள்
அனுமதி Proprietary EULA
இணையத்தளம் Word Home Page - Microsoft Office Online
மைக்ரோசாப்ட் வேட் (Mac OS X)
உருவாக்குனர் மைக்ரோசாப்ட்
பிந்தைய பதிப்பு 2011
இயக்குதளம் Mac OS X
வகை உரையாவண மென்பொருள்
அனுமதி Proprietary EULA
இணையத்தளம் மாக் இற்கான மைக்ரோசாப்ட் வேர்டு

மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேட் மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் 1983 இல் எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது. பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் டாஸ் இயங்குதளம் (1983), ஆப்பிள் மாக்கிண்டோஷ், SCO யுனிக்ஸ், ஓஸ்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் (1989) இல் அறிமுகமானது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளின் ஓர் பகுதியாகும் இது 2003 ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்து தனியாகவும் சந்தைப் படுத்தப் படுகின்றது.

நிறுவுதல்[தொகு]

நேரடியாகக் கணினிகளில் இறுவட்டின் மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும்.

சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்தல்[தொகு]

ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்த நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2007 இலிருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை பிரித்து நிறுவலில் உள்ள மேம்படுத்தல் எனப்பொருள்படும் Update என்னும் கோபுறைக்குள் போடுவதன் மூலம் நிறுவும் போது தானாகவே மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும்.

சொற்களைத் தேர்வுசெய்ய[தொகு]

  1. ஒரு சொல்லைத் தேர்வுசெய்ய அந்தச் சொல்லில் எங்காவது சுட்டியினால் இரண்டு முறை சொடுக்கவும். இதன்போது அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்துவரும் இடைவெளியும் சேர்ந்து தெரிவுசெய்யப்படும். அச்சொல்லில் அடையாளக் குறியீடுகள் (எடுத்துக்காட்டாக ஆச்சரியக் குறி) அதில் தேர்வுசெய்யப்படாது.
  2. ஒரு வசனத்தைத் தேர்செய்ய விசைப்பலகையில் Ctrl உடன் சுட்டியினால் சொடுக்கவும். இதன்போது அடையாளக் குறியீடுகள் உட்பட அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்து வரும் இடைவெளியும் தேர்வு செய்யப்படும்.
  3. ஒரு பந்தியைந் தேர்வுசெய்ய சுட்டியினால் மூன்றுமுறை சொடுக்கவும். இதன்போது அந்தப் பந்தி உட்பட பந்தி அடையாளமும் தேர்வு செய்யப்படும்.

விசைப்பலகை குறுக்குவழிகள்[தொகு]

கட்டளையின் பெயர் மாற்றுதல் விசைப்பலகை மெனியு
முதலாம்நிலைத் தலையங்கம் Alt+Ctrl+ 1
இரண்டாம்நிலைத் தலையங்கம் Alt+Ctrl+ 2
மூன்றாம்நிலைத் தலையங்கம் Alt+Ctrl+ 3
சன்னப் பட்டியல் (Bullet List) Ctrl+Shift+ L
தடிப்பாக்கல் (Bold) Ctrl+ B
தடிப்பாக்கல் Ctrl+Shift+ B
புக்மார்க் (Bookmark) Ctrl+Shift+ F5 Insert
நகல் எடுக்க/பிரதி பண்ண Ctrl+ C
வடிவமைப்பை நகல் எடுக்க Ctrl+Shift+ C
வெட்ட Ctrl+ X
ஆவணத்தை மூட Ctrl+ W
ஆவணத்தை மூட Ctrl+ F4
ஆவணத்தைப் பெரிதாக்க Ctrl+ F10
இரட்டை அடிக்கோடு இட Ctrl+Shift+ D
ஆவணத்தின் இறுதிக்கு Ctrl+ End
கண்டுபிடிக்க Ctrl+ F
எழுத்துரு Ctrl+Shift+ F
எழுத்துருவின் அளவு Ctrl+Shift+ P
எழுத்துருவைப் பெரிதாக்க Ctrl+Shift+ .
ஒரு அளவாற் எழுத்துருவைப் பெரிதாக்க Ctrl+ ]
உதவி F1
இணைப்பு Ctrl+ K
சாய்வெழுத்து Ctrl+ i
புதிய ஆவணம் Ctrl+ N File
திறக்க Ctrl+ O
திறக்க Ctrl+ F12
ஒட்ட Ctrl+ V
ஒட்ட Shift+ Insert
அச்சிட Ctrl+ P
அச்சிட Ctrl+Shift F12
அச்சு மேலோட்டம் Ctrl + F2
திரும்பச் செய்ய Ctrl+ Y Edit
திரும்பச் செய்ய F4 Edit
திரும்பச் செய்ய Alt+ Return Edit
மாற்ற Ctrl+ H Edit
சேமிக்க Ctrl+ S
சேமிக்க Shift+ F12
சேமிக்க Alt+Shift F2
விதமாக சேமிக்க (Save As) F12 File
எல்லாவற்றையும் தெரிவுசெய்ய Ctrl+ A
எல்லாவற்றையும் காட்ட Ctrl+Shift+ 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_வேர்டு&oldid=2159479" இருந்து மீள்விக்கப்பட்டது