உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரோசாப்ட் வேர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் வேட் (விண்டோஸ்)
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு2010 (14.0.4760.1000) / சூன் 15, 2010; 16 ஆண்டுகள் முன்னர் (2010-06-15)
Preview வெளியீடு2013 Beta (15.0.4128.1014) / சூலை 16, 2012; 13 ஆண்டுகள் முன்னர் (2012-07-16)
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைஉரையாவண மென்பொருள்
உரிமம்Proprietary EULA
இணையத்தளம்Word Home Page - Microsoft Office Online
மைக்ரோசாப்ட் வேட் (Mac OS X)
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு2011
இயக்கு முறைமைMac OS X
மென்பொருள் வகைமைஉரையாவண மென்பொருள்
உரிமம்Proprietary EULA
இணையத்தளம்மாக் இற்கான மைக்ரோசாப்ட் வேர்டு

மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் அக்டோபா 25,1983-ல்[1] எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது.[2][3][4] பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் டாஸ் இயங்குதளம் (1983), ஆப்பிள் மாக்கிண்டோஷ், எஸ். சி. ஓ. யுனிக்ஸ், இயங்கு தளம்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் (1989)-ல் அறிமுகமானது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளின் ஒரு பகுதியாகும். இது 2003ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்து தனியாகவும் சந்தைப் படுத்தப் படுகின்றது.

நிறுவுதல்

[தொகு]

நேரடியாகக் கணினிகளில் இறுவட்டின் மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும்.

சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்தல்

[தொகு]

ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்த நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2007 இலிருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை பிரித்து நிறுவலில் உள்ள மேம்படுத்தல் எனப்பொருள்படும் Update என்னும் கோபுறைக்குள் போடுவதன் மூலம் நிறுவும் போது தானாகவே மேம்படுத்தல்களை நிறுவிக்கொள்ளும்.

சொற்களைத் தேர்வுசெய்ய

[தொகு]
  1. ஒரு சொல்லைத் தேர்வுசெய்ய அந்தச் சொல்லில் எங்காவது சுட்டியினால் இரண்டு முறை சொடுக்கவும். இதன்போது அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்துவரும் இடைவெளியும் சேர்ந்து தெரிவுசெய்யப்படும். அச்சொல்லில் அடையாளக் குறியீடுகள் (எடுத்துக்காட்டாக ஆச்சரியக் குறி) அதில் தேர்வுசெய்யப்படாது.
  2. ஒரு வசனத்தைத் தேர்செய்ய விசைப்பலகையில் Ctrl உடன் சுட்டியினால் சொடுக்கவும். இதன்போது அடையாளக் குறியீடுகள் உட்பட அந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்து வரும் இடைவெளியும் தேர்வு செய்யப்படும்.
  3. ஒரு பந்தியைந் தேர்வுசெய்ய சுட்டியினால் மூன்றுமுறை சொடுக்கவும். இதன்போது அந்தப் பந்தி உட்பட பந்தி அடையாளமும் தேர்வு செய்யப்படும்.

விசைப்பலகை குறுக்குவழிகள்

[தொகு]
கட்டளையின் பெயர்மாற்றுதல்விசைப்பலகைமெனியு
முதலாம்நிலைத் தலையங்கம்Alt+Ctrl+1
இரண்டாம்நிலைத் தலையங்கம்Alt+Ctrl+2
மூன்றாம்நிலைத் தலையங்கம்Alt+Ctrl+3
சன்னப் பட்டியல் (Bullet List)Ctrl+Shift+L
தடிப்பாக்கல் (Bold)Ctrl+B
தடிப்பாக்கல்Ctrl+Shift+B
புக்மார்க் (Bookmark)Ctrl+Shift+F5Insert
நகல் எடுக்க/பிரதி பண்ணCtrl+C
வடிவமைப்பை நகல் எடுக்கCtrl+Shift+C
வெட்டCtrl+X
ஆவணத்தை மூடCtrl+W
ஆவணத்தை மூடCtrl+F4
ஆவணத்தைப் பெரிதாக்கCtrl+F10
இரட்டை அடிக்கோடு இடCtrl+Shift+D
ஆவணத்தின் இறுதிக்குCtrl+End
கண்டுபிடிக்கCtrl+F
எழுத்துருCtrl+Shift+F
எழுத்துருவின் அளவுCtrl+Shift+P
எழுத்துருவைப் பெரிதாக்கCtrl+Shift+.
ஒரு அளவாற் எழுத்துருவைப் பெரிதாக்கCtrl+]
உதவிF1
இணைப்புCtrl+K
சாய்வெழுத்துCtrl+i
புதிய ஆவணம்Ctrl+NFile
திறக்கCtrl+O
திறக்கCtrl+F12
ஒட்டCtrl+V
ஒட்டShift+Insert
அச்சிடCtrl+P
அச்சிடCtrl+ShiftF12
அச்சு மேலோட்டம்Ctrl +F2
திரும்பச் செய்யCtrl+YEdit
திரும்பச் செய்யF4Edit
திரும்பச் செய்யAlt+ReturnEdit
மாற்றCtrl+HEdit
சேமிக்கCtrl+S
சேமிக்கShift+F12
சேமிக்கAlt+ShiftF2
விதமாக சேமிக்க (Save As)F12File
எல்லாவற்றையும் தெரிவுசெய்யCtrl+A
எல்லாவற்றையும் காட்டCtrl+Shift+8

சான்றுகள்

[தொகு]

[5]

  1. "Version 1.0 of today's most popular applications, a visual tour – Pingdom Royal". Pingdom. June 17, 2009. Archived from the original on August 13, 2018. Retrieved April 12, 2016.
  2. A. Allen, Roy (October 2001). "Chapter 12: Microsoft in the 1980s". A History of the Personal Computer: The People and the Technology (1st ed.). Allan Publishing. pp. 12/25–12/26. ISBN 978-0-9689108-0-1. Retrieved November 7, 2010. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  3. "Microsoft Office online, Getting to know you...again: The Ribbon". Archived from the original on May 11, 2011.
  4. "The history of branding, Microsoft history". Archived from the original on May 28, 2009.
  5. Fielder, Lauren (July 22, 2021). "office 2022". downloadct. Retrieved July 22, 2021.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_வேர்டு&oldid=4529884" இலிருந்து மீள்விக்கப்பட்டது