பேச்சு:பாறை மீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரைத் தலைப்பு பொருத்தமானதாக நான் கருதவில்லை. இது ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில், கல் மீன் என்ற பெயரில் உணவுக்காகப் பயன்படுத்தும் மீனினமொன்று உள்ளது. தென்னிலங்கையில் அதனைக் கல் மீன் என்றே பொதுவாக அழைப்பர். நாங்கள் ஏராளமான தடவைகள் அவற்றை உட்கொண்டுள்ளோம். அவ்வினத்தில் எந்த விதமான நச்சுத் தன்மையும் இல்லையென்றே தெரியும். எனினும் அதன் சதை சற்று உரத்துக் காணப்படுவதுடன் நல்ல வெள்ளை நிறமாகவும் இருக்கும். அதன் தோல் மிகவும் தடிப்பாக இருப்பதுடன், செந்நிறமாகக் காணப்படும்.--பாஹிம் (பேச்சு) 15:18, 3 மே 2012 (UTC)[பதிலளி]

இதற்குப் பாறை மீன் எனப் பெயரிடலாம் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:43, 8 மே 2012 (UTC)[பதிலளி]
ஆம். பாறைமீன் என்பதே பொருந்தும். பெரும்பான்மையானவை கடற்பாறைகளில் வசிப்பவை. கட்டுரையை விரிவாக்கி,அவ்விதமே மாற்ற உள்ளேன்.உழவன் (உரை) 02:24, 12 செப்டம்பர் 2016 (UTC)

Y ஆயிற்று--உழவன் (உரை)

தகவலுழவன், பேச்சு:சுக்கான் கண்ணிப் பாரை ஐயும் பாருங்கள். பாரை, பாறை இரண்டும் வெவ்வேறானதா? ஒரே குடும்பமா?--Kanags \உரையாடுக 01:36, 1 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வெவ்வேறு குடும்பங்கள் ஆகும். இது Synanceiidae ஆகும். நஞ்சுள்ள மீன்கள்;நகரா இயல்புடையது. அது உணவு மீன்கள். மிக வேகமாக நீந்தும் இயல்புடையன. பாறை என்பது மருவி பாரை என மாறியதா என ஆராயப்பட வேண்டும். எனவே, பெயர் பெருத்தமுடையதே ஆகும்.--உழவன் (உரை) 01:52, 1 அக்டோபர் 2016 (UTC).[பதிலளி]

Rockfish என்ற தனி இனம் உள்ளது. அதை மொழிப்பெயர்த்தால் பாறை மீன் என்று வரும். தவிர பாரை (trevally) என்பதும் தனி இனம் ஆகும். இலங்கையில் கல்மீன் என்று அழைக்கப்படும் மீனின் ஆங்கிலப் பெயரையோ அல்லது அதற்கான சான்றையோ அளித்தால் அதற்கேற்றபடி புதிய பக்கம் உருவாக்கி குழப்பத்திற்கு தீர்வு காணலாம் என்பது என் கருத்து.Varunkumar19 (பேச்சு) 08:56, 3 பெப்ரவரி 2019 (UTC)

கல் மீன் என நாம் அழைக்கும் மீனினம். Parascolopsis capitinis --பாஹிம் (பேச்சு) 09:51, 3 பெப்ரவரி 2019 (UTC)

தீர்வு கிடைத்துவிட்டது. தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள அந்தக் கட்டுரையில் சிவப்பு கல் மீன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாறை மீன், கல்மீன் போன்ற பெயர்கள் அவற்றின் இனத்தைச் சேர்ந்த பல மீன்களைக் குறிக்கும் பொதுப் பெயர்கள் என்பதால் சிவப்புக் கல்மீன் என்ற பெயரில் புதிய கட்டுரை உருவாக்கவுள்ளேன். இதில் தங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து உள்ளதா?Varunkumar19 (பேச்சு) 14:10, 3 பெப்ரவரி 2019 (UTC)

அப்படியே செய்யலாம். மஞ்சள் கலந்த கறுப்பு, மஞ்சளும் அடிப்பகுதி வெள்ளையும் என வேறு நிறங்களுள்ள கல் மீன் வகைகளும் உள்ளன. அவை உயிரியல் அடிப்படையில் வேறு இனங்களா என்பது தெரியவில்லை. ஆயினும் நாம் பொதுவாக இவ்வினங்களை கல் மீன் என்றே குறிப்பிடுகிறோம்.--பாஹிம் (பேச்சு) 14:36, 3 பெப்ரவரி 2019 (UTC)

நன்றிVarunkumar19 (பேச்சு) 15:01, 3 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாறை_மீன்&oldid=2648135" இலிருந்து மீள்விக்கப்பட்டது