உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நானமா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானமா என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இப்பக்கத்தின் தலைப்பை கத்தூரி மான் (அ) கஸ்தூரி மான்(வழிமாற்றமாக) என மாற்றக் கோருகிறேன். கவரிமா பக்கத்தில் உரையாடலைக் காண்க. [1]--பரிதிமதி (பேச்சு) 05:44, 13 ஏப்ரல் 2012 (UTC)

நானமா என்ற தமிழ்த் தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 14:25, 9 மே 2012 (UTC)[பதிலளி]

பொதுவாக மா என்பது அனைத்து விலங்கினத்தையும் குறிக்கும் பொதுச்சொல். நானமா என்பது கேள்விப்படாத பெயராகவே உள்ளது. இலங்கை வழக்கா? ஆதாரம் தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:00, 9 மே 2012 (UTC)[பதிலளி]

அகரமுதலியில் பார்த்தேன். இவ்விணைப்புகளைப் பாருங்கள்.
  1. தொடுப்பு 1
  2. தொடுப்பு 2 --மதனாகரன் (பேச்சு) 02:57, 10 மே 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி மதனாகரன். கத்தூரி மான் என்பது காரணப்பெயர்.. ஆயினும் அனைவரும் ஓரளவு அறிந்த பொதுப்பெயர்களில் தலைப்புகள் இருப்பின் தேடுதலுக்கு எளிமையாக இருக்கும். அதற்காக வழிமாற்று ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை. கட்டுரையின் உட்பகுதியில் மட்டும் இப்பெயரைச் சேர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:54, 10 மே 2012 (UTC)[பதிலளி]

நானமா என்பதும் காரணப் பெயரே. நானம் என்பது கத்தூரியைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். விக்சனரி இணைப்பைப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:17, 10 மே 2012 (UTC)[பதிலளி]

மா என்பது அனைத்து விலங்கினத்தையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகும். மேலும் நானம் என்பது ஞானம், ஸ்நானம் உள்ளிட்ட பல பொருள்களைத் தரும் சொல்லாகும். தவிர கத்தூரி மஞ்சள் என்ற தலைப்பில் ஒரு பக்கம் உள்ளது. எனவே கத்தூரி மான் என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும். Varunkumar19 (பேச்சு) 12:54, 1 மார்ச் 2019 (UTC)
இது ஏற்கெனவே விக்கித்தரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்த்துவதானால் வரலாற்றுடன் நகர்த்தப்படல் வேண்டும். --A-wiki-guest-user (பேச்சு) 09:24, 6 மார்ச் 2019 (UTC)
@செல்வா:--Kanags (பேச்சு) 10:01, 6 மார்ச் 2019 (UTC)

@மதனாஹரன்: குறிப்பிட்டது போல நானம் என்பது மணம், கத்தூரி என்னும் பொருள் உள்ள சொல். பயனர் மதனாகரன் தான் நானமா எனப்பெயர் மாற்றியுள்ளார். "நானங் கலந்திழியு நன்மலைமேல்வாலருவி (ஐந். ஐம். 13).", "நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவர்(சீவக. 92).", "நானங்கமழுங் கதுப்பினாய் (நாலடி, 294).", "தேமார்ந்தநானந் தோய்த்து (சீவக. 1652)." ஆகிய இலக்கிய சான்றுகள் "மணம்", நறுமனம்" என்னும் பொருள்களில் ஆளப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. ஆனால் குளியல் என்னும் பொருள்கொண்ட சமற்கிருதச்சொல்லான स्नान (ஸ்நாந) என்பதிலிருந்து வந்ததாகத் தென்படுகின்றது. குளியல் என்பதே பொருள் எனினும், மோனியர் வில்லியம்சு சமற்கிருத அகராதியில் தந்துள்ளவாறு "anything used in ablution (e.g. water , perfumed powder &c ) Ka1v. VarBr2S. Vet. BhP." என்னும் கிளைப்பொருள்வழி கமழ்தல், நறுமணப்பொடி கலந்த நீர்-நீரில் குளித்தல் என்னும் பொருள்வழி நானம் என்பது மணப்பொருள், கத்தூரி என்னும் பொருள் பெற்றதாகத் தோன்றுகின்றது. கத்தூரி மான் என்ற பெயர் பொதுவாகக் கேள்விப்பட்ட சொல். எனவே அதனை இடுவதில் சிக்கல் இல்லை. நானமா என்பதும் பொருந்தும். புதிய சொல் வேண்டுமெனில் கமழ்மான், மணமான் எனறும் பெயர் சூட்டலாம். கட்டுரையினுள் கத்தூரிமான் என்று இப்பொழுதிருப்பதுபோலவே சொல்லலாம். கத்தூரிமான் என்பதை எல்ளோரும் ஏற்றால் மாற்றலாம். தமிழ்ப்பெயரில் இருப்பது நல்லது என்றால் கமழ்மான், மணமான் என்பதைப் பரிந்துரைப்பேன் நானமா என்பதும் தமிழ்வேரானதாக இல்லாததுபோல் தோன்றுவதால் இப்பரிந்துரை.--செல்வா (பேச்சு) 12:58, 6 மார்ச் 2019 (UTC)

கத்தூரி மான் என்றிருப்பதே நன்று. பொது வழக்கிலுள்ள சொல் சிக்கலானதாக அல்லது தமிழ் முறைக்கு ஒவ்வாததாக இருந்தால் மாத்திரமே மாற்ற வேண்டும். பொது வழக்கிலுள்ள சொற்களே பொதுவாகவும் சிறப்பாகவும் விளங்கிக் கொள்ளப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 13:12, 6 மார்ச் 2019 (UTC)

கத்தூரி மான் என்றே தலைப்பு இருப்பதில் எனக்கு மறுப்பேதுமில்லை. தமிழில் விளங்குமாறு பெயர் வேண்டுமெனில் கமழ்மான், மணமான் என்றொன்றை இடலாம். கத்தூரி மான் என்றே மாற்றிவிடட்டுமா?--செல்வா (பேச்சு) 15:08, 12 மார்ச் 2019 (UTC)
@செல்வா: ஆம், கத்தூரிமான் என (ஒரே சொல்லாக?) மாற்றலாம்.--Kanags (பேச்சு) 08:10, 13 மார்ச் 2019 (UTC)

இரு சொற்களாக கத்தூரி மான் என்று இருந்தாக வேண்டும். புணர்த்துவதற்கான அடிப்படை எதுவும் இங்கு கிடையாது.--பாஹிம் (பேச்சு) 08:16, 13 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நானமா&oldid=2674822" இலிருந்து மீள்விக்கப்பட்டது