பேச்சு:திருவள்ளுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை

இதர தனிக் கட்டுரையில் இருந்த தகவல்கள்[தொகு]

திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள். திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் அளவுக்கு உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார்


படிமம்:கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை

மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்


திருவள்ளுவர் திருக்குறளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதனால் திருக்குறள் முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.

அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துபால்

என்பவையே அந்த மூன்று பெரும் பிரிவுகள் ஆகும்.


திருவள்ளுவர் சிலை வடிவமைப்பின் விளக்கம் திருவள்ளுவர் சிலையின் அளவுகள்

சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டிள்ள சிலையின் உயரமே 95 அடி பிரமாண்டம்! மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம்!!

சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம்

பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும் இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் 'வள்ளுவமாகவே' சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலைகான கற்களை ஈந்த மலைகள்

சிறுதாமூர், பட்டுமலைக்குப்பம் மலைகள், அம்பாசமுத்திரம் மலைகள்

சிலைப் பற்றிய முக்கிய விவரங்கள்

  * சிலையின் உயரம் 95 அடி
  * பீடத்தின் உயரம் 38 அடி
  * சிலையும் பீடமும் சேர்த்து 133 அடி
  * முகத்தின் உயரம் 10 அடி
  * உடல் பகுதியின் உயரம் 30 அடி
  * தொடைப்பகுதியின் உயரம் 30 அடி
  * கால் பகுதியின் உயரம் 20 அடி
  * உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்த்து 10 அடி
  * கைத்தவம் 10 அடி
  * சுவடியின் நீளம் 10 அடி
  * தோள்பட்டையின் அகலம் 30 அடி
  * ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுசுவர் 60 அடி
  * ஒவ்வொன்றும், 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட 10 யானைகள்
  * ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்


வள்ளுவர் தன்னுடையத் திருக்குறள் புத்தகத்தைப் பாண்டிய சபைபில் ஔவையின் உதவியுடன் சமர்ப்பித்ததும் வரலாற்றின் வாயிலாக அறியப்படுகிறது


திருக்குறள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கத்துடன் படிக்க இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்

திருவள்ளுவர் சிலை[தொகு]

இங்கு திருவள்ளுவர் சிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது திருவள்ளுவருடையது தான் என்பதற்கு ஆதாரம் என்ன? சங்க காலத்தில் அவரது படமோ சிலையோ இருந்ததா? இல்லாவிடன் தற்போது இருப்பது எப்படி அவரது சிலையாகும்? கடந்த நூற்றாண்டில் யாரோ ஒருவரின் கற்பனையில் உதித்ததே அவ்வுருவம் என்பதே தவிர அது திருவள்ளுவர் எனக் காட்டுவதற்குரிய சான்றுகளேதும் இல்லை. எனவே, அப்படங்களைக் கட்டுரையிலிருந்து நீக்க வேண்டும். திருவள்ளுவர் சிலை என்பதும் திருவள்ளுவரெனக் கற்பனை செய்யப்பட்ட சிலை என்பதும் வெவ்வேறு அல்லவா? அவருடைய உண்மையான தோற்றம் அறியப்படாதிருக்கும் போது யாரோ ஒருவருடைய கற்பனையில் உதித்த உருவத்தை அவருடையது என்று சொல்வது அவரை இழிவுபடுத்துவதே தவிர வேறில்லை.--பாஹிம் (பேச்சு) 13:09, 28 ஆகத்து 2012 (UTC)

உங்கள் கருத்துக்களில் நியாம் உள்ளன. ஆதாரம் குறித்து மேலதிக தெளிவு இருந்தால் நன்று. மரபு நோக்கில் இவ்வாறே உருவப்படுத்தப்படுகிறார். இவ்வாறன முடிவுகளை நாம் எடுக்காமல் வரலாற்றாளர்களுக்கு விட்டுவிடுவதே நன்று. இல்லாவிடின் சேக்சுபியர் படம் இதுதானா போன்ற கேள்விகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிவரும். --Natkeeran (பேச்சு) 13:26, 28 ஆகத்து 2012 (UTC)
பாஹிம், அவ்வாறு பார்க்கின் 'திருவள்ளுவர் என ஒருவர் இருந்தாரா?' 'அவர்தான் திருக்குறளை எழுதினாரா?' என பல அடிப்படைக் கேள்விகள் எழலாம். திருக்குறள் என அறியப்படும் ஒரு செய்யுள் தொகுப்பை எழுதிய படைப்பாளியை நாம் திருவள்ளுவர் என்ற பெயரால் குறிக்கிறோம். அவ்வளவே. குறள் எழுதிய படைப்பாளியை திருக்குறலாளன் என்றோ திருக்குறலோன் எனவோ காரணப் பெயராக வைக்காமல் எவ்வாறு 'திருவள்ளுவன்/ர்' என்று இடுகுறியாய் அறியப்படுகிறாரோ அதேபோல்தான் இதுவும். அந்த பெயர் எப்படி 'கற்பனையாக' வைக்கப்பட்டதோ. அதே போல் தான் இந்த சிலையும். // தற்போது இருப்பது எப்படி அவரது சிலையாகும்? // இந்தக் கேள்வியை இங்கு கேட்பது பொருத்தமன்று. மேலும் இந்தக் கட்டுரை திருவள்ளுவர் சிலை என்று அனைவராலும் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட' கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிலை குறித்த கட்டுரைதான். தயவு செய்து இதில் தர்க்கம் தவிர்க்கவும். --எஸ்ஸார் (பேச்சு) 15:30, 28 ஆகத்து 2012 (UTC)

எஸ்ஸார், நீங்கள் எப்படி அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதெனக் கூறலாம்? திருவள்ளுவரின் படமோ சிலையோ சங்க காலத்தில் இருந்து வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பின் மாத்திரமே அதை ஏற்கலாம். மாறாக, யாரோ ஒருவரின் கற்பனையில் உதித்த உருவத்தைத் திருவள்ளுவரென ஏற்க முடியாது. அவர் இந்தச் சிலையில் உள்ளதற்கு முற்றிலும் மாற்றமான தோற்றத்தில் இருந்திருப்பின், இச்சிலை நிச்சயமாக அவரை இழிவுபடுத்துவதே தவிர வேறில்லை. இது அவருடைய சிலையா என்று கேட்பது பொருத்தமில்லாவிடின் அவருடைய சிலைதான் என்று சொல்வதும் பொருத்தமில்லை. திருவள்ளுவரை மேன்மைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவரை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது. நான் கேட்பதெல்லாம் வரலாற்று ஆதாரம் மட்டுமே. வெறுமனே எவருடையவும் கற்பனை ஆதாரத்தையல்ல.--பாஹிம் (பேச்சு) 00:14, 29 ஆகத்து 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவள்ளுவர்&oldid=1198488" இருந்து மீள்விக்கப்பட்டது