பேச்சு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள்
Appearance
பின்வரும் மொழிபெயர்ப்புக்களைக் கவனிக்க வேண்டும்:
- State - அரசு (இது இந்தியாவில் மாநிலங்களைக் குறிக்கப் பயன்பட்டாலும் பொதுவாக State of Qatar, State of Kuwait என்பன போன்று அரசு என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இலங்கையில் உயர்தர வகுப்புக்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அரசறிவியல் பாடத்தில் State என்பதை அரசு என்றுதான் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக் காட்டாக, அரசு (state) என்பது வேறு அரசாங்கம் (government) என்பது வேறு என்னும் கூற்றைக் குறிப்பிடலாம்.)
- Government - அரசாங்கம்
- State of Tamil Nadu - தமிழ்நாடு அரசு
- Governemnt of Tamil Nadu - தமிழ்நாட்டு அரசாங்கம்
இதனடிப்படையில் Tamil Nadu government's organizations என்பதைத் தமிழ்நாட்டு அரசாங்க அமைப்புக்கள் என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 08:00, 6 நவம்பர் 2012 (UTC)
- அப்படியெனில் இங்குள்ள தமிழ்நாடு அரசு என்பதை தமிழ்நாடு அரசாங்கம் என மாற்ற வேண்டும் என்கிறீர்களா? நானறிந்தவரை en:wikt:state என்பது மாநிலம் என்பதனையும் , அரசு என்பதனையும் குறிக்கும், அவ்வாறிருக்கும் போது State of Tamil Nadu என்பது இங்கு தமிழ்நாடு மாநிலம் எனவும் Governemnt of Tamil Nadu தமிழ்நாடு அரசு/அரசாங்கம் என்பதையும் எனவும் பொருள் படும் என கருதுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 12:15, 6 நவம்பர் 2012 (UTC)
- அரசு, அரசாங்கம் இரண்டும் ஒன்றே. State of Tamil Nadu தமிழ்நாடு மாநிலம். United States of America ஐக்கிய அமெரிக்க நாடுகள்.--Kanags \உரையாடுக 12:53, 6 நவம்பர் 2012 (UTC)
- நண்பர்களே தலைப்பு மாற்ற பேசும் அதற்கான மேற்கோள்களும் ஏற்புடையதே.
- ஆயினும் பொதுவாக பேசும் பொழுதோ, வலைதளத்தில் தேடும்பொழுதோ, "தமிழ் நாடு அரசு/ அரசின் / அரசினர் மற்றும் தமிழக அரசு/ அரசின் / அரசினர்" என்றே வழக்கத்தில் பயன்படுத்துவார்கள் (குறிப்பாகா தமிழக்கத்தில் இருப்பவர்கள். அதுவும் பெரும்பான்மையோர்).
- வெளிநாடுகளில் / அயலகத்தில் அதிக காலம் இருந்தோர் மட்டுமே தமிழ்நாட்டு அரசாங்கம் / ராஜாங்கம் என்று அதிகமாக அழைப்பர்
- மேலும் தமிழக்கத்தில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கம் / தமிழக அரசாங்கம் என்னும் சொற்களை சில இடங்களிலேயே அதுவும் குறைவாககே பயன்படுத்துவார்கள்
- அப்படி மேலும் நீங்கள் "தமிழ்நாட்டு அரசாங்க அமைப்புக்கள்" என்னும் தலைப்பை கொண்ட கட்டுரை வேண்டும் என்று விரும்பினால், தமிழ்நாட்டு அரசாங்க அமைப்புக்கள் என்னும் கட்டுரையை உருவாக்கி, "redirect தமிழ்நாட்டு அரசாங்க அமைப்புக்கள் ---> to தமிழ்நாடு அரசின் அமைப்புகள்" ---> இப்படி திருப்ப மாற்றம் (redirect) செயுங்கள்
- தமிழ்நாடு அரசின் அமைப்புகள் என்னும் தலைப்பை பெயர் மாற்றம் (rename) மற்றும் தமிழ்நாடு அரசின் அமைப்புகள் என்னும் தலைப்பை கொண்ட கட்டுரையை உருமாற்றம் (redirect, merge, delete) செய்யவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்
நன்றி கருப்பன்.முனியப்பன் Muniyankaruppan (பேச்சு) 13:08, 6 நவம்பர் 2012 (UTC)
- நான் உண்மையில் சுட்டிக்காட்ட விரும்பியது தமிழ்நாடு அரசு என்று தமிழ்நாட்டு அரசு/அரசாங்கம் என்பதைக் குறிப்பிடுவதைத்தான். அத்துடன் யாரும் இந்தியா அரசு என்று கூறுவதில்லை. இந்திய அரசு என்றுதானே கூறுகின்றனர். அவ்வாறேதான் தமிழ்நாட்டு ... என்றிருக்க வேண்டும். உடைமையைக் குறிக்கும் போது தமிழ்நாட்டு ... என்று குறிப்பிடுவதே சரி. இந்தியா என்பது இந்திய என்று பல்வேறு இடங்களிலும் எவ்வாறு மாறுகிறதோ, தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டு என்று மாற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:35, 7 நவம்பர் 2012 (UTC)
வார்ப்புரு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் - "நீக்கல் பரிந்துரையை" நீக்க கோரி
[தொகு]தற்பொழுது சிறு மாற்றங்கள் செயப்பட்டுளது. மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும்.............நன்றி கருப்பன்.முனியப்பன் Muniyankaruppan (பேச்சு) 06:33, 13 நவம்பர் 2012 (UTC)