பேச்சு:சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீட்டு குறித்த நம்பிக்கை நாட்டுப்புறங்களில் மட்டுமில்லை. நகர்ப்புறங்களிலும் உள்ளனவே? இந்து சமய நம்பிக்கைகள் எனக் கொள்ளலாமா? -- சுந்தர் \பேச்சு 06:57, 13 பெப்ரவரி 2012 (UTC)

தீட்டு, தீண்டத் தகாதவை, அண்மியமாகத் தகாதவை என்ற பொருளுடையது என எண்ணுகின்றேன். ஆங்கிலேய ஆட்சியில் கறுப்பின மக்களுடன் வெள்ளையின மக்கள் இத்தகைய தீட்டு மனநிலையுடன் பழகியதாக குறிப்புகளைப் படிக்கின்றோம். ஆகவே இந்து மதத்திற்கு மட்டும் இதை வரையறுத்துவிட முடியாது.--சஞ்சீவி சிவகுமார் 07:12, 13 பெப்ரவரி 2012 (UTC)
தீட்டு என்பதற்கு வேறு பொருள் இல்லாவிட்டால் தலைப்பைத் தீட்டு என்றே வைக்கலாம்.--Kanags \உரையாடுக 07:19, 13 பெப்ரவரி 2012 (UTC)
ஆம், வேறு யாருக்கும் மறுப்பில்லையென்றால் தலைப்பை தீட்டு என மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 09:31, 13 பெப்ரவரி 2012 (UTC)
மற்றுமொரு விடயம். மரணம் முதலான நிகழ்வுகளால் ஏற்படும் தீட்டு சாதிய அடிப்படையில் ஒவ்வொரு வருணத்தாருக்கும் வகுக்கப்பட்டு இலங்கையில் சாதிமுறைகூறும் கல்வேட்டில் காட்டப்பட்டுள்ளது என அறிந்தேன். தேடிப்பார்த்துவிட்டு எழுதுகிறேன். தமிழ்நாட்டு நடைமுறைபற்றியும் குறிப்புகள் இருந்தால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் 10:52, 13 பெப்ரவரி 2012 (UTC)

தீட்டு என்பது பிறப்பு மற்றும் இறப்பு குறித்த வாழ்க்கை வட்டச் சடங்குகள் காரணமாக அனுசரிக்கப்படும் ஒரு விலக்கு. இது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அனுசரிக்கப்படும் விலக்காகும். இது முற்றிலும் மரபு மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த நடைமுறை எனலாம். மதப் பிரிவுகள் இதனை வலியுறுத்துகிறதா என்று தெரியவில்லை. கருட புராணத்தில் இது பற்றிப் பேசப்பட்டுள்ளது என்று அறிகிறேன். நாட்டுப்புறமே நகர்ப்புறமாகியுள்ளது. நகர்ப்புற நடைமுறைகளுக்கு நாட்டுப்புற மரபுகளும் நம்பிக்கைகளுமே ஆதாரம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது சுந்தர் வினவிய கேள்விக்கான பதில்.

தீட்டு என்றால் விலக்கு என்பது நான் ஏற்கும் விளக்கம். இது சாதீயத் தீட்டாகாது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான தற்காலிக விலக்கு. இது மரபு மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த நடைமுறை. Recall and precision என்பவை தகவல்களைத் தேட பயனர் பயன்படுத்தும் சொற்றோடர்கள் (Search Terms). துல்லியம் (precision) மிகுந்தால் திரும்ப அழைத்தல் (Recall) திறனிழக்கும். இது போல திரும்ப அழைத்தல் (Recall) மிகுந்தால் துல்லியம் (precision) திறனிழக்கும். தீட்டு என்பது வெகுசனச் சொல். இதில் Recall and precision ஆகிய இரண்டு கூறுகளும் உள்ளன. இது சஞ்சீவி சிவகுமார் வினவிய கேள்விக்கான பதில்.
முடிவு தங்களுடையது. −முன்நிற்கும் கருத்து Iramuthusamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விளக்கத்துக்கு நன்றி, இராமுத்துசாமி. அப்படியெனில் (இன்றைய சூழலில் நகர்ப்புறங்களிலும் இருப்பதால்) கட்டுரையைத் தீட்டு அல்லது தீட்டு நம்பிக்கைகள் என்று மட்டும் அழைக்கலாமா? மேலும் ஒரே தலைப்பில் பல்வேறு கட்டுரைகள் இருக்கும்போது தான் வேறுபாட்டுக்காக இப்படி அடைப்புக் குறிகளில் பெயரடைகளைத் தருவது வழக்கம். -- சுந்தர் \பேச்சு 13:23, 13 பெப்ரவரி 2012 (UTC)

சுந்தர் ஒப்பமிடாமைக்கு மன்னிக்கவும். சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் என்ற தலைப்பை ஒப்புகொள்கிறேன். நன்றி--Iramuthusamy 15:04, 13 பெப்ரவரி 2012 (UTC)

ஆம் இராமுத்துசாமி. 'தீட்டு' என்பதை தீண்டாமை மற்றும் சாதீய நடைமுறைகளுடன் சேர்த்துப் பார்ப்பது குழப்பத்தைத்தான் தரும். ஆயினும் இந்துமதத்திற்கு மட்டும் உரிய ஒன்றாகவும் மூடநம்பிக்கையாகவும் இதைப் பார்க்கமுடியாது. சில இடங்களில் இவை வெறும் நம்பிக்கை என்ற நிலையை தாண்டிய நடைமுறைகளாகவும் உள்ளது. தீட்டு என்பது குற்றம், விலக்கு, தொடக்கு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.--சஞ்சீவி சிவகுமார் 06:48, 14 பெப்ரவரி 2012 (UTC)
சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் சரியாகவுள்ளது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:46, 14 பெப்ரவரி 2012 (UTC)

சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் என்ற தலைப்பு எனக்கு சரியானதாகப்படுகிறது. மாற்ற சம்மதிக்கிறேன் --Iramuthusamy 15:14, 14 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு சுட்டிக்காட்டல்![தொகு]

வணக்கம் சஞ்சீவி சிவகுமார்!
நிகழ்வுகளும் தீட்டுக்களும் எனும் தலைப்பின்கீழ் எழுதப்பட்டுள்ள கடைசி 2 தகவல்கள், கட்டுரையில் உள்ள மற்ற தகவல்களோடு சம்பந்தமில்லாமல் இருப்பதாக நான் கருதுகிறேன். நீங்கள் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, உரியதைச் செய்யவும். என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 17:07, 14 பெப்ரவரி 2012 (UTC)

நன்றிகள் செல்வசிவகுருநாதன். நீக்கிவிட்டேன்.--சஞ்சீவி சிவகுமார் 23:14, 14 பெப்ரவரி 2012 (UTC)
வயதுக்கு வந்து விட்டால் குறிப்பிட்ட காலம் வரை தீட்டு. மாதவிலக்கு வந்தால் தீட்டு. --குறும்பன் 21:42, 14 பெப்ரவரி 2012 (UTC)