பேச்சு:கே. டி. ருக்மணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையை கே. டி. ருக்மிணி என நகர்த்த பரிந்துரைக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:25, 27 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் இக்கட்டுரையின் மேற்கோள் பக்கங்களில் கே. டி. ருக்மணி என்றே உள்ளதே --அருளரசன்Arulghsr (பேச்சு) 03:57, 27 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் ராண்டார் கை எழுதிய கட்டுரைகளில் எல்லாம் Rukmini என்றுதான் எழுதியிருக்கிறார். எனினும் வேறு இடங்களிலும் பார்த்துவிட்டு, ஒரு முடிவுக்கு வரலாம். மற்ற வழிகள்: 1. அந்தக் காலத்து சுவரொட்டிகள், 2. அந்தக் காலத்து பாட்டுப் புத்தகங்கள், 3. பிற எழுத்தாளர்களின் கட்டுரைகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:14, 27 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தமிழில் கே. டி. ருக்மணி என்பது தான் சரியானது. ருக்மிணி என்று எழுதுவது வடமொழித் தாக்கம், அதுவே ஆங்கிலத்திலும். என்னிடமுள்ள சில ஆவணங்களில் ருக்மணி என்று தான் பதியப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:10, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@Uksharma3:, தங்களின் கருத்தும் இங்கு தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:34, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Proper name என்று சொல்லப்படும் பெயர்ச்சொல்லுக்கு இலக்கணம் கிடையாது. இந்த விதி எந்த மொழிக்கும் பொருந்தும். அதிலும் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை அவர் எப்படி எழுதுகிறாரோ அதையே பின்பற்ற வேண்டும். Dale Carnegie யின் கூற்றுப்படி ஒரு நபருக்கு அவரது பெயர் மிக முக்கியமானது. ஆகவே அவர் தன் பெயரை எப்படி எழுதுகிறாரோ அதன்படியே மற்றவர்களும் எழுதுவது தான் சரி. சிலருக்குப் பிறப்புச் சான்றிதழிலே தவறுதலாக பெயர் எழுதப்பட்டுவிட்டால் கூட அதுவே அவர் பெயராகிவிடும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூற விரும்புகிறேன். யாழ்ப்பாணத்திலே சுமார் 60 வருடங்களுக்கு முன் ஒரு வைத்திய நிபுணர் இருந்தார். அவர் பெயர் வாலு பிள்ளை. வேலு பிள்ளை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்த ஆங்கில அதிகாரி Valupillai என எழுதிவிட்டார். அதன் காரணமாக அவர் வாழ்நாள் முழுவதும் வாலு பிள்ளையாகவே இருந்தார்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் தன் பெயரை எப்படி எழுதியிருப்பாரென்று தெரியவில்லை.
இந்தியாவில் எந்த ஆங்கில பத்திரிகையிலும் Rukmini என்றே எழுதுவார்கள். தமிழில் பலரும் ருக்மணி என்றே எழுதுகிறார்கள். ரங்கா ராவ் என்பதை ரங்கராவ் என எழுதுவது வழக்கமாக இருக்கிறது. இதுபோல தமிழில் பல பெயர்கள் தவறாக எழுதப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
ருக்மிணி என்பது தான் சரியான பெயர். தமிழ் இலக்கண மரபுப்படி எழுதுவதானால் உருக்குமணி என்று எழுத வேண்டும். அப்படி எழுதுபவர்களை நான் கண்டிருக்கிறேன்.
இங்கே இன்னொரு கட்டுரை ருக்மணி லட்சுமிபதி என்பது வழிமாற்றப்பட்டு ருக்மிணி லட்சுமிபதி என உள்ளது. --UKSharma3 10:36, 31 அக்டோபர் 2016 (UTC)

என்னிடமுள்ள சில 50ஆம் ஆண்டு நூல்களில் கே. டி. ருக்மணி என்றே எழுதியுள்ளார்கள்.--Kanags \உரையாடுக 11:08, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
இது ஒரு பெயர்ச்சொல். இதற்கு விவாதம் வேண்டாம் என்பது என் கருத்து. அவரவருக்கு எப்படி விருப்பமோ அப்படி எழுதலாம். ருக்மிணி, ருக்மணி இரண்டுமே தமிழ்ச் சொற்கள் அல்ல. மகாபாரதமே வடமொழி நூல் தான். கிருஷ்ணனின் மனைவி ருக்மிணி என்பதை வைத்துத் தான் ருக்மிணி பெயர் வைத்தார்கள். கிருஷ்ணனைக் கண்ணனாக்கியது போல ருக்மிணியை ருக்மணி என எழுதட்டுமே. ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழில் ர, ல வரிசை எழுத்துகளில் சொற்கள் தொடங்கக்கூடாது என்பது இலக்கண விதி. ர, ல வரிசையில் பெயர் வந்தால் முன்னால் அ, இ, உ என உயிரெழுத்து வரவேண்டும். அதனால் தான் ரத்தம், லட்சம் போன்ற வேறு மொழிகளிலிருந்து வந்த சொற்கள் இரத்தம், இலட்சம் என எழுதப்பட வேண்டும். அந்த வகையில் உருக்குமணி என எழுதுவதே சரியான தமிழ் இலக்கண மரபு. UKSharma3 03:08, 1 நவம்பர் 2016 (UTC)
கே. டி. ருக்மணி தனது பெயரை எவ்வாறு எழுதினார் என்பதே முக்கியம். அவர் ருக்மிணி என எழுதியிருந்தால் அவ்வாறே நாமும் எழுதலாம்.--Kanags \உரையாடுக 06:35, 1 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._டி._ருக்மணி&oldid=2137778" இலிருந்து மீள்விக்கப்பட்டது