பேச்சு:குரிட் கட்மேன்
Appearance
மொழிபெயர்ப்பு
[தொகு]@பிரயாணி: அறிமுகப் பந்தி இவ்வாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும்: குரிட் கட்மேன் (Gurit Kadman, எபிரேயம்: גורית קדמן; 2 மார்ச் 1897 - 27 மார்ச் 1987) ஒரு இசுரேலிய நாட்டுப்புற நடனப் பயிற்றுவிப்பாளரும், நாட்டுப்புற நடன அமைப்பாளரும் ஆவார், இவர் இசுரேலிய நாட்டுப்புற நடனத்தின் தாயாகக் கருதப்பபட்டு கொண்டாடப்படுகிறார்.
மற்றும் என்ற சொல்லை முடிந்த வரையில் கட்டுரைகளில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அவர் என்பதற்குப் பதிலாக இவர் என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:11, 2 மார்ச் 2023 (UTC)
- கற்றுக்கொடுத்ததற்கு மிகவும் நன்றி. மாற்றி விடுகிறேன். இனிவரும் கட்டுரைகளிலும் இதை பயன்படுத்திக்கொள்கிறேன், பிரயாணி (பேச்சு) 07:17, 2 மார்ச் 2023 (UTC)
மேலும் பார்க்கவும்
[தொகு]ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது, இல்லாத கட்டுரையை இங்கு பட்டியலிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணம்: இஸ்ரேல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்.
போட்டிகள், விக்கியின் தரத்தை உயர்த்தவேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 2 மார்ச் 2023 (UTC)