குரிட் கட்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரிட் கட்மேன் தன் மகனுடன்

குரிட் கட்மேன் (Gurit Kadman, எபிரேயம்: גורית קדמן‎; 2 மார்ச் 1897 - 27 மார்ச் 1987) ஒரு இசுரேலிய நாட்டுப்புற நடனப் பயிற்றுவிப்பாளரும், நாட்டுப்புற நடன அமைப்பாளரும் ஆவார். இவர் இசுரேலிய நாட்டுப்புற நடனத்தின் தாயாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கெர்ட்ரூட் (கெர்ட்) லோவென்சுட்டீன் (பின்னர் குரிட் காட்மேன்) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், செருமனியின் லைப்சிக்கில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தின் பின்னணி பிராகாவிலிருந்து வேர் பரப்பியிருந்தது. இளமைப் பருவத்தில், இவர் வாண்டர்வோகல் என்ற செருமானிய இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார்.[1]

1919 ஆம் ஆண்டில், இவர் லியோ காஃப்மேனை மணந்தார். இத்தம்பதியினர் யூதர்களுக்கான புளூ வெயிசு சியோனிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினர். அத்துடன் பாலத்தீனத்தில் குடிபெயர்ந்து வாழும் சமூக இனக்குழு வாழ்க்கை முறைக்காக வேளாண்மைப் பயிற்சிகளையும் அதன்கீழ் மேற்கொண்டனர். இவர்கள் இசுரேலிற்குச் செல்வதற்கு முன்பாக ரபாயெல் என்ற மகன் பிறந்தார்.

1920 ஆம் ஆண்டில், கட்டளைப் பலத்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். முதலில் அடேராவுக்கு அருகில் அமைக்கப்பட்ட, எஃப்ட்சிபா என்ற குடியிருப்பை நிறுவியவர்களில் இத்தம்பதியரும் ஒருவர். இங்கு அவர்களின் மற்றொரு மகனான அம்னோன் பிறந்தார். பின்னர் செசுரீல் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட இடத்தில் நிரந்தரமாகக் குடியேறினர். அவர்கள் குடும்பப் பெயரை காட்மேன் என்றும் முதற்பெயரை கெர்ட்டிலிருந்து குரிட் என்றும் மாற்றிக் கொண்டனர்.[2]

1925 ஆம் ஆண்டில், அவர் தனது கணவருடன் ஆஸ்திரியாவில் ஒரு கல்விப் பணியில் சேர்ந்தார். அங்கே அவர்களின் மகள் அயலா பிறந்தார். அந்த கல்விப்பணி முடிந்து அவர்கள் திரும்பியதும், ஹிஸ்டாட்ரட் என்ற தேசிய தொழிற்சங்க மையத்தில் லியோ வேலை செய்தார். 1931 ஆம் ஆண்டில், அவர்கள் குடும்பம் கிபூட்ஸை விட்டு வெளியேறி டெல் அவிவ் நகரத்திற்கு குடியேறியது.

விருதுகளும் பெருமைகளும்[தொகு]

  • 1981 இல், நடனத்திற்காக இசுரேல் அரசால் மாநிலத்தின் மிக உயர்ந்த பண்பாட்டுப் பெருமையாக கருதப்படும் இசுரேல் பரிசைப் பெற்றார்.[3]

வெளியீடுகள்[தொகு]

  • ஆம் ரோக்கெட் ("ஒரு நடன மக்கள்"), 1964
  • இஸ்ரேல் இன நடனம், 1982

மேற்கோள்கள்[தொகு]

  1. Kaschl, Elke (2003). Dance and authenticity in Israel and Palestine: performing the nation. Social, economic and political studies of the Middle East and Asia. 89. Leiden, The Netherlands: Brill. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-13238-4. https://books.google.com/books?id=OfRAsefaeVEC&dq=gurit+kadman&pg=PA48. 
  2. "Gurit Kadman". Phantom Ranch. Archived from the original on 2007-09-27.
  3. "Israel Prize recipients in 1981 (in Hebrew)". Israel Prize Official Site.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரிட்_கட்மேன்&oldid=3858772" இலிருந்து மீள்விக்கப்பட்டது