பேச்சு:கண்ணதாசன் கவிதைகள் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கோள் உள்ளது. அறிஞர் ஆன்டன் {unreferenced} குறிப்பை நீக்கிக்கொள்ளும்படி வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 04:47, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அதே நூலை மேற்கோளாகத் தருவது ஏற்புடையது இல்லை. --AntanO 04:57, 10 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Sengai Podhuvan, அகநானூறுக்கு அகநானூறையே மேற்கோளாகத் தருவது ஒரு கலைக்களஞ்சியத்திற்கு உகந்த முறை அல்ல. குறித்த நூலே தனக்கே உசாத்துணையாகலாம் என சிலர் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலை நீண்ட நாள் பயனர்களிடத்தே இருப்பது வருந்தத்தக்கது. அகநானூறு முதன்மைநிலை ஆதாரம். கலைக்களஞ்சியம் முதன்மை நிலை ஆதாரத்தை மட்டும் கொண்டு உருவாக்கப்படக் கூடாது. அவ்வாறு இருக்குமாயின் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. எ.கா: திருக்குறள் 3 ஆகப் பிரிக்கப்பட்டடுள்ளது என திருக்குறளையே ஆதாரமாகக் காட்டி எழுது முடியாது. மேலும், அப்படித்தான் உள்ளது என திருக்குறளும் குறிப்பிடவில்லை. --AntanO 02:57, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  • இணையம் வந்த பின்னர் இப்போதுதான் தமிழ் தலையெடுக்கிறது. இந்த நிலையில் பழைய ஆய்வு நூல்கள் கந்தலாகிக் கழிந்துபோயின. புதிய நூல்கள் பொழுதுபோக்கு நூல்களாக உள்ளன. இப்போது பதிவில் உள்ள கட்டுரைகளில் தமிழில் விக்கிப்பீடியாவைத் தொடங்கி வளர்த்த பெருமக்கள் இட்ட கட்டுரைகளைப் பாருங்கள். உண்மை எது, தக்கது எது என்பது விளங்கும். தங்கள் குறிப்புப்படி தக்க சான்றுடன் செவ்விய கட்டுரைகள் விக்கியில் உருவாக வாய்ப்பு குறைகிறது. அதனால் என்ன? தொல்காப்பிய விதிமுறைகள் நன்னூல் காலத்தில் மாறிவிட்டன. நன்னூல் விதிமுறைகள் இன்றைய தமிழில் இல்லை. நாம் விக்கி விதிமுறைகளை அவரவர் புரிந்துகொண்ட வகையில் அடம் பிடிக்க முயல்கிறோம். விதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம். அதனால் என்ன? அழுதுகொண்டே இருப்போம். விக்கிப்பீடியா தமிழை வளர்க்க விரும்புகிறது. நாம் தமிழால் விக்கிப்பீடியாவை வளர்க்க விரும்புகிறோம். தமிழ் எழுத்துப் பதிவுகளால் (தமிழ் மொழி, மக்கள், பண்பாடு இரண்டாம் நிலை) விக்கிப்பீடியாவை வளர்ப்போம். --Sengai Podhuvan (பேச்சு) 01:32, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  • திருக்குறள் 3 ஆகப் பிரிக்கபட்டுள்ளது. நாலடி நான்மனி நானாற்பது ஐந்திணை முப்பால் கடுகம் கோவை ... - என்று வரும் பாடலை மேற்கோளாகக் காட்டலாம். அதுவும் பாடல்தானே. திருவள்ளுவ மாலையில் முப்பால் என வரும் குறிப்பைக் காட்டலாம். அதுவும் பாடல்தானே. இவற்றை விட, திருக்குறள் முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ள ஒருவரது காலத்துக்குப் பின்னர் மறைந்துபோகும் ஒரு வலைப்பூவில் பார்த்த நாளைக் குறிப்பிட்டு மேற்கோள் காட்டுவது எந்த வகையில் மேலானது என்பது விளங்கவில்லை. எண்ணுவோம். வளர்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 01:51, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Sengai Podhuvan: நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டீர்கள். வலைப்பூக்களில் இருந்து மேற்கோள்கள் எதுவும் காட்ட முடியாது. அவ்வாறான மேற்கோள்கள் உடனடியாகவே நீக்கப்பட்டு விடும். திருக்குறள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுளது என்று திருக்குறளையே நீங்கள் மேற்கோள் காட்ட முடியாது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பாடலையோ அல்லது மு.வ போன்ற அறிஞர்கள் இது பற்றி எழுதியிருந்தால் அந்த நூலையோ மேற்கோள் காட்டலாம். நம்பத்தகுந்த விக்கிப்பீடியாவே வளர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:24, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]

எனது கருத்து...[தொகு]

இந்தக் கட்டுரையை கருத்தில் கொண்டால், இந்தக் கட்டுரையில் காட்டப்பட்டுள்ள உசாத்துணையை ஒரு மேற்கோளாக எடுத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. நூலில் உள்ள உள்ளடக்கங்கள் குறித்த தகவல்களை குறிப்பிட்ட நூலிலிருந்துதான் எடுத்து, காட்ட முடிகிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் கட்டுரையில் காணப்படுமெனில் பிற மேற்கோள்கள் தேவைப்படலாம்:

  1. நூலின் விற்பனை குறித்த தகவல்கள்
  2. நூல் பெற்ற பேரும், புகழும் குறித்த தகவல்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:11, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]
குறித்த நூலே தனக்குத்தானே உசாத்துணையாக அமைவதை விக்கிப்பீடியா ஆதரரிக்கவில்லை. மேலும், அப்படி "தன்னிலை" உசாத்துணை என்பது தேவையுமில்லை. --AntanO 08:47, 2 பெப்ரவரி 2016 (UTC)

குறிப்பிடத்தக்கதே[தொகு]

நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமையின் 5ஆவது தகுதியாக, "நூலின் ஆசிரியர் மிகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவராக இருப்பின் அவருடைய எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம். நூலின் ஆசிரியர் விக்கிபீடியாவின் தரத்துக்கேற்ப குறிப்பிடத்தகுந்தவர் என எண்ணாமல், நூலின் ஆசிரியர் பொதுவில் மிகச் சிறப்பு பெற்றவர் எனவே அவருடைய வாழ்க்கையும் எழுத்துப்படைப்புகளும் பரவலாக பயிலப்படலாம் என்ற வகையில் கருத்தில் கொள்ளலாம்" எனக்கூறுகிறது. கவிஞர் கண்ணதாசன் தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் திகழ்ந்தவர். அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பான இடத்தைப்பெற்றவர். எனவே இத்தகுதியின் கீழ் இவ்விருபதிவுகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன எனக் கருதுகிறேன். --அரிஅரவேலன் (பேச்சு) 05:57, 2 பெப்ரவரி 2016 (UTC)

மேலும், கண்ணதாசன் கவிதைகள் முதற்றொகுதி, இரண்டாம் தொகுதி ஆகிய இரண்டும் ஒரே ஒரு பதிப்பை மட்டுமே கண்டன. இரண்டாம் பதிப்பில் இவ்விரு தொகுதிகளும் இணைக்கப்பட்டு கண்ணதாசன் கவிதைகள் முதலிரு தொகுதிகள் என்னும் பெயரில் பல மாற்றங்களுடன் வெளிவந்தது. எனவே கண்ணதாசன் கவிதைகள் என்னும் இந்நூல் தற்பொழுது கிடைப்பரிய நூலக மாறிவிட்டது. --அரிஅரவேலன் (பேச்சு) 05:57, 2 பெப்ரவரி 2016 (UTC)

குறிப்பிடத்தக்கமை வேறு மேற்கோள்கள் தருவது வேறு. இந்நூல் குறிப்பிடத்தக்கமைக்குள் அடங்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்நூல் பற்றிக் கட்டுரை எழுதலாம். ஆனாலும், நீங்கள் தரும் தகவல்களுக்கு மேற்கோள்கள் தர வேண்டும் என்பதே வேண்டுகோள்.--Kanags \உரையாடுக 06:49, 2 பெப்ரவரி 2016 (UTC)
👍 விருப்பம் --AntanO 08:47, 2 பெப்ரவரி 2016 (UTC)
விளக்கத்திற்கு நன்றி Kanags, குறிப்பிடத்தக்க நூலைப் பற்றி யாரேனும் கட்டுரைகள் எழுதியிருந்து அதனை பயனர் கண்டிருந்தால்தானே அதிலிருந்து மேற்கோள் தர இயலும். யாரும் கட்டுரை எழுதவில்லை என்றாலோ,எழுதப்பட்டிருந்து அதனை பயனர் காணவில்லை என்றாலோ கட்டுரைத் தொடங்கும் பயனரால் மேற்கோள் தர இயலாது அல்லவா? மேற்கோள் இல்லை என்றால் குறிப்பிடத்தக்க நூலைப் பற்றிய கட்டுரை நீக்கப்பட்டுவிடுமென்றால், பயனருக்கு நூல் அறிமுகக் கட்டுரையை நாம் ஏன் எழுதவேண்டும் எனத் தோன்றாதா? (எனக்கு அப்படித் தோன்றித்தான் எனது பங்களிப்பை இக்கட்டுரையோடு நிறுத்தி வைத்திருக்கிறேன்) எனவே, மேற்கோள் வேண்டும் வார்ப்புருவானது பயனர்களிடமிருந்து மேற்கோள் கோருவதாக இருக்க வேண்டுமே அன்றி, கட்டுரை நீக்கப்படும் என்பதாக இருக்கக்கூடாது அல்லவா? --அரிஅரவேலன் (பேச்சு) 04:08, 3 பெப்ரவரி 2016 (UTC)
மேலுள்ள உரையாடல்கள் எல்லாம் தமிழை வளர்ப்பதற்கான, மற்றும் ஆதாரம் கொண்ட ஒரு கலைக்களஞ்சியத்தை கட்டியேழுப்பும் முயற்சியாகவே நாம் பார்க்கவேண்டும். கட்டுரை ஒன்றை நீக்கு முயற்சியாக நோக்குவதும் அது தமிழை நலிவுறச் செய்யும் என நோக்குவதையும் தவிர்க்க வேண்டும். இது போல ஏராளமான கசப்பு அனுபவங்களைக் கடந்து விட்டோம். பல பயனர்கள் தூரமாகவும் செய்தார்கள். உரையாடல்கள் வளம் சேர்ப்பதற்காகவே. வேறு நூல்கள், குறிப்புகள் தான் தகுந்த உசாத்துணையாகும் என்பது எனது பணிவான கருத்து. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:45, 9 பெப்ரவரி 2016 (UTC)