பேச்சு:ஒரூஉ எண்
Appearance
பயனர் Booradleyp1 இன் உரையாடல் பக்கத்தில் இருந்து:
வணக்கம், en:Odious number இதற்குத் தமிழ்ச் சொல் உண்டா? முடிந்தால் இதனைத் தமிழாக்கம் செய்யுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:52, 7 ஏப்பிரல் 2024 (UTC)
- @Kanags: எனக்கு இதற்கான கணிதத் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. கட்டுரையை உருவாக்க முடியும். ஆனால் 'Odious' - 'கேவலமான, அருவருப்பான' - என்ற நேரடியான தமிழாக்கம் கொண்டு இதற்கான தமிழ்ப் பெயரை உருவாக்கலாமா (இதற்கு மாறான பண்புடைய எண் 'evil number' எனவும் உள்ளது). அல்லது ஒற்றை எண்ணிக்கையில் '1' களைக் கொண்ட இரும எண் என்ற இதன் பண்பைக் கொண்டு காரணப் பெயராக இதற்கு உருவாக்கலாமா என்று ஆலோசித்து பொருத்தமான பெயரைத் தேர்ந்தெடுக்க முடிந்தால் நான் இருவித எண்களுக்கும் கட்டுரைகளை உருவாக்குகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 11:26, 7 ஏப்பிரல் 2024 (UTC)
- Odious, Evil இரண்டும் நேரடிக் கருத்தைக் கொண்டுள்ளது போல்தான் தெரிகிறது. உருசிய மொழிக் கட்டுரைகளைப் பார்த்தேன். அவையும் இவ்வாறே நேரடிக் கருத்தையே, கேவலமான எண் Одиозное число, Злое число தீய எண், கொண்டுள்ளன. ஏனைய மொழிகளிலும் அவ்வாறே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 12:12, 7 ஏப்பிரல் 2024 (UTC)
- பரிந்துரைக்கு மிகவும் நன்றி. 'கேவலமான எண்', 'தீய எண்' என்ற தலைப்புகளைக் கொண்டு கட்டுரைகளை உருவாக்குகி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:25, 7 ஏப்பிரல் 2024 (UTC)
- odd என்பதே odious என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கக் காரணமாயிருந்திருக்கிறது. அதுபோல even போல ஒலிக்கும்விதமாக evil தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழிலிலும் ஒரு, இரு வரும்படியாக ஒரூஉ எண், இருள் எண் என்று பெயரிடுவது பொருத்தமாக இருக்கும். [ஒருவுக ஒப்பிலார் நட்பு - ஒருவுதல் (விட்டுவிடுக/ நீங்குக) என்பது detestable (odious) என்பதோடு பொருந்தி வருகிறது]. The bra, The Ket என்பதற்கெல்லாம் கட்டுரைகள் உருவாகும்போது இன்னும் இருக்கிறது வேடிக்கை. Paramatamil (பேச்சு) 16:39, 7 ஏப்பிரல் 2024 (UTC)
- @Paramatamil: உங்கள் பரிந்துரைக்கு நன்றி. ஆனால் "ஒரூஉ" என்ற சொல் ஏன் செய்யுட்களில் வரும் சொற்கள் போல உள்ளது போல தோன்றுகிறது. ஏன் "உ" என்பது சொல்லின் இறுதியில் வருகிறது என்பதற்கான காரணம் விளங்கவில்லை.--Booradleyp1 (பேச்சு) 04:07, 12 ஏப்பிரல் 2024 (UTC)
- @Kanags: Paramatamil பரிந்துரைத்த பெயர் குறித்து தங்களது கருத்தைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்."கேவலமான எண்" என கட்டுரை உருவாக்கிவிட்டு வழிமாற்றாக அவர் பரிந்துரைத்த பெயரைக் கொடுக்கலாமா?.
- @Paramatamil: பரிந்துரைத்த சொற்கள் இரண்டும் சிறந்த சொற்களாகவே எனக்குத் தெரிகிறது. இவ்விரண்டு எண்களும் odd, even என்ற கருத்தியலில் இருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. நேரடிக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. எனவே நாமும் அவர் பரிந்துரைத்த ஒரூஉ எண், இருள் எண் என்ற சொற்களையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். இலக்கணம்: மரூஉ.--Kanags \உரையாடுக 11:10, 12 ஏப்பிரல் 2024 (UTC)
- ஆம்! ஒரூஉ எண், இருள் எண் என்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:28, 12 ஏப்பிரல் 2024 (UTC)
- @Kanags:, @கி.மூர்த்தி:, @Paramatamil: மூவரின் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி. அவ்வாறே கட்டுரைகளை உருவாக்கி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:32, 12 ஏப்பிரல் 2024 (UTC)
Start a discussion about ஒரூஉ எண்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஒரூஉ எண்.