பேச்சு:எம். ஜி. ராமச்சந்திரன் இலங்கைப் பயணம்
Appearance
@Dineshkumar Ponnusamy: சினிமாவிலும், அரசியலிலும் ஒரு முத்திரை பதித்தவர் எம். ஜி. ராமச்சந்திரன் ஒரே ஒரு தடவை இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். இது ஒரு வரலாற்றுச் சம்பவம். இதற்கு இரண்டு உசாத்துணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, இலங்கை கொழும்பில் இயங்கும் ஒரு தமிழ் வளர்க்கும் நிறுவனத்தின் வலை தளத்தில் இடம் பெற்றுள்ள, படிமங்களுடன் கூடிய கட்டுரை. இரண்டாவது, அந்த 1965 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான இதழின் வருடப்பட்ட PDF கோப்பில் எழுதப்பட்டுள்ள நேரடிக் கட்டுரை. இவற்றை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? --UKSharma3 04:16, 13 நவம்பர் 2016 (UTC)
- தினேஷ்குமார், எம். ஜி. ஆர் குறிப்பிடத்தக்கவர். தமிழர் வாழும் இலங்கையில் பெருவாரியான இரசிகர்களைக் கொண்டிருந்தவர் (இன்னமும் இருக்கிறார்கள்). ஒரே ஒரு முறை மட்டுமே அங்கு சென்றுள்ளார். அங்குள்ள மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்த ஒரு பயணம். இவ்வகைகளில் இது ஒரு சரித்திர நிகழ்வு. இதைப் பற்றி எம். ஜி. ஆர் எனும் கட்டுரையில் எழுதினால் அக்கட்டுரை நீண்டு இருக்கும். சுருக்கி எழுதினால், முழுமையடையாது. எனவே தனியாக ஒரு கட்டுரையாக இருப்பது நன்று என்பது எனது கருத்து. தாங்களிட்ட வார்ப்புருவை பரிசீலிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:46, 13 நவம்பர் 2016 (UTC)
- கட்டுரை குறிப்பிடத்தக்கமைக்குள் அடங்கும். நீக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து.--Kanags \உரையாடுக 04:51, 13 நவம்பர் 2016 (UTC)
- கட்டுரை குறிப்பிடத்தக்கமையாக ஏற்றுக் கொண்டாலும், அதன் உரையில் அங்கு தங்கி இருந்தார், அவரைச் சந்தித்தார், இங்கு சென்றார் இவரைச் சந்தித்தார் என்று செய்தி போல உள்ளது. அதனை விக்கி நடைக்கேற்ப மாற்றியமைக்க வேண்டுகிறேன். கலைக்களஞ்சியத்தில் இடம்பெற வேண்டிய அளவு முக்கிய பயணமாகக் கூறுவதனால், இதனுடைய முக்கியத்துவத்தை விளக்குவது போன்ற மேலதிக உசாத்துணைகளும், மேற்கோள்களும் தேவை என்பது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றி. (ping வேலை செய்யவில்லை) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:48, 13 நவம்பர் 2016 (UTC)
- புரிதலுக்கு நன்றி, தினேஷ்குமார்! கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்து, தேவைப்படும் விக்கியாக்கங்களை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 13 நவம்பர் 2016 (UTC)