உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உருளைக் கிழங்கு குடும்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிப்புரிமை மீறல் பராமரிப்பு வார்ப்புரு ஏன் நீக்கப்பட்டது?--AntanO 01:30, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

அவ்வார்ப்புருவின் பேச்சுப்பக்கத்தினைக் காணவும். ஆலமரத்தடி அறிவிப்பிலும் காணலாம்.--உழவன் (உரை) 03:46, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
{{பதிப்புரிமை மீறல்}}, விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) - இவற்றில் இல்லை? --AntanO 04:15, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#தமிழக அரசின் பதிப்புரிமை+அவ்வார்ப்புருவினால் ஏற்படும் பகுப்பின் பேச்சு. இனி எந்த உரையாடற்பக்கத்திலும் உகந்தத் தொடுப்பைத் தருகிறேன். --உழவன் (உரை) 07:39, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
ஆம், அல்லது வேறு ஒரு பயனரால் மீண்டும் வார்ப்புரு இட வாய்ப்புள்ளது. முடியுமாயனால் பேச்சுப்பக்கத்திலும் ஒரு குறிப்பு இடுங்கள். --AntanO 09:22, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை கட்டற்ற ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது என்று எவ்வாறு மற்றவர்கள் தெரிந்து கொள்வது? --AntanO 06:20, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Info-farmer: தமிழக அரசு அறிவிப்பு குறித்த உரையாடலைத் தனியே இங்கு தொடர்வோம். அதன் அடிப்படையில் தமிழக அரசு நூல்களின் ஆக்கங்களை இங்கு பயன்படுத்துகிறோம் என்றாலும் பின்வரும் வழிமுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • https://en.wikipedia.org/wiki/Wikipedia:Adding_open_license_text_to_Wikipedia#Adding_text_to_articles பார்க்கவும். இதன் அடிப்படையில் தகுந்த கட்டற்ற உரிம ஆக்கத்தை நாம் இங்கு படியெடுத்தலாம் ஆக்கம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதனை முறையாக ஆக்குநர்சுட்டுடன் குறிப்பிடுதல் வேண்டும். இது சட்ட அடிப்படையான தேவையாகும். இதனைத் தான் @AntanO: கட்டுரை கட்டற்ற ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது என்று எவ்வாறு மற்றவர்கள் தெரிந்து கொள்வது என்று வினவுகிறார். தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் இந்த ஆண்டு வெளியிட்ட இந்த நூலில் இந்தப் பக்கத்தில் இருந்து இந்த உரிமத்தின் அடிப்படையில் இந்த உரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுதல் வேண்டும். அந்த உரிமம் செல்லுமா அதனை முறையாக அறிவிப்பதற்கான வழிமுறை என்பது வேறு உரையாடல்.
  • தகுந்த ஆக்குநர்சுட்டு, உரிம விவரங்கள் தரப்படாமல் பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்க வேண்டாம். பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்கும் போது அவ்வார்ப்புரு நீக்கப்படுகிறது என்று தொகுத்தல் சுருக்கத்தில் குறிப்பிடுங்கள். தானியக்கமாக நீக்க வேண்டாம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.

நன்றி.--இரவி (பேச்சு) 11:19, 19 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தெளிவான விளக்கத்திற்கு நன்றி இரவி! காப்புரிமை ஐயம் உள்ள கட்டுரைகள் என வார்ப்புரு இட்டு, கட்டுரைகளை, புதிய கட்டுரைகளை எழுதலாமா? --உழவன் (உரை) 12:07, 19 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
@Info-farmer:, காப்புரிமை ஐயம் கொண்ட ஆக்கங்களைத் தெரிந்தே பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நன்று. புதிய பயனர்கள் அறியாமல் செயற்படும் போது இவ்வார்ப்புரு பயன்படுத்தலாம். அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள் தெளிவான விடை இல்லாவிட்டால் ஆக்கத்தை நீக்குவதே முறை. --இரவி (பேச்சு) 13:37, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]
@Ravidreams: ஐயுமுள்ளவை என்பதால் வேறு பொருந்தமான வார்ப்புரு இடுதல் நன்று. ஒரு குறிப்பிட்ட காலத்தை வரையறை செய்தல் அவசியம். அதுவரை பேச்சுப்பக்கத்திற்கு நகர்த்தி, இக்கட்டுரையை செம்மைபடுத்துகிறேன். ஏனெனில், முழுமையும் நகல் எடுத்தது அல்ல.--உழவன் (உரை) 13:49, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer: இப்போதைக்கு இத்தகைய கட்டுரைகள் அனைத்தையும் பேச்சுப் பக்கம் அல்லது மணல் தொட்டியில் இட்டு காப்புரிமை ஐயம் உள்ள பகுதிகளை நீக்கி மீண்டும் முதன்மைப் பக்கத்தில் இடுவது நன்று. அதே வேளை, இக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இக்கட்டுரை தொடர்பான தரவு கட்டற்ற ஆக்கத்தின் கீழ் கிடைக்க வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிட்டு ஆதார நூல் விவரங்களைத் தரலாம். வருங்காலத்தில் ஐயங்கள் தீரும் போது, உடனே அத்தகைய கட்டற்ற ஆக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். --இரவி (பேச்சு) 13:56, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கட்டுரை விரிவாக்கக் குறிப்புகள்

[தொகு]

வேர்

[தொகு]

இக்குடும்பத்தின் வேரானது, கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பாகக் காணப்படுகிறது.

தண்டு

[தொகு]

நிலத்தின் மேல் காணப்படும். வளர்ந்த முட்களையுடைய தண்டினைப் பெற்றிருக்கிறது. (எ.கா. 'சொலானம் சாந்தோகார்ப்பம்' (கண்டங்கத்திரி) தண்டு உருளை வடிவமானது. தண்டு மென்மையானதாகவோ கட்டைத்தன்மையுடையதாகவோ காணப்படுகிறது. மேலும் அவை கிளைகளையுடையதாகவும், தூவிகளையுடையதாகவும் உள்ளன. (எ.கா. 'பெட்டுனியா அயிப்பிரிடா' மற்றும் 'நிக்கோட்டியான அலேட்டா'). 'சொலானம் டியூபரோசம்' தாவரத்தின் தண்டு பகுதியானது, கிழங்காக மாற்றமடைந்து உள்ளது.

இலை

[தொகு]

தனி இலை வகையாகும். இலைக்காம்புடையது. பொதுவாக மாற்றியலையமைவு. சில தாவரங்களில் எதிரிலையமைவு. முழுமையானது (எ.கா. 'பெட்டுனியா ஹைபிரிடா). இலையடிச் செதிலற்றது. ஒரு நடுநரம்புடன் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது. 'சொலானம் சாந்தோகார்ப்பம்' தாவரத்தில் நடுநரம்பும், பக்க நரம்புகளும் மஞ்சள்̈நிற முட்களைக் கொண்டுள்ளன.

தனித்த. இலைக்கோண 'சைமோசு' (எ.கா. 'டாட்டூரா சுட்ராமோனியம்') அல்லது கோணம் விலகிய (Extra axillary) 'சுகார்பியாய்டு சைமோஸ்' மஞ்சரியான 'ரைபிடியம்' (Rhipidium)) ஆகும். இது கைவிசிறி போன்ற அமைப்புடையது. (எ.கா. 'சொ. நைக்ரம்' அல்லது 'கேலிக்காய்டு சைமோசு' (எ.கா. 'சொ. டியூபரோசம்') அல்லது 'அம்பெல்லேட் சைமோஸ்' (எ.கா. வைத்தானியா சாம்னிஃபெரா)

மலர்கள்

[தொகு]

பூவடிச் செதிலுடையது (எ.கா. 'பெட்டுனியா அயிபிரிடா') அல்லது பூவடிச் செதிலற்றது எ.கா. 'சொ. நைக்ரம்' (மணத்தக்காளி) பூக்காம்புச் செதிலற்றவை. பூக்காம்புடையது. ஈரடுக்குடையது. ஐந்தங்கமலர். முழுமையானது. ஆரச்சமச்சீருடையது (எ.கா. 'டாட்டூரா சட்ராமோனியம்') அல்லது இருபக்க சமச்சீருடையது (எ.கா. 'சைசான்தசு பின்னேட்டசு'). இருபால் தன்மையுடையது. இதன் மலரானது,சூலக மேல் மலர் வகையைச் சார்த்ததாகும்.

வட்டங்கள்

[தொகு]

பூவிதழ் வட்டம் என்பது முக்கியமாக அல்லி வட்டத்தையும். புல்லிவட்டத்தையும் குறிக்கிறது.

புல்லி வட்டம்

[தொகு]

புல்லிகள் மொத்தம் ஐந்து உள்ளன.அவை பசுமையானது. இணைந்த புல்லிகளாக அமைந்துள்ளது. குழல் போன்ற அமைப்புடன் தொடு இதழ் அமைவிலுள்ளன. எ.கா. 'டாட்டூரா மெட்டல்' (ஊமத்தை) அல்லது தழுவு இதழமைவு கொண்டது. (எ.கா. 'பெட்டுனியா அயபிரிடா'). மணி வடிவம் கொண்ட, நிலைத்த புல்லிவட்டத்தையுடையது (எ.கா. 'சொ. மெலாஞ்சினா')

அல்லி வட்டம்

[தொகு]

அல்லிகள் மொத்தம் ஐந்து உள்ளன. அவை இணைந்த அல்லிகளாக உள்ளன. புனல் வடிவம் உடையது. குழல் போன்றது. பொதுவாக 'பிலிக்கேட்' - கைவிசிறியின் மடிந்த இதழ்களைப் போன்றது. இதழமைவு திருகலானது அல்லது தொடு இதழ் அமைவு அல்லது தழுவு இதழமைவு கொண்டது.

மகரந்தத்தாள் வட்டம்

[தொகு]

மகரந்தத்தாள்கள் மொத்தம் ஐந்து உள்ளன. அல்லியை ஒட்டியவை. அல்லி இதழ்களுக்கு இடையே அமைந்தவை. பொதுவாக சமநீளமற்ற, மகரந்தக் கம்பிகளையுடையவை. மகரந்தக்கம்பிகள் அல்லி குழலின் அடிப்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் ஒட்டிக்காணப்படும். மகரந்தக் கம்பிகள், மகரந்தப்பையின் அடியில் இணைந்தவையாக உள்ளன. மகரந்தப்பைகள், இரு அறையுடையவை. உள்நோக்கி வெடிப்பவை. அடியில் ஒட்டியவை அல்லது முதுகு புறத்தில் ஒட்டியவை. நீளவாக்கில் அல்லது நுனித்துளை வெடிப்பவையாக உள்ளன. (எ.கா. 'சொ. நைக்ரம்'). 'சைசான்தசு பின்னேட்டசு' என்ற தாவரத்தில் இரண்டு மகரந்தத்தாள்கள் வளமானவை மற்ற மூன்று மகரந்தத்தாள்கள் மலட்டு மகரந்தத்தாளாக குறுக்கமடைந்துள்ளன.

சூலக வட்டம்

[தொகு]
  • சூலகம் : மேல்மட்ட சூற்பை. இரு சூலக இலையுடையது. இணைந்த சூலக இலைகளையுடையது. இரு சூலக அறைகளையுடையது. சூலக இலைகள் அச்சிற்கு நேர்க்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாகக் காணப்படும். சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையிலுள்ளன. 'டாட்டூரா' சிற்றினங்களில். இரு சூலக அறைகள், போலியான அறைகுறுக்குச் சுவர் உற்பத்தியாவதால், நான்கு சூலக அறைகளைக் கொண்டு காணப்படுகிறது. சூல் தண்டு தனித்தது. கிளைத்தலற்றது. சூல்முடி இருகிளையுடையது அல்லது கோள அமைப்புடையது.
  • கனி : 'பெர்ரி' அல்லது சுவர் வெடிகனி. 'லைக்கோபெர்சிகான்' எசுகுலண்டம்' தாவரத்தில் கனி, 'பெர்ரி' வகையைச் சார்ந்தது. 'டாட்டூரா' சிற்றினத்திலும், 'பெட்டுனியா' சிற்றினத்திலும் வெடி கனிகள் தோன்றுகின்றன.
  • விதை : கருவூண் உடையதாக இருக்கிறது.

ஊடகங்கள்

[தொகு]

பொருளாதாரப் பயன்கள்

[தொகு]

உணவுத் தாவரங்கள்

[தொகு]

உலக நாடுகள் அனைத்திலும் 'சொலானம் டியூபரோசம்' (உருளைக் கிழங்கு) பொதுவாக உணவாகப் பயன்படுகிறது. 'சொ. மெலாஞ்சினா (கத்தரி) தாவரத்தின் முதிர்ச்சியடையாத கனியும். 'லைக்கோபெர்சிகான் எசுகுலெம்டம்' (தக்காளி) தாவரத்தின் முதிர்ந்த கனியும் உணவாகப் பயன்படுகின்றன.

மருத்துவத் தாவரங்கள்

[தொகு]

'அட்ரோபா பெல்லடோனா' தாவர வேர்களிலிருந்து ‘அட்ரோஃபின்’ என்ற 'ஆல்கலாய்டு (alkaloid)' பிரித்தெடுக்கப்படுகிறது. இது தசை வலியை நீக்கப் பயன்படுகிறது. 'டாட்டூரா சட்ராமோனியம்' தாவர இலைகள் மற்றும் பூக்களிலிருந்து ‘சட்ராமோனியம்’ என்ற மருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. இது ஈழை நோய் மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'சொ. ட்ரைலோபேட்டம்' (தூதுவளை) தாவரத்தின் இலைகளும், மலர்களும், 'பெர்ரி' கனிகளும் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. 'வைத்தானியா சாம்னிஃபெரா' (அமுக்கிரா) தாவரத்தின் இலைகளும்,வேர்களும் நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தவும் பயன்படுகின்றன. மேலும், இது சத்துநீர்மமாகவும் பயன்படுகிறது.

அலங்காரத் தாவரங்கள்

[தொகு]

'செசுட்ரம் டையூர்னம்' (பகல் மல்லி) என்ற இனமும், 'செ. நாக்டர்னம்' (இரவு மல்லி) என்ற இனமும், 'பெட்டுனியா அயிபிரிடா' (இளஞ்சிவப்பு மலர்) போன்ற தாவர இனங்கள், அலங்காரத்திற்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

புகையிலை

[தொகு]

.நிக்கோட்டியானநு டொபாக்கம்' (புகையிலை) தாவர இலைகளில் 'நிக்கோட்டின், நார்நிக்கோட்டின், அனபேசின்' போன்ற ஆல்கலாய்டுகள் உள்ளன. சிகரெட் பீடி, குழாய் உறிஞ்சி, உக்கா, மென்று சுவைக்கும் புகையிலை, மூக்குப் பொடி போன்ற புற்றுநோய் விளைவிக்கும் மனிதத் தயாரிப்புப் பயன்பாடுகளிலும், 'நிக்கோட்டின்' முதன்மையானதாக பயன்படுத்தப்படுகிறது. இது நரம்புகளுக்கு அமைதியூட்டும் மருந்தாகவும், தசை வலி வேதனைகளுக்கு மருந்தாகவும், பூச்சிக் கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.