பேச்சு:இலங்கை மாகாணப் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயவாக இப் பக்கத்தை யாரும் குழப்பவேண்டாம்!--சிவம் 23:34, 25 செப்டெம்பர் 2012 (UTC)

இப்பட்டியல் எதற்காக எனத் தெரிவிப்பீர்களா சிவம். தனியே ஒன்பது மாகாணங்களுக்கு ஒரு பட்டியல் தேவை தானா? அல்லது வேறேதேனும் தகவல்கள் சேர்க்கப்போகிறீர்களா? இலங்கையின் மாகாணங்கள் என்ற விரிவான கட்டுரையும் உள்ளது. அதையும் பாருங்கள். அக்கட்டுரையை வளர்ப்பது நல்லது.--Kanags \உரையாடுக 08:35, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனக்ஸ். நீங்கள் சொல்வது சரிதான், இதன் தலைப்பு மாறவேண்டும் என்று நினைக்கின்றேன், காரணம்: இலங்கையின் மாகாணம்,மாவட்டம், தொகுதி, பெரு நகரம் கிராமம் என்று அனைத்தையும் ஒன்றாக பட்டியல் இட நினைத்துள்ளேன்.--சிவம் 09:21, 26 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம். இந்த பட்டியலை இலங்கை பிரதேச பட்டியல் என்று மாத்தலாமா??--சிவம் 06:10, 27 செப்டெம்பர் 2012 (UTC)

இல்லை, நீங்கள் ஆரம்பித்த வேலையை முடியுங்கள். பின்னர் இதன் தலைப்புக் குறித்து முடிவெடுக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:02, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நிர்வாகப் பிரிவுகள், இலங்கை என்ற விரிவான கட்டுரையும் உள்ளது. அதனையும் கவனிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 08:17, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனக்ஸ். நல்ல காலம் என்னை காப்பாற்றி உள்ளீர்கள். நன்றி உங்களுக்கு மட்டும். காரணம் பிறகு சொல்லுகிறேன். எனக்கு ஒரே சிரிப்பாக உள்ளது என்னை நினைத்து. உதாரணம்: சுண்டெலி தான் போக காணலை விளக்கு மாத்தையும் தோழில் சுமந்து கொண்டு போன கதை மாதிரி இருக்கு என் கதை. நன்றி--சிவம் 11:59, 27 செப்டெம்பர் 2012 (UTC)

குறிப்பு[தொகு]

மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் பிழையான தகவல் உள்ளது. ஏனைய மாவட்ட தகவல்களும் சரிதான என்று பார்க்க வேண்டும். --Anton (பேச்சு) 13:32, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் அன்டன். நன்றி உங்கள் தகவலுக்கு, நான் என்னும் முடிக்கவில்லை இப்போதுதான் வேலை நடக்கிறது. நான் முடித்தவுடன் சொல்கிறேன் . அப்போது சரி பார்த்து சொல்லுங்க்கள் தயவாக கேக்கிறேன். என்னும் நான்கு மாவட்டங்கள் சேர்க்க உள்ளன.. --சிவம் 14:09, 27 செப்டெம்பர் 2012 (UTC)

இப்போது முடித்துள்ளேன். தயவாக சரி பார்க்கவும். பிழை இருப்பின் திருத்தவும். அன்புடன் --சிவம் 15:13, 27 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் கனக்ஸ். இப் பட்டியலை இலங்கை நிர்வாக பிரிவுகள் என்னும் தொகுப்புடன் இணைப்பது நன்று என்று நினைக்கிறேன். நன்றி--சிவம் 10:07, 29 செப்டெம்பர் 2012 (UTC)