பேச்சு:இன்டன்பர்க் பேரிடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவான பெயராகவுள்ளது. வின்கல என்பது விண் பற்றியதா? எழுத்துப்பிழை இருக்கலாம். --AntanO 04:59, 15 செப்டம்பர் 2016 (UTC)

@AntanO: அன்ரன் அவர்களுக்கு வணக்கம், இக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் Hindenburg disaster என உள்ளது, அக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தால் "வின்கலம் பேரழிவு" என்றே காட்டுகிறது, விண் என்பதுதான் தமிழில் சரியென்ற போதிலும் வின்கலம் எனும் இவ்வார்த்தையை வலைப்பதிவுகளில் பெருமளவில் காணமுடிந்தது (பிழைக்கு மன்னிக்கவும்). தற்போதுதான் நமது விக்கிபீடியாவின் பெயரிடல் மரபுக்கு புறம்பானதாக இருப்பதைத் தாங்கள் சுட்டிக்காட்டியதில் அறிந்தேன் "விண்கலப் பேரழிவு" என தலைப்பை மாற்றி விடுகிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமிஇந்தியா 16:52, 15 செப்டம்பர் 2016 (UTC)
Hindenburg என்பது தனி பெயர்ச்சொல் அல்லவா? அப்படியாயின், அதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள்? மேலும் இவ்வானூர்தி வான்கப்பல், விண்கலம் அல்ல. கின்டன்போர்க் பேரிடர் என்றுதான் அழைக்கப்படலாம். @Kanags: --AntanO 17:16, 15 செப்டம்பர் 2016 (UTC)
இன்டன்பர்க் பேரிடர் என்ற தலைப்புக்கு வழிமாற்றின்றி நகர்த்தலாம்.--Kanags \உரையாடுக 21:49, 15 செப்டம்பர் 2016 (UTC)
@AntanO and Kanags: அவர்களுக்கு வணக்கம், நான் இதுபோன்ற ஆங்கிலக் கட்டுரைகளை கூகுள் மொழிபெயர்ப்பு (Google Translate) கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்து எழுதி வருகிறேன், அதிகம் படிக்காத காரணத்தால் (ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன்) ஆங்கில அறிவையும், அர்த்தத்தையும் எளிதில் இனங்காண இயலவில்லை, மேலும் கூகுள் மொழிபெயர்ப்பு கருவியில் மொழிபெயர்க்கும் போது சில ஆங்கில வார்த்தைகள் தவறாகவும், பல வார்த்தைகளாகவும் காண்பிப்பதால் இதுபோன்ற குழப்பம் நேர்ந்துவிடுகிறது, இக்கட்டுரையின் தலைப்பும் அதுபோன்றே "Hindenburg disaster" என மொழிபெயர்த்தால் "வின்கலம் பேரழிவு" என வரவே அதையே தலைப்பாக சூட்ட நேர்ந்தது. மேலும், Hindenburg (இன்டன்பர்க்) என்ற பெயரில் நபர்கள், இடங்கள், பொழுதுபோக்கு ஊடகங்கள், மற்றும் இக்கட்டுரைக்கு தொடர்பான ஆங்கில தலைப்புகளும் இங்கு அறிந்தேன் ஆகவே இக்கட்டுரைக்கு "வி(ன்)ண்கலப் பேரழிவு" என பெயரிடல் மரபுக்கு புறம்பான தலைப்பிட நேர்ந்தது.

Kanags அவர்கள் கூறியவாறு இன்டன்பர்க் பேரிடர், இன்டன்பர்க் வான்கப்பல் பேரிடர் அல்லது வேறொரு பொருத்தமான தலைப்பிட்டு வழிமாற்றின்றி நகர்த்த கேட்டுகொள்கிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமிஇந்தியா 00:51, 16 செப்டம்பர் 2016 (UTC)