இன்டன்பர்க் பேரிடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
LZ 129 இன்டன்பர்க்
இன்டன்பர்க் தீ பிடித்த சில வினாடிகளின் பின்னர் விழத் தொடங்கும் காட்சி
நிகழ்வு சுருக்கம்
நாள்1937, மே 6
சுருக்கம்தீப்பிடித்த வான்கப்பல்
இடம்லேக்ஹர்ஸ்ட் கடற்படை விமான பொறியியல் நிலையம் அருகில் மான்செசுடர்நகரியம், நியூ செர்சி,  ஐக்கிய அமெரிக்கா
ஆள்கூறுகள்: 40°01′49″N 74°19′33″W / 40.030392°N 74.325745°W / 40.030392; -74.325745
பயணிகள்36
ஊழியர்61
காயமுற்றோர்அறியப்படவில்லை
உயிரிழப்புகள்36 (13 பயணிகள், 22 சேவைப் பணியாளர்கள், தரையில் ஒருவர்)
தப்பியவர்கள்62
வானூர்தி வகைஇன்டன்பர்க் வகுப்பிலான வான்கப்பல்
வானூர்தி பெயர்இன்டன்பர்க்
இயக்கம்டொய்ச்ச செப்பெலின்-ரீடெரெய்1
வானூர்தி பதிவுD-LZ129
பறப்பு புறப்பாடுபிராங்க்ஃபுர்ட்,  செருமனி
சேருமிடம்கடற்படை விமானப் பொறியியல் நிலையம் லேக்கேர்சுடு, நியூ செர்சி,  ஐக்கிய அமெரிக்கா

இன்டன்பர்க் பேரிடர் (Hindenburg disaster) எனும் இது, 1937 ஆம் ஆண்டு, மே 6 இல் நடந்த ஒரு வான்கப்பல் விபத்தாகும். "டொய்ச்ச செப்பெலின்-ரீடெரெய்1" (Deutsche Zeppelin-Reederei1) எனும் நிறுவன இயக்கத்தில் "இன்டன்பர்க் வகுப்பு வான்கப்பல்" (Hindenburg-class airship) வகையைச் சார்ந்த, "இன்டன்பர்க்" (Hindenburg) எனும் பெயருடைய (பதிவு எண்:D-LZ129) வான்கப்பல் ஒன்று, அமெரிக்காவின்வின் நியூ செர்சி மாநிலத்திலுள்ள மான்செசுடர்நகரியம் பகுதியில் அமைந்துள்ள "லேக்ஹர்ஸ்ட் கடற்படை விமான பொறியியல் நிலையம்" அருகே, கப்பற் பாய் மரம் உடனான செருமனி பயணிகள் "வான்கப்பல் LZ 129" வான்கப்பலை நங்கூரமிட முயன்ற போது தீ பிடித்து விபத்துக்குள்ளானதாக அறியப்பட்டது. இந்த வான்கப்பல் பயணத்தில், வானூர்தி சேவைப் பணியாளர்கள் 61 பேரும், பயணிகள் 36 பேரும், மொத்தம் 97 பேர்கள் செருமனியின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமான பிராங்க்ஃபுர்ட்லிருந்து அமெரிக்காவின்வின் நியூ செர்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இலக்கை அடைந்த நிலையில் நடந்த இவ்விபத்தில், 13 பயணிகளும், 22 பயணச் சேவைப் பணியாளர்களும், மற்றும் தரையில் ஒரு சேவைப் பணியாளரும் மொத்தம் 36 பேர்கள் கொல்லப்பட்டு, எஞ்சிய 62 பேர்கள் காயங்களோடு உயிர்தப்பினார்கள்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்டன்பர்க்_பேரிடர்&oldid=2119098" இருந்து மீள்விக்கப்பட்டது