பேச்சு:ஆட்களம் (உயிரியல்)
ஆட்களம் என்பது இணையத்தை குறிப்பது. உயிரியலுக்கு..
[தொகு]ஆட்களம் (Domain)என்பது இணையத்தில் பயனாகும், கணியச்சொல். இது உயிரியல் பயன்பாட்டிற்கு பொருத்தமானது அல்ல. இங்கு கணியவல்லுனர்,(தெரன்சு, நீச்சல்காரன்) மொழி பெயர்த்ததால் இந்தச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. திரளம் (திரளம்)என்ற சொல்லே பொருந்தும். இலக்கியத்தில் திரள் என்ற சொல். இயற்கையை வருணிக்கப் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் ஆட்களம் (ஆள்+களம்) என்பது விலங்கியல் தத்துவத்தை மட்டுமே குறிக்கிறது. எடுத்துக்காட்டாக,
- பாரதியார் பாடல்கள் :
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க திரளாய் - சுரர்,
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
- கம்பராமாயணம் பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும்
- பதினோராம் திருமுறை: பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
- கந்த புராணம் : வெண் கதிர் போல், திரள வல்லினை அனைய பூண் முலை உடைத் தெய்வத்
- பெரியபுராணம்: இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண் இலாத
- தேம்பாவணி: முடுகியன சாப மழைத் திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க,
- தேவாரம்: கலையானை பரசு தர பாணியானை கன வயிரத்திரளானை மணி மாணிக்க
- திருப்புகழ்: பவளத் தரளத் திரளக் குவைவெற்
- திருவாசகம்: செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
- வில்லிபாரதம்: தேவினும், தேவ யோனியில் பிறந்த திரளினும், சிறந்த யாவர்க்கும்,
--த♥உழவன் (உரை) 06:22, 13 சனவரி 2017 (UTC)
- இதுபோன்று பிழைவருமென்றுதான் தனிநபர் ஆய்வுகள் விக்கியில் வேண்டாம் என்று சொல்லிவருகிறேன். ஆட்களம் என்று ஏற்கனவே படத்தில் கையாண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தியிருப்பேன். களம் என்பது பெரிய தொகுதியையே குறிக்கிறது. திரள் என்பதும் தொகுப்பு ஆனால் இவ்விடத்தில் உரியபயன்பாடுயிருந்தால் பெயரை மாற்றிக் கொள்வோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:41, 17 சனவரி 2017 (UTC)
- 'ஆட்' களம் என்பது விலங்கியலை மட்டுமே குறிப்பதாகவே எண்ணுகிறேன். உயிரினம் அனைத்தையும் குறிக்கும் சொல்லைத் தேடியே, இலக்கியங்களை அடைந்தேன். நமது சொல்லை நாம் சரிபார்க்கவே முனைகிறேன். விக்கியின் ஆய்வு குறித்த எண்ணங்களை ஏற்கிறேன். ஆனால், எண்ணத்தை வெளிப்படுத்துதல், சிந்தனைக்கு அடிக்கோல் அல்லவா? மேற்கூறிய இலக்கியப் பொருண்மைகளைக் காணும் போது, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சுட்ட, திரள் பொருத்தமானதாகவேப் படுகிறது. (எ. கா)ஏறுதழுவுதல் (
ஜல்லிக்கட்டுசல்லி=பணம், விடலைத்தனம்) நிகழ்வைக் காண, மக்கள் திரளாக வந்து இருந்தனர். இலக்கணப் பயன்பாடு குறித்த தங்களின் சிந்தனைத்தான், யாவரும் பயன்படுத்தும் கருவியை உருவாக்கியது. அதுபோன்ற, தனிநபர் ஆய்வு தேவையே. எனக்கு கட்டுரை வளர்ப்பிலும், ஆர்வமுண்டு. அதனை செய்தே வருகிறேன். மூலச்சொற்களை படிக்கும் போது, எழுந்த சிந்தனையைப் பதிவு செய்தேன். பிறரின் எண்ணத்தையும் அறிவோம். சொற்களை மாற்றுவது, எனது நோக்கமல்ல. விக்கியில் பல சொற்கள் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்பதையே அவ்வப்போது, தெரிவிக்கிறேன். --த♥உழவன் (உரை) 13:08, 17 சனவரி 2017 (UTC)
- 'ஆட்' களம் என்பது விலங்கியலை மட்டுமே குறிப்பதாகவே எண்ணுகிறேன். உயிரினம் அனைத்தையும் குறிக்கும் சொல்லைத் தேடியே, இலக்கியங்களை அடைந்தேன். நமது சொல்லை நாம் சரிபார்க்கவே முனைகிறேன். விக்கியின் ஆய்வு குறித்த எண்ணங்களை ஏற்கிறேன். ஆனால், எண்ணத்தை வெளிப்படுத்துதல், சிந்தனைக்கு அடிக்கோல் அல்லவா? மேற்கூறிய இலக்கியப் பொருண்மைகளைக் காணும் போது, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சுட்ட, திரள் பொருத்தமானதாகவேப் படுகிறது. (எ. கா)ஏறுதழுவுதல் (