பெரிய பச்சைப் புறா
பெரிய பச்சைப் புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | புறா |
குடும்பம்: | புறா |
பேரினம்: | Ducula |
இனம்: | D. aenea |
இருசொற் பெயரீடு | |
Ducula aenea (Linnaeus, 1766) | |
வேறு பெயர்கள் | |
|
பெரிய பச்சைப் புறா காடுகளில் வாழும் ஒரு பெரிய புறா இனமாகும். இதன் விலங்கியல் பெயர் Ducula aenea ஆகும்.
பெயர்கள்[தொகு]
தமிழில் :பெரிய பச்சைப் புறா
ஆங்கிலப்பெயர் :Green Imperial – Pigeon
அறிவியல் பெயர் :Ducula aenea [2]
உடலமைப்பு[தொகு]
43 செ.மீ. - புறாக்களுள் உருவில் பெரியது. உடலும் வாலும் வெண்கல நிறம் தோய்ந்த பசுமையாகவும் தலை வெளிர் சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிறமாகவும் இருக்கும். வாலடி செம்பழுப்பாகவும் கால்கள் சிவப்பாகவும் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்[தொகு]
மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மாவட்டங்களில் பசுங்காடுகள், இலையுதிர; காடுகள் ஆகியவற்றில் சமவெளி முதல் 300 மீ வரை பழமரங்கள் பழுக்கும் பருவத்தில் கேற்பத் திரியக் காணலாம். மற்ற புறாக்களைப் போலப் பெருங் கூட்டமாகத் திரள்வதில்லை.
உணவு[தொகு]
உப்பு மண் தின்னவும் தண்ணீர் குடிக்கவும் தரையில் இறங்கும். இனப்பெருக்கப் பருவத்தில் ஆண், பனங்காடையைப் போல உயர எழுந்து பறந்து பின் குப்புற வீழ்ந்து மீண்டும் உயர எழுந்து பெண்ணிடம் காதல் ஆட்டம் காட்டும். பழங்களையே முன்னதைப்போல உண்ணும் இது சாதிக்காயை விரும்பித் தேடித்தின்னும். வூக், வூக், வூர் எனக் குரல் எடுத்துக் கூவும்.
இனப்பெருக்கம்[தொகு]
மார்ச் முதல் சூன் வரை காடுகளில் உள்ள நடுத்தர மரங்களில் ஏனோ தானோ எனக் கூடமைத்து ஒரு முட்டையிடும்.
படங்கள்[தொகு]
Illustration by Keulemans, 1893
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Ducula aenea தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ducula aenea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2016. 1 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Green Imperial – Pigeon பெரிய பச்சைப் புறா". 8 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:66