பெனாசு மசானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனாசு மசானி
செப்டம்பர் 2016-இல் ரவீந்திர பவன், போபால் நகரில் ஷாம்-இ-பிர்தௌஸ்'-ஓர் இசை நிகழ்ச்சியில்
பிறப்புநவ்சாரி, குசராத்து
பணிபாடகர், நடனம்
செயற்பாட்டுக்
காலம்
(1981–முதல்)

பெனாசு மசானி (Penaz Masani) ஓர் இந்தியரா கசல் 1981-இல் பாடத் தொடங்கிய பாடகரும் 20க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளை உருவாக்கியவரும் ஆவார்.[1]

தொழில்[தொகு]

தனது வாழ்க்கையில், 'ஷெஹ்சாடி தருணம்' என்ற எனும் உத்தரப்பிரதேச மாநில அரசின் விருதினை 1996ஆம் ஆண்டிலும் 2002ஆம் ஆண்டில் 'இசைக்குச் சிறந்த பங்களிப்புக்காக' 11ஆவது 'கலாகர் விருதினையும்' பெனாசு பெற்றார்.[2] பெனாசு சைடன்காம் கல்லூரியில் பட்டம் பெற்ற மசானி பின்னணி பாடகராக இசைப் பணியாற்றியுள்ளார். இவர் பாலிவுட் பாடகராக 50க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவர் இந்தியக் கலாச்சார உறவுக் குழு உதவியுடன் செருமனி[3] தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, கானா, செனகல், வியட்நாம் போன்ற தொலைதூர நாடுகளில் இவர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[4][5] தி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான இவரது நேர்காணல் ஒன்றில் ஆம் கி பாஸ்ம் மெய்ன் என்ற பாடல், தனது 14 வயதில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இந்த பாடல் 1982-இல் பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர் 1968-இல் பிறந்தார் என்பதை இது குறிக்கிறது. இப்பாடல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.

விருதுகள்[தொகு]

பெனாசு 26 சனவரி 2009 அன்று பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Penaz Masani". Archived from the original on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 11 May 2008.
  2. "Awardees by year". Archived from the original on 11 February 2012. பார்க்கப்பட்ட நாள் 11 May 2008.
  3. Berlin, Asia Pacific Meet 18 September 2003.
  4. Penaz panache The Tribune, 31 October 2003.
  5. India’s ghazal music lands in opera houses Viet-Nam news. Retrieved 2 March 2008
  6. "Kumar Sanu, Udit Narayan receive Padma Shree". NDTV. 26 January 2009 இம் மூலத்தில் இருந்து 31 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090131084145/http://music.ndtv.com/Music_Story.aspx?ID=ENTEN20090081422&type=musicindia. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனாசு_மசானி&oldid=3914862" இலிருந்து மீள்விக்கப்பட்டது