பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்
போயர்
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ. 1.5 மில்லியன்.[1]
மொழி(கள்)
ஆபிரிக்கான மொழி, டச்சு
சமயங்கள்
கால்வினிசம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஆப்ரிகானர், ஒல்லாந்தர், பிளெமிஷ், பிரிசியர்கள்; செருமானியர், பிரான்சியர், இசுக்காட்லாந்தியர், ஆங்கிலேயர்; கேப் கலப்பினத்தவர், பாசுத்தர்கள், கிரீக்வாக்கள்

பூர் (Boer, பன்னாட்டு ஒலிப்பு: /bur/ [2]) அல்லது போயர் என்பது டச்சு மொழியில் உழவர் என்ற பொருளுடையச் சொல்லாகும்; இச்சொல் தென்னாப்பிரிக்காவில் 1700களில் இருந்த கிழக்கு கேப் முனையில் குடியேறிய டச்சு உழவர்களின் வழித்தோன்றல்களை குறிப்பிடப் பயன்படுத்தபடுகின்றது. [3]. சிலகாலம் கேப் குடியேற்றம் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்தது; பின்னாளில் இதனை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது. பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்தும் கிழக்கு முனையில் பிரித்தானிய பேரினவாத அரசுக்கும் உள்ளகக் குடிகளுக்கும் இடையே நிகழ்ந்த போர்களிலிருந்தும் தப்பிப்பதற்காக இவர்கள் 1800களில் கேப் குடியேற்றத்திலிருந்து இடம்பெயர்ந்து டிரான்சுவாலிலும் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்திலும் வாழத் துவங்கினர். இவை கூட்டாக போயர் குடியரசுகள் என்றும் இவர்களும் பூர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். சிறிதளவில் நதால் பகுதியிலும் இவர்களைக் காணலாம்.

வரலாறு[தொகு]

1657இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியின் சில வீரர்களும் மாலுமிகளும் கேப் பகுதியிலேயே தங்கி வாழ அனுமதி அளிக்கப்பட்டனர். இவர்களே தென்னாப்பிரிக்காவில் முதலில் குடியேறியவர்களாவர். இவர்கள் ஆபிரிக்கானர்களாக அறியப்படவில்லை. அதேநேரத்தில் தங்களை ஐரோப்பியர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள இவர்கள் விரும்பவில்லை. மென்மேலும் ஐரோப்பாவிலிருந்து வந்தேறிகள் வரத்தொடங்க இவர்களுக்குள் பன்னாட்டு கலப்புத் திருமணங்கள் நிகழத் தொடங்கின. எனவே இவர்களது மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்தனர். தங்களைப் புதிய நாடாகக் கருதத் தொடங்கினர். இவர்கள் போயர் குடியரசுகளை நிறுவினர். இந்தக் குடியரசுகளை 1880-1881இலும் 18991902இலும் நடந்த ஆங்கில-போயர் போர்களில் தோற்றனர். இதன் பின்னர் இவர்கள் பிரிந்து பல நாடுகளில் குடியேறினர். பெரும்பாலோர் இன்னமும் தற்கால தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து மற்றும் சிம்பாப்வே நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Stürmann, Jan (2005). New Coffins, Old Flags, Microorganisms and the Future of the Boer. http://www.pology.com/article/051213.html. பார்த்த நாள்: 2011-12-02. 
  2. Jones, Daniel; Gimson, Alfred C. (1977) [1917]. Everyman's English Pronunciation Dictionary. Everyman's Reference Library (14 ). London: J. M. Dent & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-460-03029-9. https://archive.org/details/everymansenglis000jone. 
  3. Du Toit, Brian M. (1998). The Boers in East Africa: Ethnicity and Identity. பக். 1. http://www.questia.com/PM.qst?a=o&docId=27642806#. பார்த்த நாள்: 2011-12-02. 

வெளி இணைப்புகள்[தொகு]

  •   "பூர்". New International Encyclopedia. (1905). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்&oldid=3583435" இலிருந்து மீள்விக்கப்பட்டது