புள்ளி அந்துப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளி அந்துப்பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. persicariae
இருசொற் பெயரீடு
Melanchra persicariae
L, 1761

புள்ளி அந்துப்பூச்சி (Dot moth) இது விட்டில் பூச்சி இனத்தைச் சார்ந்த நோக்டோடி (Noctuidae) என்ற குடும்பப் பூச்சியாகும். இப்பூச்சியானது எசுப்பானியா, எசுப்பானியம், மற்றும் கொரியா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இவை தூரக்கிழக்கு உருசியா, சைபீரியா, நடு ஆசியா, இசுக்கொட்லாந்து, கம்சாத்கா தீபகற்பம் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இதேபோல் மாசிடோனியா, பல்காரியா, அனத்தோலியா, தெற்கு காக்கேசியா, ஆல்ப்ஸ், வடக்கு ஈரான் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இவற்றின் இறக்கை அடர் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் பெரிய வெள்ளை புள்ளி கொண்டு காணப்படுகிறது. இவை பறக்கும்போது சிறிய அளவான ஓசை எழுப்புவதின் மூலம் இது தனித்துவமான பூச்சியாக கருதப்படுகிறது. இதன் இறக்கை நீட்டம் 38 முதல் 50 மி.மீற்றர்கள் வரை இருக்கின்றன. பகலில் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதுபோல் இவை இரவில் பயிர்களுக்கு மகரந்த சேர்க்கை நடக்க உதவுகின்றன.[1]

வாழ்விடம்[தொகு]

இவை வனப்பகுதி, புல்வெளிகள், தோட்டங்கள் போன்றவற்றில் வாழுகின்றன.

குறிப்பு[தொகு]

  1. ^ The flight season refers to the British Isles. This may vary in other parts of the range.

மேலும் பார்க்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Melanchra persicariae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_அந்துப்பூச்சி&oldid=2190382" இலிருந்து மீள்விக்கப்பட்டது