புறம்போக்கு என்கிற பொதுவுடமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புறம்போக்கு என்கிற பொதுவுடமை
இயக்கம்எஸ். பி. ஜனநாதன்
தயாரிப்புசித்தார்த் ரோய் கபூர்
எஸ். பி. ஜனநாதன்
கதைஎஸ். பி. ஜனநாதன்
(கதை & வசனம்)
திரைக்கதைரோகாந்த்
இசைவர்சன்
சிறீகாந்து தேவா (பின்னணி)
நடிப்புஆர்யா
சாம்
விஜய் சேதுபதி
கார்த்திகா நாயர்
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்பினாரி பிக்சர்ஸ்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு15 மே 2015 [1]
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை (ஆங்கில மொழி: Purampokku Engira Podhuvudamai) என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பொலிஸ் நடைமுறைச்சட்ட மூலம் பற்றிய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எஸ். பி. ஜனநாதன் இயக்கினார். ஆர்யா, விஜய் சேதுபதி, சாம், கார்த்திகா நாயர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[2] யுடிவி மோஷன் பிக்சர்ஸினால் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[3] இத்திரைப்படம் என். கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவிலும் புதுமுக இசையமைப்பாளரான வர்சனின் இசையிலும் வெளிவந்தது. முதலில் புறம்போக்கு எனத் தலைப்பிடப்பட்ட போதிலும் பொதுவுடமை பற்றி எடுத்துக்கூறும் திரைக்கதையைக் கொண்டு அமைந்ததால் பின்னர் புறம்போக்கு என்கிற பொதுவுடமை எனத் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது.[4] ஜனநாயக சமூகத்தில் ஆற்றப்படும் பாரிய குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதித்தலுக்கு எதிரான நடவடிக்கைகளே இக்கதையின் மூலக்கரு ஆகும். இத்திரைப்படம் 15 மே 2015 அன்று வெளியிடப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

வளர்ச்சி[தொகு]

2009 ஆம் ஆண்டில் பேராண்மை திரைப்படத்தை இயக்கிய பின் மூன்று வருடங்களின் பின்னர் தனது முன்னைய திரைப்படங்களில் கதா நாயகர்களாக நடித்த ஜீவா மற்றும் ஜெயம் ரவியை வைத்து ஓர் படம் இயக்கவுள்ளதாக இயக்குநர் ஜனநாதன் அறிவித்தார்.[5] 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் யுவன் சங்கர் ராஜாவே தனது படத்திற்கு இசையமைப்பதாகக் கூறினார்.[6][7] வேறு பல திரைப்படங்களில் ஜீவா மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததால் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதியை வைத்துத் தனது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக 2013 இல் இயக்குநர் ஜனநாதன் அறிவித்தார்.[8] அதற்குப் புறம்போக்கு எனும் தலைப்பிட்டுள்ளதாகவும் அறிவித்தார். யுவன் சங்கர் ராஜாவுக்குப் பதிலாக வர்சன் எனும் புதுமுக இசையமைப்பாளர் இசையமைப்பதாகவும் அறிவித்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]