புரோட்டோகோராஸ்
புரோட்டோகோராஸ் | |
---|---|
டெமோக்கிரட்டிசு (நடுவில்) புரோட்டோகோராஸ் (வலது) 17ஆம் நூற்றாண்டில் சால்வேட்டர் ரோசா வைந்த ஓவியம், ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் | |
பிறப்பு | அண். கிமு 490 [1][2] Abdera |
இறப்பு | அண். கிமு 420 (அண் 70 வயது)[2] |
காலம் | சாக்கிரடீசுக்கு முந்தையமெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | சோபிஸ்டு |
முக்கிய ஆர்வங்கள் | மொழி, semantics, relativism, சொல்லாட்சிக் கலை, அறியவியலாமைக் கொள்கை, நன்னெறி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | 'Sophist' as teacher for hire, man–measure doctrine ('Man is the measure of all things') |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
புரோட்டகோராஸ் (Protagoras, கிரேக்கம் : Πρωταγόρας _ _ _ _ கிரேக்கம்: Πρωταγόρας ; சு. 490 கி.மு – சு. கிமு 420 ) [1] என்பவர் சாக்ரடீசின் காலத்திற்கு முந்தைய கிரேக்க மெய்யியலாளர் மற்றும் சொல்லாட்சி கோட்பாட்டாளர் ஆவார். இவர் பிளேட்டோவால் சோபிஸ்டுகளில் ஒருவராக எண்ணப்படுகிறார்.
சோபிஸ்டுகளில் மிகுந்த புகழ்பெற்றவராக இவர் இருந்த இவர் கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்தார். அறநெறியை கடைபிடித்தவராகவும், பிறருடைய பாராட்டுபவராகவும் இருந்தார். வாதங்களில் கலந்துகொள்ளும்போது நிதானமிழக்காமல் வாதிடுவார்; சினம் கொள்ளமாட்டார். தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் கூடுதலான கட்டணம் பெற்றதாக சிலரால் விமர்சிக்கப்பட்டபோது, அவ்வாறு கட்டணத்தை வாங்குவது நியாயம் என்று சாதிப்பார்.[3]
ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், முதன்முதலாக மொழிக்கு இலக்கணம் கண்டவர் புரோட்டோகோராஸ் ஆவார். மொழி ஆராய்ச்சிக்கு அடி கோலியவர் இவரேயாவார். இலக்கியத்துக்கு அதிகப்படியான பங்களிப்புகளையும் செய்துள்ளார்.[3]
வாழ்க்கை வரலாறு
[தொகு]புரோட்டகோராஸ் தாசோஸ் தீவுக்கு எதிரே உள்ள அப்டெரா, திரேசில் பிறந்தார் (தற்போதைய கிரேக்கத்தின் சாந்தி பிராந்திய அலகுக்கு உட்பட்ட பகுதி ). ஆலஸ் கெலியசின் கூற்றுப்படி, இவர் முதலில் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் துவக்கினார். ஒரு நாள் இவர் ஒரு குறுகிய கம்பியால் கட்டப்பட்ட சிறிய மரத் துண்டுகளை சுமந்துகொண்டு செல்வதை மெய்யியலாளர் டெமோக்கிரட்டிசு கண்டார். இவர் சுமைகளை வடிவியல் துல்லியத்துடன் ஒன்றாக இணைத்திருந்ததை உணர்ந்தார். அதன்படி டெமோக்ரிட்டிசு, இவரை ஒரு சிறுமுது அறிஞராக இருக்க வேண்டும் என்று உணர்ந்தார். டெமோக்ரிட்டிசு உடனடியாக இவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மெய்யியலைக் கற்பித்தார். [4] அதன்பிறகு புரோட்டகோராஸ் ஏதென்சில் நன்கு அறியப்பட்டாராகவும், பெரிக்கிளீசின் நண்பராகவும் ஆனார். [5]
இவரது வாழ்ந்த காலம் குறித்து துள்ளியமாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் காலங்காலமாக எஞ்சியிருக்கும் எழுத்துக்களில் உள்ள குறிப்புகளில் இருந்து தகவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சாக்கிரட்டீசு, பிரோடிகஸ், இப்பியாஸ் ஆகியோரின் கூட்டத்தின் முன்னிலையில், அவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருக்கும் அளவுக்கு தனக்கு வயதாகிவிட்டதாக புரோட்டகோராஸ் குறிப்பிட்டதாக பிளாட்டோ எழுதியுள்ளார். இதன்படி இவர் கிமு 490க்குப் பிறகு பிறந்தவராக இருக்கவேண்டும் என தெரிகிறது. மெனோவில் இவர் 40 ஆண்டுகள் சோபிஸ்டாக பணியாற்றிய பிறகு, தோராயமாக 70 வயதில் இறந்ததாகக் கூறப்படுகிறது. [6] அப்படியானால், இவரது மரணம் கிமு 420 இல் நிகழ்ந்ததாகக் கருதப்படலாம், ஆனால் அது உறுதியாகத் தெரியவில்லை. [7]
பெரிக்கிள்சும், புரோட்டகோராசும் ஒரு நாள் முழுவதும் ஒரு சுவாரஸ்யமான சட்ட சிக்கல் குறித்து விவாதித்தார்கள் என்று புளூட்டாக் எழுதினார், அது தத்துவார்த்த கேள்வியை உள்ளடக்கியிருக்கலாம் : [8] "ஒரு தடகள போட்டியில், ஒரு நபர் தற்செயலாக ஈட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்குக் காரணம் ஈட்டியை எறிந்த நபரா அல்லது விளையாட்டுகளை நடத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகளா?" என்பதாகும். [9]
இறைமறுப்பு
[தொகு]புரோட்டகோராஸ் இறைமறுப்பை அல்லது டிம் விட்மார்ஷ் கூறுவது போல் அறியவியலாமைக் கொள்கையை ஆதரிப்பவராக இருந்தார். [10] புரோடகோரசின் தொலைந்துபோன படைப்பான ஆன் தி காட்ஸ் என்ற நூலில் அவர் எழுதினார்: "கடவுள்கள் இருக்கிறார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. அப்படி இருந்தால், அவர்கள் எப்படி இருப்பார்களென்பதும் எனக்குத் தெரியாது. இவற்றைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியாதபடி பல விசயங்கள் நம்மை தடுக்கின்றன. கடவுளுண்மையைப்பற்றின இந்த விசயமோ தெளிவற்றிருக்கிறது. மனிதனுடைய வாழ்நாளோ மிகச்சுருக்கம்." [11] [12] [13]
டியோஜெனெஸ் லார்டியசின் கூற்றுப்படி, புரோட்டகோராஸ் எடுத்த இந்த வெளிப்படையான, இறைமறுப்பு நிலைப்பாடு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏதெனியர்கள் இவரை நாடுகடத்தினர். மேலும் இவரது நூல்களின் அனைத்து பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டு சந்தை சதுக்கத்தில் எரிக்கப்பட்டன. இவரது படைப்புகளை வேண்டுமென்றே அழிக்கப்பட்டது என்று சிசெரோவால் குறிப்பிடப்பட்டுள்ளது. [14] நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு டியோஜெனெஸ் லார்டியஸ் மற்றும் சிசெரோ இருவரும் எழுதியது போலவும், இந்த மெய்யியலாளரைப் பற்றி விரிவாகக் குறிப்பிடும் சமகாலத்தவர்களால் புரோட்டகோராசைத் துன்புறுத்தியது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், கிளாசிஸ்ட் ஜான் பர்னெட் இந்தத் தகவலை சந்தேகிக்கிறார். [15] புரோட்டகோராஸ் நூல்களின் சில பிரதிகள் எரிக்கப்பட்டாலும், அடுத்த நூற்றாண்டில் அறியப்படுவதற்கும் விவாதிக்கப்படுவதற்கும் போதுமான அளவு உயிர் பிழைத்ததாக பர்னெட் குறிப்பிடுகிறார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Guthrie, p. 262–263.
- ↑ 2.0 2.1 Silvermintz, Daniel (2016). Protagoras. Bloomsbury Publishing Plc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781472510921.
- ↑ 3.0 3.1 வெ. சாமிநாத சர்மா, கிரீஸ் வாழ்ந்த வரலாறு, நூல், பக்கம்: 407-408, பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டை.
- ↑ Aulus Gellius, Noctes Atticae 5.3.
- ↑ O'Sullivan, Neil. (1995) "Pericles and Protagoras".
- ↑ Plato, Meno, 91e
- ↑ Filonik, Jakub (2013). "Athenian impiety trials: a reappraisal". Dike 16 (16): 36–39. doi:10.13130/1128-8221/4290. https://zenodo.org/record/896899.
- ↑ Guthrie, p. 263.
- ↑ Plutarch, Life of Pericles
- ↑ Tim Whitmarsh, Battling the Gods, Alfred A. Knopf, 2015, pp. 88–89
- ↑ περἰ μἐν θεῶν οὐκ ἔχω εἰδέναι, οὔθ᾽ ὡς εἰσὶν οὔθ᾽ ὡς οὐκ εἰσιν οὔθ ὁποῖoί τινες ἰδέαν· πολλὰ γὰρ τὰ κωλύοντά με εἰδέναι, ἥ τε ἀδηλότης καὶ βραχὺς ὤν ὁ βίος ἀνθρώπου.
- ↑ DK 80B4.
- ↑ The Internet Encyclopedia of Philosophy - Protagoras (அண். 490 BCE – அண். 420 BCE), Accessed: October 6, 2008.
- ↑ Cicero, de Natura Deorum, 1.23.6
- ↑ John Burnet, "Greek Philosophy: From Thales to Plato", 1914