புருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புருவம்
புருவம்
இலத்தீன் supercilium
ம.பா.தலைப்பு Eyebrows

புருவம் (Eyebrow) என்பது கண்களுக்கு மேற்புறத்தில் செறிவான, மெல்லிய முடிகளையுள்ள பகுதியைக் குறிக்கும். வியர்வை, நீர், பிற மாசுகள் கண்குழிகளுக்குள் விழாதவண்ணம் காப்பதே, புருவங்களின் முக்கியப் பணியாகும். என்றாலும், முக பாவங்களைக் காட்டுவதற்கும், மனிதர்களிடையே கருத்துக்களை (அல்லது) சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வதிலும் புருவங்களின் பணி இன்றியமையாததாக உள்ளது[1]. பொதுவாக பெண்கள் ஒப்பனைப் பொருட்களைக் கொண்டு ஒப்பனை செய்தோ, முடிகளைக் கூட்டுதல், குறைத்தல், பச்சைக் குத்திக் கொள்ளுதல், துளையிட்டு வளையங்கள் அணிதல் போன்ற செயல்களின் மூலமாகவோ தங்கள் புருவங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Body Language, Building Instant Rapport, Reading and Interpreting Body Language". Arielspeaks.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-23.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருவம்&oldid=3891990" இலிருந்து மீள்விக்கப்பட்டது