உள்ளடக்கத்துக்குச் செல்

புகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தொட்டியில் டகிஃபுகு மீன்.

ஃபுகு (Fugu, 河豚;;フグஜப்பானிய மொழியில், போகியோ ( 복어 ;鰒 魚) அல்லது பொக் ( ) இல் கொரியன், மற்றும் hétún (河豚;河魨) இல் தரப்படுத்தப்பட்ட நவீன சீன மொழியில் [1] என்பது ஒரு கோளமீன் குடும்ப மீன்களாகும். இவை பேத்தா இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் வகை ஆகும். இவற்றில் பவ வகைகள் உள்ளன.

ஃபுகு மீனில் உள்ள டெட்ரோடோடாக்சின் என்னும் நஞ்சின் காரணமாக இதை உண்ணும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அதனால் இந்த மீனில் உள்ள நச்சுப் பகுதிகளை அகற்றவும் இறைச்சியை மாசு இல்லாமல் கவனமாக தயார் செய்வது மிக அவசியம் ஆகும். [2]

உணவகங்களில் ஃபுகு மீன் உணவை தயாரிக்க யப்பான் மற்றும் பல நாடுகளில் மிகக் கடுமையான சட்ட விதிகள் உள்ளன. இந்த மீனை சமைக்க மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கடுமையான பயிற்சியினால் தகுதி பெற்ற சமையல்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். [2] [3] அதையும் மீறி எப்போதாவது விபத்து போல மரணங்களும் நேர்கின்றன. [3]

ஃபுகு மீனைக் கொண்டு சசிமி மற்றும் சிரினபே என்பன போன்ற உணவுகள் சமைக்கப்படுகின்றன. [3] சிலர் இதன் கல்லீரலை சுவையான பகுதியாக கருதுகிறார்கள். ஆனால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, மேலும் இந்த உறுப்பை உணவகங்களில் பரிமாறுவது 1984 இல் யப்பானில் தடை செய்யப்பட்டது. [3] ஜப்பானிய உணவு வகைகளில் ஃபுகு மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

நச்சுத்தன்மை

[தொகு]

ஃபுகுவின் உள் உறுப்புகளில், குறிப்பாக கல்லீரல், சூலகம், கண்கள், தோல் போன்றவற்றில் டெட்ரோடோடாக்சின் என்ற நஞ்சு உள்ளது. [4] இந்த நஞ்சால் [5] பாதிக்கப்பட்டவர் முழு உணர்வுடன் இருக்கும்போதே அவரது எலும்புத்தசைகள் கட்டுப்பாட்டை இழக்கும். [6] நஞ்சால் பாதிக்கப்பட்டவர் மூச்சுவிட முடியாமல், இறுதியில் மூச்சுத் திணறலால் இறக்கும் நிலை ஏற்படும். [7] ஃபுகு நஞ்சிற்கு இதுவரை மாற்று மருந்து அறியப்படவில்லை. [8] பாதிக்கப்பட்டவரின் உடலில் நஞ்சு வளர்சிதை மாற்றம் செய்யப்பட்டு அது தணியும் வரை மூச்சுத் தொகுதி மற்றும் சுற்றோட்ட தொகுதிகளை பார்த்துக் கொள்வதே நிலையான சிகிச்சையாகும். [9]

டெக்ரோடோடாக்சின் நிறைந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மற்ற விலங்குகளை உணவாக ஃபுகு உட்கொள்வதால் ஃபுகுவின் டெட்ரோடோடாக்சின் நஞ்சு சேர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் மீன் காலப்போக்கில் நச்சுத் தன்மையானதாக மாறுகிறது. [10] இதனால் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு பாக்டீரியா அண்டாதவாறு இந்த மீனை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீன்களை பாக்டீரியாவில் இருந்து விலக்கி வைத்து வளர்ப்பதன் மூலம் மீன் விவசாயிகள் தற்போது நஞ்சு இல்லாத ஃபுகுவை உற்பத்தி செய்கிறார்கள்; சிட்டா ப்ரிபெக்சரில் உள்ள உசுகி என்ற நகரம், நஞ்சு இல்லாத ஃபுகு விற்பனைக்கு பெயர் பெற்றது. [10]

குறிப்புகள்

[தொகு]

 

  1. In Classical Chinese and the various regional varieties of Chinese, there are nearly a dozen synonyms that refer to the toxic pufferfish, including 䲅, 𩷪鱼, 黄驹, 魺, 嗔鱼, 鲑, 鲐鱼, 鮧, 鯸鲐, 鯸鮧, 鰗鮧, 鹕夷, 鯸䱌, and 䰽.
  2. 2.0 2.1 Davidson, Alan (2006). The Oxford Companion to Food. Oxford University Press. pp. 324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280681-9. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Davidson" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 3.3 Hosking, Richard (1997). A Dictionary of Japanese Food: Ingredients & Culture. Tuttle Publishing. pp. 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8048-2042-4. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Hosking" defined multiple times with different content
  4. Yong, Y. S.; Quek, L. S.; Lim, E. K.; Ngo, A. (2013). "Pufferfish poisoning case study". Case Reports in Medicine 2013: 206971. doi:10.1155/2013/206971. பப்மெட்:24368916. 
  5. "Interaction between voltage-gated sodium channels and the neurotoxin, tetrodotoxin". Channels 2 (6): 407–12. 1 November 2008. doi:10.4161/chan.2.6.7429. பப்மெட்:19098433. 
  6. "Tetrodotoxin, an Extremely Potent Marine Neurotoxin: Distribution, Toxicity, Origin and Therapeutical Uses". Marine Drugs 13 (10): 6384–406. October 2015. doi:10.3390/md13106384. பப்மெட்:26492253. 
  7. Cheng, K. K.; Ling, Y. L.; Wang, J. C. (April 1968). "The failure of respiration in death by tetrodotoxin posioning". Quarterly Journal of Experimental Physiology and Cognate Medical Sciences 53 (2): 119–128. doi:10.1113/expphysiol.1968.sp001951. பன்னாட்டுத் தர தொடர் எண்:0033-5541. பப்மெட்:5185564. 
  8. Larimore, Jennifer L. Neuroscience Basics: A Guide to the Brain's Involvement in Everyday Activities. Elsevier Science. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-811017-1.
  9. "CDC - The Emergency Response Safety and Health Database: Biotoxin: TETRODOTOXIN - NIOSH". www.cdc.gov. 9 November 2017.
  10. 10.0 10.1 Onishi, Norimitsu (2008-05-04). "If the Fish Liver Can't Kill, Is It Really a Delicacy?". The New York Times. https://www.nytimes.com/2008/05/04/world/asia/04fugu.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகு&oldid=3580845" இலிருந்து மீள்விக்கப்பட்டது