உள்ளடக்கத்துக்குச் செல்

பீபி நானகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீபி நானகி
பீபி நானகி, தனது சகோதரர் குர் நானக்குடன் இருப்பதை போல வரையப்பட்ட படம்
தாய்மொழியில் பெயர்ਬੇਬੇ ਨਾਨਕੀ
பிறப்பு1464கள்
சாகல், தில்லி சுல்தானகம் (தற்போதைய கசூர் மாவட்டம், பாக்கித்தான்)
இறப்பு1518கள்
உறவினர்கள்குரு நானக் (சகோதரர்)

பீபி நானகி (Bebe Nanaki) (தமிழில், சகோதரி நானகி; 1464கள்-1518கள்) சீக்கிய மதத்தின் நிறுவனரும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவும், இவர் கபீரின் உற்ற சீடருமான குரு நானக்கின் மூத்த சகோதரி ஆவார். நானகி சீக்கிய மதத்தில் முக்கியமானவராக கருதப்படுகிறார். இவர் குருவுக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சீக்கியராகவும் அறியப்படுகிறார். இவர் தன் சகோதரனிடம் தெய்வீக குணங்கள் இருப்பதையும், தத்துவச் சாய்வையும் முதன்முதலில் உணர்ந்தார். அவருக்கு மேலும் ஊக்கம் அளித்து படிப்பு மற்றும் பயணம் தொடர துணைபுரிந்தார். குரு நானக் கடவுளிடம் பக்தி செய்யும் கருவியாக இசையைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளித்தார்.[1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

நானகியும் இவரது சகோதரரும் மேத்தா கல்யாண் தாஸ் பேடி, பிரபலமாக களு மேத்தா[3] என்பவரின் குழந்தைகளாக இன்றைய பாக்கித்தானின் சாகல் நகரில் பிறந்த பிறந்தனர். இவரது தந்தை அந்த பகுதியில், ராய் புலர் பாட்டி[4] என்ற முஸ்லீம் நில உரிமையாளரிடம் பயிர் வருவாய் கணக்காளராக ஒரு வேலை செய்து வந்தார்.

இவருக்கு, தன்னுடைய தாத்தா பாட்டிகளால் தோராயமாக "உனது தாய்வழி தாத்தா பாட்டி வீடு" என்ற பொருள்படும் நானகியன் என்ற பெயரிடப்பட்டது.[2] பீபி என்றும் ஜி என்றும் மரியாதைக்குரிய அடையாளமாக தனது பெயருடன் இவர் அறியப்படுகிறார். ஒரு வயதான பெண்ணைப் அழைக்க பீபி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மரியாதை காட்ட விரும்பும் எவரையும் ஜி என்ற சொல்லால் அழைக்கலாம். பீபி நானகி 11 வயதில் தனது சிறு வயதிலே திருமணம் செய்து கொண்டார். அந்த நாட்களில் இவ்வளவு இளம் வயதில் திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. 

தில்லி சுல்தானகத்தின் இலாகூர் ஆளுநர் தௌலத் கானின் சேவையில் பணமல்லாதவற்றுக்கான வருவாய் களஞ்சியமான மோடிகானாவில் பணிபுரிந்த உப்பல் கத்ரி இனத்தைச் சேர்ந்த செய் ராம் என்பவரை நானகி மணந்தார். சுல்தான்பூரில் உள்ள மோடிகானாவில் இவரும் வேலையில் சேர இவரது கணவர் உதவினார். [5]

சகோதரரும் சகோதரியும்[தொகு]

பீபி நானகி ஜி தனது சகோதரர் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். மேலும் அவரது "அறிவொளி பெற்ற ஆன்மாவை" முதலில் அடையாளம் கண்டுகொண்டார்.[6] தனது சகோதரர் குரு நானக்கை விட 5 வயது மூத்தவரான இவர் அவருக்கு ஒரு தாயாக இருந்தார். இவர் அவரை தனது தந்தையிடமிருந்து பாதுகாத்தது மட்டுமல்லாமல் , நிபந்தனையின்றி நேசித்தார். குரு நானக் தனக்கு 15 வயதாக இருந்தபோது இவருடன் வாழ அனுப்பப்பட்டார். இவர் தனது சகோதரனுக்கு ஒரு மனைவியைத் தேடி, சுலக்னி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். [6] தனக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லாததால், இவர் தன் சகோதரரின் குழந்தைகளான சிறீசந்த், இலட்சுமி ஆகியோரை விரும்பி வளர்க்க ஆரம்பித்தார்.[2]

இவர், குரு நானக்கின் முதல் பின்தொடர்பவர் என்று அறியப்படுகிறார்.[6] குருநானக், கடவுள் மீது பக்தி செய்யும் கருவியாக இசையைப் பயன்படுத்துவதில் ஊக்குவிப்பதற்காகவும் இவர் அறியப்படுகிறார். அவருக்கு இசை திறமை இருப்பதை அறிந்த இவர், அவரது இசையை மேலும் மேம்படுத்த அவருக்கு நரம்பிசைக் கருவியான 'ரெபாப்' என்ற ஐரோப்பிய இசைக்கருவியை வாங்கினார்.[2]

இறப்பு[தொகு]

பீபி நானகி, 1518களில் இறந்தார். தன்னுடைய கடைசி விருப்பங்களில் ஒன்றாக, தனது கடைசி நாட்களில் குருநானக் தன்ன்னுடன் இருக்க வேண்டும் என்று இவர் விரும்பினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bebe Nanaki Gurdwara". Archived from the original on 17 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Sikh Women Now". Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  3. "Guru Nanak Sahib, Guru Nanak Ji, First Sikh Guru, First Guru Of Sikhs, Sahib Shri Guru Nanak Ji, India". Sgpc.net. Archived from the original on 18 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "The Bhatti's of Guru Nanak's Order". Nankana.com. Archived from the original on 16 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. J. S. Grewal (1998). The Sikhs of the Punjab. The New Cambridge History of India (Revised ed.). Cambridge University Press. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-63764-0.
  6. 6.0 6.1 6.2 "Bebe Nanaki Gurdwara". Archived from the original on 17 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09."Bebe Nanaki Gurdwara". Archived from the original on 17 September 2011. Retrieved 9 November 2011.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபி_நானகி&oldid=3563875" இலிருந்து மீள்விக்கப்பட்டது