பீனா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Beena Pillai
பிறப்புகேரளம், இந்தியா
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுஆர்.என்.ஏ. படியெடுப்பு, இரைபோ கருவமிலம் & கிசுடோன் மாறுபாடு
விருதுகள்
  • 2008 சி. எஸ். ஐ. ஆர். இளம் அறிவியலாளர் விருது
  • 2009 இந்திய தேசிய அறிவியல் கழகம் இளம் அறிவியலாளர் விருது
  • 2017–18 தேசிய உயிர் அறிவியல் மேம்பாட்டு விருது
  • N-BIOS Prize]]

பீனா இராமகிருஷ்ணன் பிள்ளை (Beena Pillai) ஓர் இந்திய நுண்ணுயிரியலாளர், மரபியல் நிபுணர் மற்றும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தில் அறிவியலாளர் ஆவார். சிறிய ஆர். என். ஏ. மற்றும் கிஸ்டோன் வகைகளால் பாதிக்கப்பட்ட மரபணு ஒழுங்குமுறை குறித்த தன்னுடைய ஆய்வுகளுக்காக அறியப்பட்ட இவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் இளம் விஞ்ஞானி விருது மற்றும் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இளம் விஞ்ஞானி பதக்கம் பெற்றவர் ஆவார். இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை இவருக்கு வாழ்க்கை மேம்பாட்டுக்கான தேசிய உயிர் அறிவியல் விருதை வழங்கியது. இது மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது உயிரி அறிவியலில் இவருடைய பங்களிப்புகளுக்காக, 2017-18 ஆண்டு வழங்கப்பட்டது..

வாழ்க்கை வரலாறு[தொகு]

மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம்

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் பிறந்த பிள்ளை, 1995ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தின் இராம்நரைன் ருயா கல்லூரியில் நுண்ணுயிரியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். மேலும் ஒருங்கிணைந்த முனைவர் பட்ட பாடம் பயில பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். இது 1998-இல் உயிரி அறிவியலில் எம். எஸ் மற்றும் 2002-இல் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2] இவர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தில் சக ஊழியராகத் தனது முனைவர் பட்ட பின் ஆய்வினை முடித்தவுடன் பணியில் சேர்ந்தார். மேலும் 2004ஆம் ஆண்டில் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். ஒரு முதன்மை விஞ்ஞானியாக 2007 முதல் 2011 வரை பணியாற்றிய பிறகு, இவர் ஒரு மூத்த முதன்மை விஞ்ஞானியாகப் பதவியேற்றார்.[3] பீனா பிள்ளையின் ஆய்வகம் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஓர் ஆய்வகத்தின் தலைமை அறிவியலாளராகச் செயல்பட்டார்.[4] இதன் முதன்மை ஆய்வாளராக[5] இவர் பல ஆராய்ச்சிகளை வழி நடத்துகிறார்.

பிள்ளை, நரம்பியல் செயல்பாடு மற்றும் செயலிழப்பு, கிசுடோன் மாறுபாடுகளால் மாறுதல் செய்யப்பட்ட நரம்பியல் மரபணு வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மண்புழுவிலிருந்து நரம்பு மீளுருவாக்கம் காரணி ஆகியவற்றில் குறியீட்டு அல்லாத ஆர். என். ஏ. செயல் துறைகளில் கவனம் செலுத்தினார்.[6] இவர் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [7]{ அறிவியல் கட்டுரைகளின் இணையக் களஞ்சியமான ரிசர்ச்கேட் பிள்ளையின் ஆய்வுக் கட்டுரைகளில் 79-ஐ பட்டியலிட்டுள்ளது.[8]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

2008ஆம் ஆண்டில் படியெடுத்தல் பணிகளுக்காக[9]அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றார் பிள்ளை.[10] ஒரு வருடம் கழித்து, 2009ஆம் ஆண்டு இளம் விஞ்ஞானி பதக்கத்திற்காக இந்திய தேசிய அறிவியல் கழகம் இவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை இவருக்கு வாழ்க்கை மேம்பாட்டுக்கான தேசிய உயிர் அறிவியல் விருதை வழங்கியது. இது மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும். இது உயிரி அறிவியலில் இவருடைய பங்களிப்புகளுக்காக, 2017-18 ஆண்டில் வழங்கப்பட்டது.[12]

மேலும் காண்க[தொகு]

 * வரிக்குதிரை மீன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beena Pillai CV Jun 2015_Medium.pdf". Google Docs. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  2. "Beena Pillai - Beena Pillai's Lab". beena.rnabiology.org. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  3. "Alumni - Beena Pillai's Lab". beena.rnabiology.org. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  4. "Beena Pillai on Institute of Genomics and Integrative Biology (CSIR)". www.igib.res.in. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  5. "People - Beena Pillai's Lab". beena.rnabiology.org. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  6. "Research - Beena Pillai's Lab". beena.rnabiology.org. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  7. "Beena Pillai's research works - Institute of Genomics and Integrative Biology, Delhi (IGIB) and other places". ResearchGate (in ஆங்கிலம்). 2019-01-12. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
  8. "Beena Pillai - Google Scholar Citations". scholar.google.com. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  9. "CSIR Young Scientist Award for 2008 - Women in Science". www.ias.ac.in. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  10. "INSA :: AWARDS RECIPIENTS". www.insaindia.res.in. 2019-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  11. "HRDG CSIR". csirhrdg.res.in. 2019-01-14. Archived from the original on 9 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  12. "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2019. Archived from the original (PDF) on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனா_பிள்ளை&oldid=3908035" இலிருந்து மீள்விக்கப்பட்டது