இந்திய தேசிய அறிவியல் கழகம்
நிறுவப்பட்டது | 7 ஜனவரி 1935 |
---|---|
நிறுவனர் | லுயீஸ் லெய்க் ஃபெர்மொர் |
அமைவிடம் | |
தலைவ்ர் | அஜய் K. சூட் |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையம் |
இந்திய தேசிய அறிவியல் கழகம் (INSA)இந்தியாவின் புதுடில்லியில் உள்ளது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறைகள் சார்ந்த அனைத்து பிரிவுகளும் உள்ள்ன.[1]
வரலாறு[தொகு]
இந்திய தேசிய அறிவியல் கழகம் இந்தியாவில் அறிவியல் மற்றும் அதன் பயன்களை ஊக்குவிகின்றது. இக்கழகம் 1935 ம் ஆண்டு தேசிய அறிவியல் நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1970 ம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] 1945 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தியாவில் அறிவியலின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அறிவியல் சமுதாயமாக அங்கீகரித்தது. 1968 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்தியாவில் சர்வதேச அறிவியல் கழகத்தின் (ICSU) இணைந்த அமைப்பாக அது நியமிக்கப்பட்டது. இது புதுதில்லியை தலைமையிடமாக கொண்டுள்ளது.[2]
கண்ணோட்டம்[தொகு]
இக்கழகமானது அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. வேட்பாளர் பரிந்துரையின் முலம் மட்டுமே கழகத்தின் தேர்தல் நடைபெறுகின்றது. [3] தேசிய நலத்திட்டத்திற்கான விண்ணப்பம், விஞ்ஞானிகளின் நலன்களைப் பாதுகாத்தல், சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை உருவாக்குதல், தேசிய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு கருத்துரைகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவில் அறிவியலை மேம்படுத்துவது கழகத்தின் நோக்கமாகும்.
விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கும், அங்கீகரிப்பதற்கும், முக்கிய பங்காக கொண்டுள்ளது. 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' துறையில் சிறப்பான முன்னேற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், கழகம்மானது 59 விருதுகளை, 4 பிரிவுகளில் வழங்குகிறது, அவையாவன
- சர்வதேச விருதுகள்,
- பொது பதக்கம் & விரிவுரை விருதுகள்,
- துறைவாரியான பதக்கங்கள் / சொற்பொழிவுகள் மற்றும்
- இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள் .
2004 இல் [அறிவியல் மற்றும் மனித நேய அறிவியலுக்கான பெர்லின் பிரகடனம் கையெழுத்திட்டது [4]
தலைவர்கள்[தொகு]
கழகத்தின் தலைவர்கள் பட்டியல்.[5]
மேலும் காண்க[தொகு]
- Indian National Academy of Engineering
- National Academy of Sciences, India
- Indian Academy of Sciences
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Indian National Science Academy, New Delhi". Department of Science and Technology, India. 2016. October 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Indian National Science Academy (INSA)". Inter Academies. 2016. ஏப்ரல் 5, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 17, 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "About INSA". Indian National Science Academy. 2016. October 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Signatories". openaccess.mpg.de. 2016-04-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Past Presidents". Indian National Science Academy. 2016. October 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.